சிவன் பாடல்கள்சைவம்பக்தி பாடல்கள்

லிங்காஷ்டகம் பாடல் வரிகள் | Lingashtakam Songs Lyrics in Tamil

லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 1

விளக்கம்
பிரம்மன் விஷ்ணு எல்லாத் தேவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம் சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம் பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம். அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 2

விளக்கம்
சிறந்தவர்களான தேவர்களிலும் ரிஷிகளிலும் வணங்கப்படும் லிங்கம் மலர்க்கணைகளை விட்டு காமனை எறித்து அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய கருணாகர லிங்கம். இராவணன் உள்ளதில் உள்ள லிங்கம் அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 3

விளக்கம்
வாசனை பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உண்மை அறிவு காரணமாக இருக்கும் லிங்கம் சித்த அசுராசுரர் வணங்கப்படும் லிங்கம் அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 4

விளக்கம்
பொன் மணிக்கங்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் நாகம் அணிந்திடும் லிங்கம் தக்ஷனின் யாகம் அழித்த லிங்கம் அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமசந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 5

விளக்கம்
குங்குமம் சந்தனம் பூசியபட்ட லிங்கம் தாமரை மலர் மாலையை சூடிய லிங்கம் முன்பிறப்பு வினை பயன்களைய அழிக்கும் லிங்கம் அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 6

விளக்கம்
தேவகணங்கள் அர்ச்சனை செய்யிது வணங்கும் லிங்கம் உணர்வுடன் பக்தியை உருவாகும் லிங்கம் கோடி சூரியன்களின் ஒளிசுடர்யினைக் கொண்டிருக்கும் லிங்கம் அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 7

விளக்கம்
எட்டு இதழ் தாமரையில் எழுந்தருளும் லிங்கம் எல்லாமாகி காரணம் லிங்கம் 8 தரித்திரம்களை நீக்கிடும் லிங்கம் அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 8

விளக்கம்
தேவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம் தேவலோக நந்தவன மலர்களால் வணங்கப்படும் லிங்கம் எல்லா இடத்திலும் பரமநாதனாய் பரவி உள்ள லிங்கம் அப்படிப்பட்ட லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தமிழ் வடிவ லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

பிரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ..!!

சனி பிரதோஷம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எறித்த கருணாகர லிங்கம்
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ..!!

வாசனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த அசுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ..!!

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ..!!

kethara gowri viratham

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ..!!

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்
தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்..!!

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்..!!

தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *