அம்மன் பாடல்கள்பக்தி பாடல்கள்

மங்கள ரூபிணி பாடல் வரிகள் | Mangala roopini lyrics tamil

Mangala Roobini lyrics in tamil

ஸ்ரீ துக்க நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் – Mangala Roopini lyrics tamil பாடளை வாசித்து அம்மனின் அருளை பெறுவோம்.

துர்கா தேவி சரணம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே:
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே:
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 1

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்:
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்:
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 2

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே:
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே:
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 3

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்:
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்:
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 4

பஞ்சமி பைரவி பர்வத புத்திரிபஞ்சநல் பாணியளே:
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே:
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 5

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே:
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்:
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 6

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்:
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்:
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 7

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி:
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி:
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி:
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (துர்கா தேவி சரணம்) 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *