பெருமாள் பாடல்கள் | perumal songs lyrics in tamil

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | Kurai ondrum illai lyrics tamil
Kurai ondrum illai lyrics in tamil.

பல்லவி – ராகம்: சிவரஞ்சனி

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா …,

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா …,

அனுபல்லவி – ராகம்: சிவரஞ்சனி

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா …,

சரணம் 1 – ராகம் சிவரஞ்சனி

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா …,

சரணம் 2 – ராகம்: காபி

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா …,

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா …,

சரணம் 3 – ராகம்: சிந்துபைரவி

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா …,

யாரும் மறுக்காத மலையப்பா …,
யாரும் மறுக்காத மலையப்பா …,
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா …,
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா …,

The post குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | Kurai ondrum illai lyrics tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

108 divya desam names in tamil
108 திவ்ய தேசங்கள்

எண்

பெருமாள் – தாயார்

தலக்குறிப்புகள்

அமைவிடம்

1

அரங்கநாதர் அரங்கநாயகி

திருவரங்கம்

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.

2

அழகிய மணவாளன் – வாசலட்சுமி(நாச்சியார்)

திருக்கோழி,(உறையூர் பகுதி)

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது.

3

புருஷோத்தமன் – பூர்ணவல்லி

உத்தமர் கோயில்

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள

4

புண்டரீகாட்சன் – பங்கயச் செல்வி

திருவெள்ளறை

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.

5

வடிவழகியநம்பி – அழகியவல்லி

அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள, லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும்.

6

அப்பக்குடத்தான் – இந்திராதேவி (கமலவல்லி)

கோயிலடி

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது

7

ஹரசாபவிமோசனர் – கமலவல்லி

திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்

தஞ்சாவூர் ,  தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே அமைந்த திருக்கண்டியூர் கிராமத்தில் அமைந்த இப்பெருமாள் கோயில்

8

ஜகத்ரட்சகன் – பத்மாசானவல்லி

திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை)

கும்பகோணம் , தமிழ்நாடு

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில் என்ற திவ்ய தேசம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது.

9

கஜேந்திரவரதர் – ரமாமணிவல்லி

கபிஸ்தலம்

கும்பகோணம் , தமிழ்நாடு

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

10

வல்வில் ராமன் – பொற்றாமறையாள்

புள்ளபூதங்குடி

கும்பகோணம் , தமிழ்நாடு

திருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் .

11

ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகி

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது.

12

சாரங்கபாணி, ஆராவமுதன் – கோமளவல்லி

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம்

13

ஒப்பிலியிப்பன் – பூமிதேவி

ஒப்பிலியப்பன்

கும்பகோணம் , தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும்.

14

நறையூர்நம்பி – நம்பிக்கை நாச்சியார்

நாச்சியார்கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் பழைய பெயர் திருநறையூர் ஆகும்.

15

சாரநாதன் – சாரநாயகி

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில்.

16

ஜகந்நாதர் – செண்பகவல்லி

நாதன் கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது.

17

கோலவில்லி ராமர் – மரகதவல்லி

திருவெள்ளியங்குடி

கும்பகோணம் , தமிழ்நாடு

திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும்.

18

பக்தவத்சலன் – அபிஷேகவல்லி

திருக்கண்ணமங்கை

கும்பகோணம் , தமிழ்நாடு

பக்தவத்சலப்பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

19

சௌரிராஜன் – கண்ணபுரநாயகி

திருக்கண்ணபுரம்

சீர்காழி , தமிழ்நாடு

நீலமேகப்பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

20

லோகநாதன் – லோகநாயகி

திருக்கண்ணங்குடி

சீர்காழி , தமிழ்நாடு

லோகநாதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

21

சௌந்தர்யராஜன் – சௌந்தர்யவல்லி

நாகப்பட்டினம் (திருநாகை)

நாகப்பட்டினம் , தமிழ்நாடு

நாகப்பட்டினதில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம்.

22

நீலமேகம் – செங்கமலவல்லி

திருத்தஞ்சை மாமணிக் கோயில்

தஞ்சாவூர் , தமிழ்நாடு

திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள

23

ஆமருவியப்பன் – செங்கமலவல்லி

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்

குத்தாலம் , தமிழ்நாடு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள

24

அருள்மாகடல் – திருமாமகள்

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்

சீர்காழி , தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர்

25

நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார்

தலைச்சங்காடு

சீர்காழி , தமிழ்நாடு

இத்திருத்தலம் மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் உள்ளது.

26

பரிமளரங்கநாதர் – புண்டரீகவல்லி

திருஇந்தளூர்,மாயவரம்

மயிலாடுதுறை , தமிழ்நாடு

இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த திருஇந்தளூர் எனும் சிற்றூரில் உள்ளது.

27

தாடாளன் – லோகநாயகி

திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி

சீர்காழி , தமிழ்நாடு

இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது

28

கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்;

திருக்காவளம்பாடி

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரி

29

குடமாடுகூத்தர் – அம்ருதகடவல்லி

அரிமேய விண்ணகரம்

சீர்காழி , தமிழ்நாடு

திருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

30

புருஷோத்தமர் – புருஷோத்தமநாயகி

வண்புருடோத்தமம்

சீர்காழி , தமிழ்நாடு

திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

31

செம்பொன்னரங்கர் – சுவேதபுஷ்பவல்லி

செம்பொன் செய்கோயில்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது.

32

சாச்வததீபநாராயணர் – புண்டரீகவல்லி

திருமணிமாடக் கோயில்

சீர்காழி , தமிழ்நாடு

திருநாங்கூரில் அமைந்துள்ளது.

33

வைகுண்டநாதர் – வைகுண்டவல்லி

வைகுந்த விண்ணகரம்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

34

செங்கண்மால் – செங்கமலவல்லி

திருத்தெற்றியம்பலம்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது.

35

மணிக்கூடநாயகன் – திருமகள் நாச்சியார்

திருமணிக்கூடம்

சீர்காழி , தமிழ்நாடு

திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது.

36

தாமரைநாயகி – தாமரையாள் கேள்வன்

திருப்பார்த்தன் பள்ளி

சீர்காழி , தமிழ்நாடு

சீர்காழிக்கு அருகிலும் திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம்.

37

வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் – அமிர்தவல்லி

திருவாழி-திருநகரி கோயில்கள்

சீர்காழி , தமிழ்நாடு

மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும்

38

தேவநாயகர் – சமுத்ரதனயா

திருத்தேவனார்த் தொகை

சீர்காழி , தமிழ்நாடு

இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.

39

சீநிவாசன் – பத்மாவதி

திருவெள்ளக்குளம்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது.

40

கோவிந்தராஜர் – புண்டரீகவல்லி

திருச்சித்ரகூடம்,சிதம்பரம்

கடலூர் , தமிழ்நாடு

இக்கோயில் சிதம்பரம் நடராசர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள

41

தேவநாதன் – ஹேமாப்ஜவல்லி

திருவந்திபுரம்

கடலூர் , தமிழ்நாடு

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

42

திரிவிக்ரமன் – பூங்கோவல்நாச்சியார்

திருக்கோயிலூர்

கள்ளக்குறிச்சி , தமிழ்நாடு

திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

43

வரதராஜன் – பெருந்தேவி

திருக்கச்சி

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்

44

ஆதிகேசவன் – அலர்மேல்மங்கை

அட்டபுயக்கரம்

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

45

தீபப்பிரகாசர் – மரகதவல்லி

திருத்தண்கா(தூப்புல்)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது

46

முகுந்தநாயகன் – வேளுக்கைவல்லி

திருவேளுக்கை (அழகிய சிங்க பெருமாள் கோயில்)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

47

ஜகதீசப்பெருமாள் – நிலமங்கைவல்லி

திருநீரகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும்.

48

பாண்டவ தூதர் – ருக்மணி,சத்யபாமா

திருப்பாடகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

49

நிலாத்திங்கள்துண்டத்தான் – நேரொருவரில்லாவல்லி

நிலாத்திங்கள் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும்.

50

உலகளந்தபெருமாள் – அம்ருதவல்லி

திரு ஊரகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.

51

யதோத்தகாரி – கோமளவல்லி

திருவெக்கா (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

திருவெக்கா,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள

52

கருணாகரர் – பத்மாமணி

திருக்காரகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

53

கள்வர்பெருமாள் – கமலவல்லி

திருக்கார்வானம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கார்வானம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

54

ஆதிவராஹர் – அஞ்சிலைவல்லி

திருக்கள்வனூர் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும்.

55

பவளவண்ணப்பெருமாள் – பவளவல்லிநாச்சியார்

திருப்பவள வண்ணம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.

56

பரமபதநாதன் – வைகுந்தவல்லி

திருப்பரமேச்சுர விண்ணகரம்

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.[2][3]

57

விஜயராகவன் – மரகதவல்லி

திருப்புட்குழி

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை – வேலூர் சாலையில் அமைந்துள்ளது

58

பத்தவத்சலர் – சுதாவல்லி

திருநின்றவூர்

சென்னை , தமிழ்நாடு

.திருநின்றவூரில் அமைந்துள்ளது.

59

வைத்ய வீரராகவர் – கனகவல்லி

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

சென்னை , தமிழ்நாடு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.

60

பார்த்தசாரதி – ருக்மணி

திருவல்லிக்கேணி

சென்னை , தமிழ்நாடு

திருவல்லிக்கேணி

61

நீர்வண்ணபெருமாள் – அணிமாமலர்மங்கை

திருநீர்மலை

சென்னை , தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும்

62

நித்யகல்யாணர் – கோமளவல்லி

திருவிடவெந்தை

சென்னை , தமிழ்நாடு

இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது.

63

ஸ்தல சயனப்பெருமாள் – நிலமங்கை நாச்சியார்

திருக்கடல்மல்லை

சென்னை , தமிழ்நாடு

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை)

64

யோகநரசிம்மர் – அம்ருதவல்லி

திருக்கடிகை (சோளிங்கர்)

சென்னை , தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு குனிறின் மேல் இருக்கிறது.

65

காேதண்டராமர்  – சீதாபிராட்டி

திருவயோத்தி

உத்தரப் பிரதேசம்

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், அயோத்தி மாநகராட்சியும் உள்ளது.

66

தேவராஜன் – ஹரிலட்சுமி

நைமிசாரண்யம்

உத்தரப் பிரதேசம்

இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

67

பரமபுருஷன் – பரிமளவல்லி

திருப்பிரிதி

உத்தராகண்டம்

இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது.

68

நீலமேகம் – புண்டரீகவல்லி

தேவப்ரயாகை

உத்தராகண்டம்

இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

69

பத்ரீநாராயணனன் – அரவிந்தவல்லி

பத்ரிகாச்ரமம்

உத்தராகண்டம்

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது

70

ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவி

முக்திநாத்

நேபாளம்

நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

71

கோவர்த்தனகிரிதாரி – சத்யபாமா

வடமதுரை

உத்தரப் பிரதேசம்

இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது.

72

கரிகிருஷ்ணப் பெருமாள் – ருக்மணி, சத்யபாமா

ஆயர்பாடி

உத்தரப் பிரதேசம்

இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

73

கல்யாணநாராயணன் – கல்யாணநாச்சியார்

திருத்துவாரகை

குஜராத்

இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.

74

லட்சுமிநரசிம்மர் – செஞ்சுலட்சுமி

அகோபிலம் (சிங்கவேள்குன்றம்)

ஆந்திரம்

அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

75

திருவேங்கடமுடையான் – அலர்மேல்மங்கை

திருவேங்கடம்

ஆந்திரம்

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். திருப்பதி மாநகராட்சி இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில்

76

நாராயணன் – மலர்மங்கை நாச்சியார்

திருநாவாய்

திருச்சூர் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது.

77

உய்யவந்த பெருமாள் – வித்துவக்கோட்டுவல்லி

திருவித்துவக்கோடு

திருச்சூர் , கேரளா

இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

78

காட்கரையப்பன் – வாத்ஸல்யவல்லி

திருக்காட்கரை

கோட்டயம் , கேரளா

கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை (ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள

79

திருமூழிக்களத்தான் – மதுரவேணி

திருமூழிக்களம்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

80

கோலப்பிரான் – செல்வத்திருக்கொழுந்து

திருவல்லவாழ்

கோட்டயம் , கேரளா

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். இது திருவல்லா வட்டத்தின் தலைமையகமாக உள்ளது.

81

அற்புதநாராயணன் – கற்பகவல்லி நாச்சியார்

திருக்கடித்தானம்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது

82

இமையவரப்பன் – செங்கமலவல்லி

திருச்செங்குன்றூர்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது

83

மாயப்பிரான் – பொற்கொடிநாச்சியார்

திருப்புலியூர்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.

84

திருக்குறளப்பன் – பத்மாசனி

திருவாறன்விளை

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

85

பாம்பணையப்பன் – கமலவல்லி

திருவண்வண்டூர்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் திருவண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது

86

அனந்தபத்மநாபன் – ஸ்ரீஹரிலட்சுமி

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

திருவனந்தபுரம், கேரளா

இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது.

87

ஆதிகேசவன் – மரகதவல்லி

திருவட்டாறு

கன்னியாகுமரி , தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும்.

88

கமலவல்லி – திருக்குறளப்பன்

திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)

கன்னியாகுமரி , தமிழ்நாடு

இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது.

89

வைஷ்ணவ நம்பி – குறுங்குடிவல்லி

திருக்குறுங்குடி

திருநெல்வேலி , தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

90

தோத்தாத்ரி நாதர் – சிரீவரமங்கை

வானமாமலை

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது

91

கள்ளப்பிரான் – வைகுந்தவல்லி

ஸ்ரீவைகுண்டம்நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.

92

விஜயாசனர் – வரகுணவல்லி

திருவரகுணமங்கை (நத்தம்)நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.

93

காய்ச்சினவேந்தன் – மலர்மகள்

திருப்புளிங்குடிநவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.

94

அரவிந்தலோசநர் – விசாலக்ருஷ்ணாக்ஷி

திருத்துலைவில்லி மங்கலம்இரட்டைத் திருப்பதி நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

95

மாயக்கூத்தர் – குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)

திருக்குளந்தைநவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

96

வைத்தமாநிதி – கோளூர்வல்லி

திருக்கோளூர் நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

97

மகரநெடுங்குழைக்காதர் – குழைக்காதுவல்லி நாச்சியார்

திருப்பேரைநவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது.

98

ஆதிநாதர் – ஆதிநாதவல்லி

ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது.

99

வடபத்ரசாயி – ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர்

மதுரை , தமிழ்நாடு

திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள

100

தண்காலப்பன் – அன்னநாயகி

திருத்தண்கால்

மதுரை , தமிழ்நாடு

இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

101

கூடலழகர் – மதுரவல்லி

கூடல் அழகர் கோயில்

மதுரை , தமிழ்நாடு

தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.

102

அழகர் – சுந்தரவல்லி

திருமாலிருஞ்சோலை

மதுரை , தமிழ்நாடு

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும்.

103

காளமேகம் – மோகனவல்லி

திருமோகூர்

மதுரை , தமிழ்நாடு

மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.

104

சௌம்யநாராயணர் – மகாலட்சுமி

திருக்கோஷ்டியூர்

சிவகங்கை , தமிழ்நாடு

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த

105

கல்யாணஜகந்நாதர் – கல்யாணவல்லி

திருப்புல்லாணி

இராமநாதபுரம் , தமிழ்நாடு

இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது.

106

சத்யகிரிநாதன் – உஜ்ஜீவன நாச்சியார்

திருமெய்யம்

புதுக்கோட்டை , தமிழ்நாடு

புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட 20கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது

107

பிரசன்ன வெங்கடேச பெருமாள் – கடலமகள் நாச்சியார்

திருப்பாற்கடல்

வானுலகம்

திருப்பாற்கடல்

108

பரமபதநாதர் – பெரியபிராட்டியார்

பரமபதம்

வானுலகம்

வைகுண்டம்

The post 108 divya desam names in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

திருப்பாவை பாடல் வரிகள்|Thiruppavai lyrics in tamil
திருப்பாவை

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய திருப்பாவை மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருத்தல் <meta http-equiv="content-type" content="text/html; charset=utf-8">ஒரு பகுதியாக இது பாடப்படுகிறது மார்கழி மாதத்தில் பாடலை பாடுவது மிக சிறப்பானது

Thiruppavai lyrics in tamil

மார்கழித் திங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

ஓங்கி உலகளந்த

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

ஆழிமழைக் கண்ணா

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

மாயனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

புள்ளும் சிலம்பின காண்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கீசுகீசு என்றும்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

கீழ்வானம் வெள்ளென்று

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.

தூமணி மாடத்து

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

கனைத்திளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

புள்ளின் வாய் கீண்டானைப்

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

எல்லே இளம்கிளியே

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

அம்பரமே தண்ணீரே

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

உந்துமத களிற்றன்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

குத்து விளக்கெரிய - குத்து விளக்கு எரிய

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

முப்பத்து மூவர்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

ஏற்ற கலங்கள்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

அங்கண்மா ஞாலத்து

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

மாரி முலை முழஞ்சில்

மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

அன்று இவ்வுலகமளந்தாய்

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்

ஒருத்தி மகனாய்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாலே! மணிவண்ணா

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

கூடாரை வெல்லும்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

கறவைகள் பின்சென்று

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

சிற்றஞ் சிறுகாலே

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

வங்கக் கடல் கடைந்த

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

The post திருப்பாவை பாடல் வரிகள்|Thiruppavai lyrics in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.