sivan temples in tamilnadu
பஞ்சபூதத் தலங்கள்
அண்ணா மலையரையும் ஆரூர்த் தியாகரையும்
கண்ணாள காளத்தி நாதரையும் ஒண்ணான
சிற்றம் பலவரையும் தென்னானைக் காவரையும்
நித்தம் பலகால் நினை.
1.நிலம் (பிருதிவி) காஞ்சிபுரம் (அ) திருஆரூர்
2.நீர் (அப்பு) திருவானைக்கா
3.தீ (தேயு) திருவண்ணாமலை
4.காற்று (வாயு) திருக்காளத்தி
5.ஆகாயம் (விசும்பு) சிதம்பரம்
பஞ்ச சபைகள்
- இரத்தினசபை திருவாலங்காடு
- கனகசபை (பொன்னம்பலம்) சிதம்பரம்
- ராஜசபை (வெள்ளியம்பலம்) மதுரை
- தாமிர சபை திருநெல்வேலி
- சித்திரசபை திருக்குற்றாலம்.
தாண்டவச் சிறப்புத் தலங்கள்
- ஆனந்தத் தாண்டவம் - தில்லை
- அசபா தாண்டவம் - திருஆகுர்
- ஞானசுந்தரத் தாண்டவம் - மதுரை நடராஜர் கால் மாறி ஆடிய தலம் : மதுரை
- ஊர்த்துவ தாண்டவம் - புக்கொளியூர்
- பிரம்ம தாண்டவம் - திருமுருகன் பூண்டி
தட்சிண கைலாசம்
- திருக்காளத்தி, 2. திருச்சி. 3. திரிகோணமலை (இலங்கை)
முன்னர் வீழ்த்திடு சிகரிகா எத்தியா மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையெனும் பிறங்கல்
அன்ன தின்பிற சுமைந்தது கோணமா வசலம்
இன்ன மூன்றையும் தக்ஷிண கயிலையென் றிசைப்பர்
(செவந்திப் புராணம்)
பூலோக கைலாசம்
- திருவையாறு.
- திருக்குற்றாலம்,
- சிதம்பரம்
மயானங்கள்
- கச்சி மயானம், 2. கடவூர் மயானம், 3.நல்லூர் மயானம்
ஏழு திருமுறைகளிலும் பாடல் பெற்ற தலங்கள்
1.திருமறைக்காடு (வேதாரண்யம்), 2. காஞ்சிபுரம், 3. திருவாரூர்
முத்தி அளிக்கும் தலங்கள்
- திருஆரூர்- பிறக்க முத்தி தருவது
- சிதம்பரம் - தரிசிக்க முத்தி தருவது
- திருவண்ணாமலை - நினைக்க முந்தி தருவது
- காசி - இறக்க முத்தி தருவது
தெரிசனம் செயத்தில்லையிற் கமலையில் செனிக்க
மரணமாய்விடக் கங்கைசூழ் வாரணாசியிலே
அருணை மாநகர் நினைத்திட முத்தியஞ் செழுத்தும்
பிரணவத் தொடெப் பேர்களு முரைக்கிலும் பெறலாம்.
ஆதிசேடன் பூசித்த தலங்கள்
- திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்,
- திருநாகேச்சுரம்.
- திருப்பாம்புரம்
- திருநாகைக்காரோணம்
அழகிற் சிறந்த கோயில்கள்
1.தேரழகு திருவாரூர்
2.வீதி அழகு திருஇடை மருதூர்
3.மதிலழகு திரிவிரிஞ்சை
4.விளக்கழகு வேதாரண்யம்
அம்பிகையின் ஆட்சித் தலங்கள்
- காஞ்சி - காமாட்சி
- மதுரை மீனாட்சி
- காசி விசாலாட்சி
- நாகை - நீலாயதாட்சி
சிவராத்திரி விசேடத் தலங்கள்
- கச்சி ஏகம்பம்,
- திருக்காளத்தி,
- கோகர்ணம்,
- திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
- திருவைகாவூர்
காசிக்கு நேர் தலங்கள்
- திருவெண்காடு
- திருவையாறு
- மயிலாடுதுறை
- திருவிடைமருதூர்
- திருச்சாய்க்காடு
- திருவாஞ்சியம்
நந்தி சிறப்புத் தலங்கள்
- நந்தி சங்கம தலம : கூடலையாற்றூர் திருநணா (பவாநிகூடல்)
- நந்தி விலகியிருந்த தலங்கள் : பட்டீச்சுரம், திருப்புன்கூர் திருப்பூந்துருத்தி
- நந்திக்குக் கொம்பு ஓடிந்த தலம்: திருவெண்பாக்கம்
- நந்திதேவர் தின்ற திருக்கோலம் திருமாற்பேறு
- நந்தி தேவருக்குத் திருமணம் நடந்த தலம் : திருமழபாடி
கருவரையில் அம்மையப்பர் திருஉருவம் கொண்ட தலங்கள்
- திருநெல்வாயில்,
- திருஅம்பர் பெருந்திருக்கோயில்
- திருஇடும்பாவனம்
- திருமறைக்காடு
- திருக்கச்சி ஏகம்பம்,
- திருவேற்காடு
- திருவீழிமிழலை
சிறப்பு வழிபாட்டுத் தலங்கள்
- திருக்குற்றாலம் திருவனந்தல்,
- இராமேச்சுரம் காலைப் பூசை
- திருஆனைக்கா மத்தியான பூசை
- திருஆரூர் சாயங்காலப் பூசை
- மதுரை இராக்காலப் பூசை
- சிதம்பரம் அர்த்தசாமப் பூசை
ஏழு விடங்கத் தலங்கள்
- திருஆரூர் - வீதிவிடங்கர் - அசபா நடனம்
- திருநள்ளாறு - நகர (நக) விடங்கர் - உன்மத்த நடனம்
- திருநாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர் - வீறு நடனம்
- திருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குடநடனம்
- திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம்
- திருவாய்மூர் - நிலவிடங்கர் - கமல நடனம்
- திருமறைக்காடு - புவனிவிடங்கர் - கம்சபாத நடனம்
கிரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு, காறாயில் - பேரான
ஒத்து திருவாய்மூர் உவந்ததிருக் கோளிலி
சத்த விடங்கத் தலம்.
ஏழூர் விழாத் தலங்கள்
- திருவையாறு.
- திருப்பழனம்.
- திருச்சோற்றுத்துறை
- திருவேதிகுடி
- திருக்கண்டியூர்,
- திருப்பூந்துருத்தி,
- திருநெய்த்தானம்
நெய்த்தானம் பூத்துருத்தி நேர்கண்டி, வேதிகுடி.
துய்த்தார்சேர் சோற்றுத் துறைபழனம் மெய்த்தான
மான திரு வையா றதனோ டெழுதலங்கள்
மானதிரு மத்தன் மனை
முருகன் சந்நதி விசேடத் தலங்கள்
1.கச்சி (குமரக்கோட்டம்),
2.கீழ்வேளூர்,
3.கொடிமாடச் செங்குன்றூர்.
4.கொடுங்குன்றம்,
5.சிக்கல்,
6.திருப்பரங்குன்றம்,
7.புள்ளிருக்கு வேளூர்
அட்ட வீரட்டத் தலங்கள்
- திருக்கண்டியூர் - பிரம்மன் சிரம் கொய்தது
- திருக்கோவிலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
- திருஅதிகை- திரிபுரத்தை எரித்தது
- திருப்பறியலூர் - தக்கன் சிரங்கொய்தது
- திருவிற்குடி - சலந்தராசுரனைச் சங்கரித்தது
- வழுவூர் (வைப்புத்தலம்) - யானையை உரித்தது
- திருக்கடவூர் - காமனை எரித்தது
- திருக்கடவூர் - யமனை உதைத்தது
பூமன் சிரங்கண்டி. அந்தகன் கோவல், புரம் அதிகை
மாமன்பறியல், சலந்தரன்விற் குடி. மா வழுவூர்
காமன் குறுக்கை, யமன் கடவூர், இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும், திங்களும் குடிதன் சேவகமே.
பன்னிரு சோதிலிங்கத் தலங்கள்
- கேதாரம் (இமயம்) - கேதாரேசுவரர்
- சோமநாதம் (குசராத்) - கேதாரேசுவரர்
- மகாகாளேசம் (உச்சைனி) - மகாகாளேசுவரர்
- விசுவநாதம் (காசி) - விசுவநாதேசுவரர்
- வைத்தியநாதம் (மகாராட்டிரம்) - வைத்தியநாதேசுவரர்
- பீமநாதம் (மகாராட்டிரம்) - பீமநாதேசுவரர்
- நாகேசுவரம் (மகாராட்டிரம்) - நாகநாதேசுவரர்
- ஓங்காரேசுவரம் (மத்தியபிரதேசம்) - ஓங்காரேசுவரர்
- திரயம்பகம் (மகாராட்டிரம்) - த்ரயம்பகேசுவரர்
- குகமேசம் (மகாராட்டிரம்) - குசுருணேச்சுவரர்
- மல்லிகார்களம் - ஸ்சைலம் (ஆந்திரம்) மல்லிகார்ச்சுளம்
- இராமநாதம் (இராமேசுவரம்) - இராமநாதேசுவரர்
திருமால் சந்ததி உள்ள சிவாலயங்கள்
- திருவோத்தூர் ஆதிகேசவப் பெருமாள்
- கச்சி ஏகம்பம் நிலாத்துண்டப் பெருமாள்
- கொடிமாடச் செங்குன்றூர் ஆதிகேசவப் பெருமாள்
- சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள்
- சிக்கல் கோலவாமனப் பெருமாள்
- திருநணா ஆதிகேசவப் பெருமாள்
- திருநாவலூர் வரதராசப்பெருமாள்
- திருநெல்வேலி நெல்லை கோவிந்தர்
- திருப்பழனம் கோவிந்தர்
- பாண்டிக் கொடுமுடி அரங்கநாதர்
- திருப்பத்தூர் அரங்கநாதர்