தேவாரம் பாடல் வரிகளை 276 பாடல் பெற்ற ஸ்தலம் பெயர் மூலம் தேடி தேவாரம் பாடல் வரிகளை pdf-ல் பதிவிறக்கம் செய்யவும்.
"தேவாரம்" என்னும் சொல்லைத் " தேவ + ஆரம் " எனப் பிரித்து, இறைவனுக்கு மாலை ஆயது என்று ஒருசிலர் பொருள் கூறுகின்றனர். இது அத்துனை பொருந்துமாறு இல்லை.'' தே + வாரம் '' எனப் பிரித்துப் பொருள் கொள்வதே பல்லாற்றனும் பொருந்துவதாக உள்ளது. தே என்பது. தெய்வம் என்னும் பொருளைக் குறித்து வழங்கும் ஓரெழுத்து ஒரு மொழியாகும். 'வாரம் ' என்பது, இசையின் கூறுபாட்டினைக் குறித்து வழங்கும் தமிழ்ச்சொல், சொல் ஒழுக்கமும் இசை ஒழுக்கமும் பொருந்திய பாடல் 'வாரம்' எனப்படும். வாரம் பாடுதல்' என்பது, இசைப் பாடலால், சுடவுளைப் போற்றி வழிபடுதல் என்ற பொருளில் கடைச்சங்க காலத்தே வழங்கி வத்ததாகத் தெரிகிறது.
11,12-ஆம் நூற்றண்டுகளில் வரையப் பெற்ற சோழ வேந்தர் கல்வெட்டுக்களில், 'தேவாரம்' என்ற சொல், வழிபாடு என்ற பொருளில் வழங்கப் பெற்றுள்ளது.மூவர் அருளிச் செய்த நூல்களையும் "தேவாரம்'' என்னும் முதன் முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கியவர், சைவ எல்லப்ப நாவலர் ஆவார். அதற்கு முன்பு, சம்பந்தர் பதிகங்ளைத் "திருக்கடைக்காப்பு " என்றும், அப்பர் பதிகங்கள மட்டும் "தேவாரம்" என்றும், சுந்தரர் திருப்பாட்டு பதிங்க என்றும் கூறும் வழக்கம் இருந்திருக்கிறது. நம்பியாண்டார்நம்பியின் காலத்திற்குப் பின்பு தான், திருமுறை என்னும் சொல்லாட்சி திருவாசகம் முதலிய எனைய நூல்களுக்கும் உரியதாய் வழங்கப்பெற்றது.
Thirunavukkarasar thevaram lyrics in tamil pdf download. Appar Thevaram(Thirunavugarasar Thevaram)about god Siva. திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரப் பாடல்கள் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். நான்காம் திருமுறை, ஐந்தாம் திருமுறை, ஆறாம் திருமுறை.
Click here >>Thirugnana sambanthar thevaram lyrics in tamil pdf download. thirugnanasambanthar Thevaram about god Siva. திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரப் பாடல்கள் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். முதல் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை.
Click here >>sundarar thevaram lyrics in tamil pdf download. sundarar Thevaram about god Siva. சுந்தரர் அருளிச் செய்த தேவாரப் பாடல்கள் - ஏழாம் திருமுறை பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click here >>