கோவில்கள்சமயங்கள்வைணவம்

108 divya desam names in tamil

108 திவ்ய தேசங்கள்

எண்பெருமாள் – தாயார்தலக்குறிப்புகள்அமைவிடம்
1அரங்கநாதர் அரங்கநாயகிதிருவரங்கம்திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.
2அழகிய மணவாளன் – வாசலட்சுமி(நாச்சியார்)திருக்கோழி,(உறையூர் பகுதி)திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. 
3புருஷோத்தமன் – பூர்ணவல்லிஉத்தமர் கோயில்திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள
4புண்டரீகாட்சன் – பங்கயச் செல்விதிருவெள்ளறைதிருச்சிராப்பள்ளி , தமிழ்நாடுஇத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.
5வடிவழகியநம்பி – அழகியவல்லிஅன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள, லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும்.
6அப்பக்குடத்தான் – இந்திராதேவி (கமலவல்லி)கோயிலடிதிருச்சிராப்பள்ளி , தமிழ்நாடுதஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது
7ஹரசாபவிமோசனர் – கமலவல்லிதிருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்தஞ்சாவூர் , தமிழ்நாடுதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே அமைந்த திருக்கண்டியூர் கிராமத்தில் அமைந்த இப்பெருமாள் கோயில்
8ஜகத்ரட்சகன் – பத்மாசானவல்லிதிருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை)கும்பகோணம் , தமிழ்நாடுதிருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில் என்ற திவ்ய தேசம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது.
9கஜேந்திரவரதர் – ரமாமணிவல்லிகபிஸ்தலம்கும்பகோணம் , தமிழ்நாடுகஜேந்திர வரதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். 
10வல்வில் ராமன் – பொற்றாமறையாள்புள்ளபூதங்குடிகும்பகோணம் , தமிழ்நாடுதிருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் .
11ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகிஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்கும்பகோணம் , தமிழ்நாடுஇக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது.
12சாரங்கபாணி, ஆராவமுதன் – கோமளவல்லிகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்கும்பகோணம் , தமிழ்நாடுசாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம்
13ஒப்பிலியிப்பன் – பூமிதேவிஒப்பிலியப்பன்கும்பகோணம் , தமிழ்நாடுதமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும்.
14நறையூர்நம்பி – நம்பிக்கை நாச்சியார்நாச்சியார்கோயில்கும்பகோணம் , தமிழ்நாடுதமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் பழைய பெயர் திருநறையூர் ஆகும்.
15சாரநாதன் – சாரநாயகிதிருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்கும்பகோணம் , தமிழ்நாடுசாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 
16ஜகந்நாதர் – செண்பகவல்லிநாதன் கோயில்கும்பகோணம் , தமிழ்நாடு இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது.
17கோலவில்லி ராமர் – மரகதவல்லிதிருவெள்ளியங்குடிகும்பகோணம் , தமிழ்நாடுதிருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். 
18பக்தவத்சலன் – அபிஷேகவல்லிதிருக்கண்ணமங்கைகும்பகோணம் , தமிழ்நாடுபக்தவத்சலப்பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.
19சௌரிராஜன் – கண்ணபுரநாயகிதிருக்கண்ணபுரம்சீர்காழி , தமிழ்நாடுநீலமேகப்பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.
20லோகநாதன் – லோகநாயகிதிருக்கண்ணங்குடிசீர்காழி , தமிழ்நாடுலோகநாதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். 
21சௌந்தர்யராஜன் – சௌந்தர்யவல்லிநாகப்பட்டினம் (திருநாகை)நாகப்பட்டினம் , தமிழ்நாடுநாகப்பட்டினதில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம்.
22நீலமேகம் – செங்கமலவல்லிதிருத்தஞ்சை மாமணிக் கோயில்தஞ்சாவூர் , தமிழ்நாடுதிருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள
23ஆமருவியப்பன் – செங்கமலவல்லிதேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்குத்தாலம் , தமிழ்நாடுநாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள
24அருள்மாகடல் – திருமாமகள்திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்சீர்காழி , தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் 
25நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார்தலைச்சங்காடுசீர்காழி , தமிழ்நாடுஇத்திருத்தலம் மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் உள்ளது.
26பரிமளரங்கநாதர் – புண்டரீகவல்லிதிருஇந்தளூர்,மாயவரம்மயிலாடுதுறை , தமிழ்நாடுஇக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த திருஇந்தளூர் எனும் சிற்றூரில் உள்ளது.
27தாடாளன் – லோகநாயகிதிருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழிசீர்காழி , தமிழ்நாடுஇத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது
28கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்;திருக்காவளம்பாடிசீர்காழி , தமிழ்நாடுஇத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரி
29குடமாடுகூத்தர் – அம்ருதகடவல்லிஅரிமேய விண்ணகரம்சீர்காழி , தமிழ்நாடுதிருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.
30புருஷோத்தமர் – புருஷோத்தமநாயகிவண்புருடோத்தமம்சீர்காழி , தமிழ்நாடுதிருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.
31செம்பொன்னரங்கர் – சுவேதபுஷ்பவல்லிசெம்பொன் செய்கோயில்சீர்காழி , தமிழ்நாடுஇத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது.
32சாச்வததீபநாராயணர் – புண்டரீகவல்லிதிருமணிமாடக் கோயில்சீர்காழி , தமிழ்நாடுதிருநாங்கூரில் அமைந்துள்ளது.
33வைகுண்டநாதர் – வைகுண்டவல்லிவைகுந்த விண்ணகரம்சீர்காழி , தமிழ்நாடுஇத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. 
34செங்கண்மால் – செங்கமலவல்லிதிருத்தெற்றியம்பலம்சீர்காழி , தமிழ்நாடுஇத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது.
35மணிக்கூடநாயகன் – திருமகள் நாச்சியார்திருமணிக்கூடம்சீர்காழி , தமிழ்நாடுதிருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது.
36தாமரைநாயகி – தாமரையாள் கேள்வன்திருப்பார்த்தன் பள்ளிசீர்காழி , தமிழ்நாடுசீர்காழிக்கு அருகிலும் திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம். 
37வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் – அமிர்தவல்லிதிருவாழி-திருநகரி கோயில்கள்சீர்காழி , தமிழ்நாடுமயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும்
38தேவநாயகர் – சமுத்ரதனயாதிருத்தேவனார்த் தொகைசீர்காழி , தமிழ்நாடுஇதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. 
39சீநிவாசன் – பத்மாவதிதிருவெள்ளக்குளம்சீர்காழி , தமிழ்நாடுஇத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது.
40கோவிந்தராஜர் – புண்டரீகவல்லிதிருச்சித்ரகூடம்,சிதம்பரம்கடலூர் , தமிழ்நாடுஇக்கோயில் சிதம்பரம் நடராசர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள 
41தேவநாதன் – ஹேமாப்ஜவல்லிதிருவந்திபுரம்கடலூர் , தமிழ்நாடு கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
42திரிவிக்ரமன் – பூங்கோவல்நாச்சியார்திருக்கோயிலூர்கள்ளக்குறிச்சி , தமிழ்நாடு திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
43வரதராஜன் – பெருந்தேவிதிருக்கச்சிகாஞ்சிபுரம் , தமிழ்நாடுசென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்
44ஆதிகேசவன் – அலர்மேல்மங்கைஅட்டபுயக்கரம்காஞ்சிபுரம் , தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
45தீபப்பிரகாசர் – மரகதவல்லிதிருத்தண்கா(தூப்புல்)காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது
46முகுந்தநாயகன் – வேளுக்கைவல்லிதிருவேளுக்கை (அழகிய சிங்க பெருமாள் கோயில்)காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
47ஜகதீசப்பெருமாள் – நிலமங்கைவல்லிதிருநீரகம் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும்.
48பாண்டவ தூதர் – ருக்மணி,சத்யபாமாதிருப்பாடகம் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. 
49நிலாத்திங்கள்துண்டத்தான் – நேரொருவரில்லாவல்லிநிலாத்திங்கள் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும். 
50உலகளந்தபெருமாள் – அம்ருதவல்லிதிரு ஊரகம் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
51யதோத்தகாரி – கோமளவல்லிதிருவெக்கா (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடுதிருவெக்கா,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள
52கருணாகரர் – பத்மாமணிதிருக்காரகம் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடுதிருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. 
53கள்வர்பெருமாள் – கமலவல்லிதிருக்கார்வானம் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கார்வானம் எனும் ஊரில் அமைந்துள்ளது. 
54ஆதிவராஹர் – அஞ்சிலைவல்லிதிருக்கள்வனூர் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும்.
55பவளவண்ணப்பெருமாள் – பவளவல்லிநாச்சியார்திருப்பவள வண்ணம் (காஞ்சி)காஞ்சிபுரம் , தமிழ்நாடு இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.
56பரமபதநாதன் – வைகுந்தவல்லிதிருப்பரமேச்சுர விண்ணகரம்காஞ்சிபுரம் , தமிழ்நாடுஇத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.[2][3]
57விஜயராகவன் – மரகதவல்லிதிருப்புட்குழிகாஞ்சிபுரம் , தமிழ்நாடுஇத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை – வேலூர் சாலையில் அமைந்துள்ளது
58பத்தவத்சலர் – சுதாவல்லிதிருநின்றவூர்சென்னை , தமிழ்நாடு.திருநின்றவூரில் அமைந்துள்ளது. 
59வைத்ய வீரராகவர் – கனகவல்லிதிருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்சென்னை , தமிழ்நாடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.
60பார்த்தசாரதி – ருக்மணிதிருவல்லிக்கேணிசென்னை , தமிழ்நாடுதிருவல்லிக்கேணி
61நீர்வண்ணபெருமாள் – அணிமாமலர்மங்கைதிருநீர்மலைசென்னை , தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும்
62நித்யகல்யாணர் – கோமளவல்லிதிருவிடவெந்தைசென்னை , தமிழ்நாடுஇது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. 
63ஸ்தல சயனப்பெருமாள் – நிலமங்கை நாச்சியார்திருக்கடல்மல்லைசென்னை , தமிழ்நாடு மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை)
64யோகநரசிம்மர் – அம்ருதவல்லிதிருக்கடிகை (சோளிங்கர்)சென்னை , தமிழ்நாடுதமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு குனிறின் மேல் இருக்கிறது. 
65காேதண்டராமர் – சீதாபிராட்டிதிருவயோத்திஉத்தரப் பிரதேசம்இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், அயோத்தி மாநகராட்சியும் உள்ளது. 
66தேவராஜன் – ஹரிலட்சுமிநைமிசாரண்யம்உத்தரப் பிரதேசம்இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
67பரமபுருஷன் – பரிமளவல்லிதிருப்பிரிதிஉத்தராகண்டம்இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. 
68நீலமேகம் – புண்டரீகவல்லிதேவப்ரயாகைஉத்தராகண்டம்இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
69பத்ரீநாராயணனன் – அரவிந்தவல்லிபத்ரிகாச்ரமம்உத்தராகண்டம் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
70ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவிமுக்திநாத்நேபாளம் நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.
71கோவர்த்தனகிரிதாரி – சத்யபாமாவடமதுரைஉத்தரப் பிரதேசம்இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது.
72கரிகிருஷ்ணப் பெருமாள் – ருக்மணி, சத்யபாமாஆயர்பாடிஉத்தரப் பிரதேசம்இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.
73கல்யாணநாராயணன் – கல்யாணநாச்சியார்திருத்துவாரகைகுஜராத்இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.
74லட்சுமிநரசிம்மர் – செஞ்சுலட்சுமிஅகோபிலம் (சிங்கவேள்குன்றம்)ஆந்திரம்அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
75திருவேங்கடமுடையான் – அலர்மேல்மங்கைதிருவேங்கடம்ஆந்திரம் ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். திருப்பதி மாநகராட்சி இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில்
76நாராயணன் – மலர்மங்கை நாச்சியார்திருநாவாய்திருச்சூர் , கேரளாஇத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது.
77உய்யவந்த பெருமாள் – வித்துவக்கோட்டுவல்லிதிருவித்துவக்கோடுதிருச்சூர் , கேரளாஇத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
78காட்கரையப்பன் – வாத்ஸல்யவல்லிதிருக்காட்கரைகோட்டயம் , கேரளா கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை (ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள
79திருமூழிக்களத்தான் – மதுரவேணிதிருமூழிக்களம்கோட்டயம் , கேரளாஇத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
80கோலப்பிரான் – செல்வத்திருக்கொழுந்துதிருவல்லவாழ்கோட்டயம் , கேரளா கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். இது திருவல்லா வட்டத்தின் தலைமையகமாக உள்ளது.
81அற்புதநாராயணன் – கற்பகவல்லி நாச்சியார்திருக்கடித்தானம்கோட்டயம் , கேரளாஇத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது
82இமையவரப்பன் – செங்கமலவல்லிதிருச்செங்குன்றூர்கோட்டயம் , கேரளாஇத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது
83மாயப்பிரான் – பொற்கொடிநாச்சியார்திருப்புலியூர்கோட்டயம் , கேரளாஇத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.
84திருக்குறளப்பன் – பத்மாசனிதிருவாறன்விளைகோட்டயம் , கேரளாஇத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
85பாம்பணையப்பன் – கமலவல்லிதிருவண்வண்டூர்கோட்டயம் , கேரளா இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் திருவண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது
86அனந்தபத்மநாபன் – ஸ்ரீஹரிலட்சுமிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்திருவனந்தபுரம், கேரளாஇக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. 
87ஆதிகேசவன் – மரகதவல்லிதிருவட்டாறுகன்னியாகுமரி , தமிழ்நாடுதமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். 
88கமலவல்லி – திருக்குறளப்பன்திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)கன்னியாகுமரி , தமிழ்நாடுஇத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. 
89வைஷ்ணவ நம்பி – குறுங்குடிவல்லிதிருக்குறுங்குடி திருநெல்வேலி , தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. 
90தோத்தாத்ரி நாதர் – சிரீவரமங்கைவானமாமலை திருநெல்வேலி , தமிழ்நாடுஇத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது
91கள்ளப்பிரான் – வைகுந்தவல்லிஸ்ரீவைகுண்டம்நவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடுஇந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.
92விஜயாசனர் – வரகுணவல்லிதிருவரகுணமங்கை (நத்தம்)நவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடுஇத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. 
93காய்ச்சினவேந்தன் – மலர்மகள்திருப்புளிங்குடிநவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடுஇத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. 
94அரவிந்தலோசநர் – விசாலக்ருஷ்ணாக்ஷிதிருத்துலைவில்லி மங்கலம்இரட்டைத் திருப்பதி நவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடுதூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
95மாயக்கூத்தர் – குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)திருக்குளந்தைநவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடுதிருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
96வைத்தமாநிதி – கோளூர்வல்லிதிருக்கோளூர் நவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடுஇத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. 
97மகரநெடுங்குழைக்காதர் – குழைக்காதுவல்லி நாச்சியார்திருப்பேரைநவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடு இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. 
98ஆதிநாதர் – ஆதிநாதவல்லிஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்நவதிருப்பதி திருநெல்வேலி , தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது.
99வடபத்ரசாயி – ஆண்டாள்ஸ்ரீவில்லிபுத்தூர்மதுரை , தமிழ்நாடு திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 
100தண்காலப்பன் – அன்னநாயகிதிருத்தண்கால்மதுரை , தமிழ்நாடுஇத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
101கூடலழகர் – மதுரவல்லிகூடல் அழகர் கோயில்மதுரை , தமிழ்நாடுதமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.
102அழகர் – சுந்தரவல்லிதிருமாலிருஞ்சோலைமதுரை , தமிழ்நாடுமதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும்.
103காளமேகம் – மோகனவல்லிதிருமோகூர்மதுரை , தமிழ்நாடு மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.
104சௌம்யநாராயணர் – மகாலட்சுமிதிருக்கோஷ்டியூர்சிவகங்கை , தமிழ்நாடு தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த
105கல்யாணஜகந்நாதர் – கல்யாணவல்லிதிருப்புல்லாணிஇராமநாதபுரம் , தமிழ்நாடு இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது.
106சத்யகிரிநாதன் – உஜ்ஜீவன நாச்சியார்திருமெய்யம்புதுக்கோட்டை , தமிழ்நாடு புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட 20கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது
107பிரசன்ன வெங்கடேச பெருமாள் – கடலமகள் நாச்சியார்திருப்பாற்கடல்வானுலகம்திருப்பாற்கடல்
108பரமபதநாதர் – பெரியபிராட்டியார்பரமபதம்வானுலகம்வைகுண்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *