அம்மன் பாடல்கள்பக்தி பாடல்கள்

Abirami Anthathi lyrics in tamil | அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

அபிராமி அந்தாதி கணபதி காப்பு பாடல் வரிகள்

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

விளக்கம் மாலையாகப்‌ பொருந்திய கொன்றையையும்‌ சண்பகமலர்‌ மாலையையும்‌ ௮ணிந்தருளுகின்ற தில்லையைம்பெருமான்‌ சிவபெருமானுக்கும்‌, அப்பெருமான்‌ பாகத்தில்‌ திருகின்ற உமா தேவியாருக்கும்‌ திருக்குமரனே, கரிய நிறம்‌ பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும்‌ பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையின்‌ பற்றிய அந்தாதியை எப்போதும்‌ என்‌ உள்ளத்துக்குள்ளே நிலை பெறும்படி அருள்வாய் ?

அபிராமி அந்தாதி 1 வது பாடல் வரிகள்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 1

விளக்கம் உதயமாகின்ற செங்கதிரவனும்‌, நெற்றியில்‌ ௮ணியும்‌ சிந்தூரத்‌ திலகமும்‌, ஞானம்‌ உடையவர்கள்‌ நன்கு மதிக்கின்ற மாணிக்கமும்‌, மாதுள மலரும்‌, தாமரை மலரில்‌ விற்று திருக்கும் திருமகள்‌ துதிசெய்கன்ற மின்னற்‌ கொடியும்‌, மெல்லிய
வாசனையையுடைய குங்குமக்‌ குழம்பு போன்ற திருமேனியையுடைய ௮பிராமியம்மை எனது துணை ஆவாள்‌.

அபிராமி அந்தாதி 2 வது பாடல் வரிகள்

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. 2

விளக்கம் எனக்கு உயிர்த்துணையும்‌, நான் தொழும்‌ தெய்வமும்‌, என்னை பெற்ற அன்னையும்‌, வேதமென்னும்‌ மரத்தின்‌ களையும்‌, மூடிவில்‌ உள்ள கொழுந்தும்‌, கிழே உள்ள வேரும்‌, குளிர்ச்சியையுடைய மலரம்புகளையும்‌ கரும்பு வில்லையும்‌ மெல்லிய பாசாங்‌ குசத்தையும்‌ திருக்கரத்தில்‌ ஏந்திய திரிபுரசுந்தரியே ஆகும்‌ உண்மையை யாம்‌ அறீந்தோம்‌.

அபிராமி அந்தாதி 3 வது பாடல் வரிகள்

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3

விளக்கம் அருட்செல்வ முடையாய்‌, வேறு யாரும்‌ அறியாத இரகசியத்தை நான்‌ அறிந்தேன்‌ ; அங்ஙனம்‌ அறிந்தமையால்‌ அது :
கொண்டு உன்‌ திருவடி யினிடத்தே புகலாக அடைந்தேன்‌; உன்னடியார்கள்‌ பெருமையை எண்ணாத பாவம்‌ மிக்க மனம் காரணமாகக்‌குப்புறவிழும் நரகலோகத்தின்‌ தொடர்புடைய மனிதரை அஞ்சவிலகினேன்‌.

அபிராமி அந்தாதி 4 வது பாடல் வரிகள்

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4

விளக்கம் பூவுலக வாசிகளாகிய மனிதர்களும்‌ பொன்னுலக வாசிகளாகிய தேவர்களும்‌ இறவாத பெருமையையுடைய முனிவர்‌களும்‌வந்து தலை வணங்கும்‌ செம்மையாகிய திருவடிகளும்‌ உடைய தேவியே, கொன்றைக்‌ கண்ணியை அணிந்த நீண்ட சடாபாரத்தின்மேல்‌ பனிஉய உண்டாக்குகின்ற சந்‌திரனையும்‌ பாம்பையும்‌ கங்கையையும்‌ கொண்ட தூயவராகிய சிவடிரானும்‌ நீயும்‌ என்‌ அறிவினீடத்தே எக்காலத்திலும்‌ இனைந்து எழுந்தருள்வீர்களாக.

அபிராமி அந்தாதி 5 வது பாடல் வரிகள்

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. 5

விளக்கம் மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளெ. தளர்வுற்ற வஞ்சிக்கொடியைப்‌ போன்ற திருபாதங்களையுடைய மனோன்மணியு‌, நீண்ட சடையையுடைய , சிவபிரான்‌ உண்ட விடத்தைத்‌ தன்‌ திருக்கரத்தால்‌ அமுதமாக்கிய அம்பிகையும்‌, தாமரை மலரின்மேல்‌ அழகு பெற வீற்றிருக்தருளும்‌ சுந்தரியும்‌, அந்தரியும்‌ ஆகிய அபிராமி

அபிராமி அந்தாதி 6 வது பாடல் வரிகள்

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 6

விளக்கம் செந்நிறம்‌ வாய்ந்த திருமேனியையுடைய தேவி, என்‌ சிரத்தின்மேல்‌ முடிபோலத்‌ திகழ்வது உன்பொலிவு
பெற்ற திருவடியாகிய தாமரை மலர்‌ ! உள்ளதுள்‌ நிலைபெற்று திருப்பது உன்‌ அழகிய மந்திரம்‌ ; உன்னையே தியானிக்கும்‌ உன்‌
அடியார்களுடன்‌ கலந்து முறைப்படி அடுத்தடுத்து நான்‌ பாராயணம்‌ செய்வது உன்னுடைய மேலான ஆகமததியே‌.

அபிராமி அந்தாதி 7 வது பாடல் வரிகள்

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7

விளக்கம்
தாமரை மலரை திருக்கையாகக்‌ கொண்ட பிரமனும்‌, சந்திரனைத்‌ திருமுடியில்‌ தரித்த உன்‌ கணவராகிய சிவபெருமானும்‌, திருமாலும்‌ வழிபட்டு எல்லா நாளும்‌ வழிபட்டு செய்யும் திருவடியையுடைவலே, சிந்தூரத்‌ திலகம் அணிந்த திருமுகத்தை உடைய பேரழகியே, தயிரில்‌ கடையும் மத்தைப்போலப்‌ பல பிறவிகளிற்‌ சுமன்று திரியும்‌ அடியேனது உயிரை‌ முக்தி அடையும்படி. திருவுள்ளங்‌ செய்வாய்

அபிராமி அந்தாதி 8 வது பாடல் வரிகள்

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8

விளக்கம்

சுந்தரி, எந்தையாகிய சிவபெருமானுக்குரிய தேவி, என்னுடைய பாசமாகிய தடைகளையெல்லாம்‌ அழிக்கும்‌ சிந்துர நிறம்‌ பொருந்தியவள்‌, மகிஷாசுரனது சிரத்தின்மேல்‌ நிற்கும்‌ அந்தரி, நீல நிறத்தையுடையவள்‌, என்றும்‌ அழிவுவில்லாத கன்னிகை, பிரமதேவனது கபாலத்தைக்‌ தாங்குகின்‌ர திருகரத்தை உடையவள்‌ ஆயு அபிராமியின்‌ திருப்பாதம்‌ என்‌ உள்ளத்துள்ளே என்றும்‌
எழுந்தருளி யிருப்பனவாம்‌.

அபிராமி அந்தாதி 9 வது பாடல் வரிகள்

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே. 9

விளக்கம் தாயே, என் தந்‌தை சிவபெருமானது திருவுள்ளத்தில்‌ திருப்பனவும்‌, கண்களில்‌ உள்ளனவும்‌, அழகு பெற்ற பொன்‌ மலையாகிய மேருவைப்போலப்‌ பருத்திருப்பனவும்‌, அழுத திருஞானசம்பர்தப்‌ பிள்ளையாருக்குப்‌ பாலை வழங்‌கி பெரிய அருள்‌
மிகுந்த கனமான கொங்கை ‌, அவற்றின்மேல்‌ உள்ள முத்துமாலையும்‌, சிவந்த கரத்திலுள்ள கருப்பு வில்லும்‌ மலரம்புகளும்‌, மயிலிறகின்‌ அடிக்குருத்துப் போன்ற புன்னகையும்‌, தேவியாகிய நின்‌ பூரணத்‌ திருக்கோலமும்‌ என்முன்‌ நின்று காட்சி யருளுக,

அபிராமி அந்தாதி 10 வது பாடல் வரிகள்

நின்றும், திருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! 10

விளக்கம் வேதத்திற்‌ பொருந்‌தும் அரிய பொருளாயுள்ளாய்‌, சிவபிரானது திருவருள்‌ வடிவே, உமாதேவியே, அன்று இமாசலத்தில்‌ அவதரித்தாய்‌, அழியாதமுத்தியின்பமாக உள்ளாய்‌, அடியேன்‌ நின்றபடியும்‌ இருந்தபடியும்‌ படுத்தபடியும்‌ நடந்தபடியும்‌ தியானம்‌ செய்வது உன்னையே; என்றைக்கும்‌ வழிபடுவது உன்‌ திருவடித்‌ தாமரையையே,

அபிராமி அந்தாதி 11 வது பாடல் வரிகள்

ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே. 11

விளக்கம் ஆனந்த உருவமே என்‌ அறிவாகி நிரம்பிய அமுதம்போன்றவளாகி ஆகாசம் ஈறான பஞ்ச பூதங்களும்‌ தன்‌ வடிவாகப்‌ பெற்ற தேவியினது, நான்கு வேதங்களுக்கும்‌ முடிவாக நிற்கும்‌ திருவடித்‌ தாமரையானது வெண்ணிறத்தை யுடைய மயானத்தைத்‌ தம்முடைய ஆடும்‌ இடமாக உடைய எம்பெருமானாகய சிவபிரானது திருமுடி மாலையாக உள்ளது.

அபிராமி அந்தாதி 12 வது பாடல் வரிகள்

கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் திருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. 12

விளக்கம் என்‌ தாயே, ஏழு உலகங்களையும்‌ பெற்ற தேவியே, அடியேன்‌ கருதுவது உன்‌ புகழ்‌; கற்பதும்‌ உன் உடய நாமங்கள்‌;
மனமூருகிப்‌ பக்தி செய்வது உன்‌ இரண்டு திருவடித் தாமரை மலர்களிலேதான்‌ ; பகலும்‌ இரவுமாகப்‌ பொருந்தியது உன்னை விரும்பிய மெய்யடியார்களது கூட்டத்தில்‌; இவ்வளவுக்கும்‌ காரணமாக அடியேன்‌ முன்‌ பிறவிகளிற்‌ செய்த புண்‌ணியச்‌ செயல்‌ யாது?

அபிராமி அந்தாதி 13 வது பாடல் வரிகள்

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! 13

விளக்கம் உலகம் பதினான்கையும் திருவருளால் ஈன்றோய் , அவ்வாறு அருள்கொண்டு ஈன்றதுபேரலவே அவற்றைப் பாதுகாத்தோய் ,பின்னர் அவற்றைச் சங்காரம் செய்வாய் , விடத்தை யுடைய நீலகண்டப் பெருமானுக்கு மூன் பிறந்தோய் , மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே, பெரிய தவத்தை யுடையவளே, அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதன்றி வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது முறை ஆகுமா?

அபிராமி அந்தாதி 14 வது பாடல் வரிகள்

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே. 14

விளக்கம் எம் தலைவியாகிய அபிராமியே, உன்னை வழிபடுவோர்கள் தேவர்களும் அசுரர்களும் ஆகிய திருவகையினருமாவார் ; நின்னைத் தியானம் செய்பவர்கள் பிரமதேவரும் திருமாலும் ; தம் உள்ளத்துள்ளே அன்பினாற் கட்டி வைப்பவர் மேலான ஆனந்த உருவினராகய சிவபெருமான் ; ஆயினும் உன் திருவருள் நின்னைத்து தரிசிட்பவர்களுக்கும் எளிதாக திருக்கின்றது.

அபிராமி அந்தாதி 15 வது பாடல் வரிகள்

தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. 15

விளக்கம் பண்ணையொத்த இனிய மொழிகளைப் பேசும் பரிமளத் திருமேனியையுடைய பச்சைக் கிளியே உன்னுடைய திருவருளைப் பெறவேண்டுமென்று முற்பிறப்புக்களில் பலகோடி வகையான தவங்களைப் புரிந்த அன்பர்கள் ,
இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் அரசச் செல்வம் ஓன்றைத்தானா பெறுவார்கள் யாவரும் மதிக்கின்ற தேவர்களுக்குரிய வானுல
கத்தை ஆளும் செல்வத்தையும் என்றும் அழியாத மோச்சம் பெறுவார்கள்

அபிராமி அந்தாதி 16 வது பாடல் வரிகள்

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே. 16

விளக்கம் கிளிபோன்ற திருமேனியையுடைய தேவி, உறவினராகிய அன்பர்கள் மனத்தே நிலைபெற்ற ஞான ஓளியே,
ஒளிக் கெல்லாம் ஆதாரப் பொருளே, எண்ணிய தத்துவ பரவெளியே, ஆகாசம் முதலிய ஐம்பெரும் பூதங்களு தாயே,
இத்துணைப் பெரிய பொருளாகிய நீ இரங்கத்தக்க அடியேனது சிறு அறிவிற்கு ஊட்டப்படுவது வியப்புத் தருவதாகும் ,

அபிராமி அந்தாதி 17 வது பாடல் வரிகள்

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே. 17

விளக்கம் வியப்பைத் தரும் திருவுருவத்தை யுடையவள் . தாமரை மலர்கள் யாவும் தம்மினும் உயர்ந்த அழகுடையதென்று துதிப்பதற்குக் காரணமாக அவற்றை வென்று பெற்ற வெற்றியையுடைய முகத்தைக்கொண்ட அழகிய கொடிபோல்பவள் ,
மன்மதன் நெற்றிக் கண்ணைத் திறந்து நோக்கி எரித்த சிவபிரானது புத்தியை வெற்றிகொள்ள அல்லவோ அவரது
இடத்திருப்பாகத்தைக் கவர்ந்துகொண்டது

அபிராமி அந்தாதி 18 வது பாடல் வரிகள்

வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே. 18

விளக்கம் தேவி சிவபிரானும் நீயும் இணைந்து அர்த்தநாதீஸ்வர் ‘திருக்கோலமும் , உங்கள் திருமணக்கோலமும் என்
உள்ளத்துள்ளே திருந்த ஆணவத்தைப் போக்கி என்னைத் தடுத்தாட்கொண்ட பொலிவு பெற்ற திருவடிகளுமாத உருவெடுத்து
வந்து வெம்மை மிக்க எமன் உயிரைக் கொள்ள வரும்போது தரிசனம் தந்து நின்றருள்வீர்.

அபிராமி அந்தாதி 19 வது பாடல் வரிகள்

வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19

விளக்கம் நவகோணத்தைப் பொருந்தி விரும்பித் தங்கும் அபிராமியே, வெளிப்படையாக அடியேனும் -காணும்படி நின்ற நின்றன் திவ்வியத் திருமேனியைப் புறத்தே கண்டு கண்ணிலும் , அகத்தே கண்டு நெஞ்சத்திலும் மகழ்ச்சி நிலை பெற்றதனால் உண்டான இன்ப வெள்ளத்துக்குக் கரை காண முடியவில்லை ; அடியேனது உள்ளத்துள்ளே, தெளிந்து நின்ற மெய்ஞ்ஞானம் விளங்குகின்றது; இவ்வளவு பேரருளைச் செய்தற்குக் காரணம் எத்தகைய திருவுள்ளக் குறிப்போ

அபிராமி அந்தாதி 20 வது பாடல் வரிகள்

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. 20

விளக்கம் அருளால் நிறைவு பெற்ற கலையே, நீ வாசஞ்செய்கன்ற ஆலயம் உன் பதியாகிய பரமசிவத்தின் ஒரு பக்கமோ,
அல்லது உன் புகழை எப்பொழுதும் சொல்கின்ற நான்கு வேதங்களின் மூலமோ, அவற்றின் முடிவாகிய உபகிடதங்களோ. அமுதம் நிறைந்திருக்கும் சந்திரனோ, வெண்டாமரையோ, அடியேனுடைய,உள்ளமோ, தன்பால் வீழும் பொருள்களெல்லாம் மறைவதற்குக் காரணமான கடலோ.

அபிராமி அந்தாதி 21 வது பாடல் வரிகள்

மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே. 21

விளக்கம் நித்திய மங்கலையாகிய அபிராமி தேவி, சிவந்த கல௪த்தைப்போன்ற தனபாரங்களையுடையவள் ,மலைமகள் ; நிறம்பெற்றவளைகள் அசைகின்ற சிவந்த திருக்கரங்களை யுடைய எல்லாக் கலைக்கும் தலைவியாக மயில்போன்றவள் ; பாய்கின்ற கங்கையின் மேலெழும் அலைகள் அடங்கித் தங்குதற்குரிய புரிந்த சடையையுடைய சிவபிரானது வாமபாகத்தை ஆட்கொண்டவள் ; பொன்னிறம் படைத்த பிங்கலை நீல நிறம் படைத்த காளி ; செந்நிறம் பெற்ற லலிதாம்பிகை, வெண்ணிறம் பெற்ற வித்யாதேவி; பச்சைகிறம் பெற்ற உமாதேவி.

அபிராமி அந்தாதி 22 வது பாடல் வரிகள்

கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே. 22

விளக்கம் இளைய வஞ்சிக்கொடி , பூங்கொம்பை ஓத்தவளே, எனக்குக் காலமல்லாத காலத்திலே பழுத்த திருவுருவே, வேதமாகிய மலரின் மணம்போன்றுய் , குளிர்ச்சியையுடைய பெரிய இமாசலத்தில் வீளையாடும் பெண்யானையே,
பிரமன் முதலிய தேவர்களைப்பெற்ற தாயே, அடியேன் இவ்வுலகத்தில் இறந்த பின்னர் மீட்டும் பிறவாமல் இருக்கும்படி அடியேனை அருள் செய்வாயாக.

அபிராமி அந்தாதி 23 வது பாடல் வரிகள்

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே. 23

விளக்கம் பரந்த மூன்று உலகத்துக்குள்ளும் உள்ள பொருளே, ஆயினும் எல்லாப் பொருளுக்கும் புறம்பே உள்ளாய் , அடியார்
கள் உள்ளத்தே முற்றி விளைந்த இன்பமாகய கள்ளே, மகிழ்ச்சியே, இரங்கத்தக்க என் கண்ணுள் மணிபோன்று, அடியேன் என்
உள்ளத்தில் தியானம் செய்யுங்கால் உன் திருக்கோலமல்லாத வேறொரு தெய்வத்தின் உருவத்தைச் சிந்தியேன் ; நின்னுடைய
அன்பர்களுடைய கூட்டத்தைப் பிரியேன் பரசமயங்களை விரும்பேன் .

அபிராமி அந்தாதி 24 வது பாடல் வரிகள்

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. 24

விளக்கம் மாணிக்கம் போன்றாய் , அம்மாணிக்க மணியின்கண் உள்ள பிரகாசம் போன்றுய் , விளங்குகின்ற மாணிக்கங்களால் அழகுபெறச் செய்யப்பெற்ற ஆபரணம் போன்ருய் , உன் திருமேனியின்கண் அணியப்படுகின்ற மணிகளுக்கு அழகாயிருப்பரய் , நின்னை அணுகாமல் வீணே பொழுது போக்குபவர்களுக்கு நோய் போன்றய் , உன் அடியவர்களது பிறவிநோய்க்கு மருந்து போன்றாய் , தேவர்களுக்குப் பெரிய விருந்து போன்ருய் ,அடியேன் உன்னுடைய தாமரைபோன்ற திருவடிகளை வணங்கிய பின்னர் வேறு எவவடியும் பணியேன்.

அபிராமி அந்தாதி 25 வது பாடல் வரிகள்

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25

விளக்கம் மூர்த்திகளுக்கும் தாயே, உலகிலுள்ள உயிர்கள் பிறவிப் பிணியினின்றும் நீங்க அபிராமி யென்னும் நாமக்தோடு எழுக்கருளியிருக்கும் அரிய மருந்தே, உன் அடியார்களின் பின்னே அவரை வழிபட்டு அவருடன் திரிந்து அவரை உபசரித்துப் பிறவிப் பிணியை அறுக்கும் பொருட்டு உபாயமாகிய தவங்களை முற்பிறப்பிலே செய்துவைத்தேன் ? உன்னை என்றும் மறவாமல் நிலைபெற்றுக் துதிசெய்வேன்

அபிராமி அந்தாதி 26 வது பாடல் வரிகள்

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே. 26

விளக்கம் கடம்பமலரை அணிகின்ற. கூந்தலையுடைய தேவி, நின்னைத் துதிக்கும் அடியவர்களோ, ஏழு உலகங்களையும்
படைத்தும் பாதுகாத்தும் சங்காரம் தொழிலை செய்தும் மும்மூர்த்திகளாவர் ; இரண்டு திருவடிகளுக்கு ஓன்றுக்கும் பற்றுத அடியேனுடைய நாவில் தங்கிய பொருளற்றமொழிகளும் துதிகளாக ஏற்றுக்கொள்ளப்பெற்று ஏற்றம்பெற்றது
நகைத்தற்குரிய செயலாகும் .

அபிராமி அந்தாதி 27 வது பாடல் வரிகள்

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. 27

விளக்கம் பேரழகியே, மாயாமலத்தால் வந்த அடியேனதுபிறவியைத் தகர்த்தாய் ; என் உள்ளம் உருகும்படியான அன்பை
அவ்வுள்ளத்திலே உண்டாக்கி ; தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தலையால் வணங்கும் தொண்டை எனக்காக
ஓப்பித்தாய் , என் நெஞ்சில் திருந்த ஆணவம் மூதலிய அழுக்கை எல்லாம் நினது கருணையாகய நீரால் போக்கி
இங்ஙனம் செய்த என் திருவருட் சிறப்பை அடியேன் என்ன வென்று எடுத்துப் பாராட்டுவது !

அபிராமி அந்தாதி 28 வது பாடல் வரிகள்

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. 28

விளக்கம் ஆனந்த தாண்டவம் செய்தருளும் நாயகராகிய நடராஜ மூர்த்தியுடன் சொல்லும் பொருளும்போல இணைந்து ‘:
நிற்கும் மணமலர்க் கொடியைப் போல , உன் நாள்மலர்போன்ற திருவடிகளை இரவும் பகலும் தொழுகின்ற தொண்டர்களுக்கே
அழியாத அரச பதவியும் , தவ வாழ்க்கையும் , சிவலோக பதவியும் கிடைக்கும் .

அபிராமி அந்தாதி 29 வது பாடல் வரிகள்

சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே. 29

விளக்கம் அட்டமாசித்திகளும் , அச்சித்தகளைத் தரும் தெய்வமாகி விளங்குகன்ற பராசக்தியும் , சக்தியைத் தன்மிடத்தே
கொண்ட பரமசிவமும் , தவம்புரிவார் பெறும் மோக்ஷஆனந்தமும் , அந்த முத்தியைப் பெறுவதற்கு அடியிடும் மூலமாகத்
தோன்றி எழுந்த சிவஞானமும் ஆகிய எல்லாமாக இருப்பவள் அறிவினுக்குள்ளே நின்று பாதுகாக்கும் இரிபுரசுக்கரியேயாகும் .

அபிராமி அந்தாதி 30 வது பாடல் வரிகள்

அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே! 30

விளக்கம் ஒருருவாக உள்ளாய் , பல உருவங்களை உடையாய் , உருவமற்ற அருவே, எனக்குத் தாயாகிய உமாதேவியே, முன்
ஒரு நாள் என்னைத் தடுத்தாட்கொண்டருளினை ஆட்கொண்டதை அல்ல என்று மறுபது உனக்கு நியாயமா?
இனிமேல் நான் என்ன குற்றம் செய்தாலும் , கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் , என் குற்றத்தை மறந்து
கரையேற்றிப் பாதுகாத்தல் உன் திருவுளம் .

அபிராமி அந்தாதி 31 வது பாடல் வரிகள்

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே. 31

விளக்கம் உமாதேவியும் , அத்தேவியை ஒரு பாகத்தில் உடைய சிவபிரானும் சேர்ந்து ஒருருவாக எழுந்தருளி வந்து, பரிபக்குவ
மற்ற என்போன்றாரையும் தம் திருவடிக்கு அன்பு செய்யும்படி நன்னிலையில் வைத்தருளினார் ? அதனால் இனிமேல் கடைப்
பிடிப்போமென்று எண்ணி நாம் ஆராய்தற்குரிய சமயங்கள் வேறு இல்லை; எனக்குப் பிறவிப்பிணி நீங்கெயதாதலின் இனி
எனமைப் பெற்று எடுப்பதற்க தாயும் இல்லை , மூங்கிலைப்போல் உள்ள தோளையுடைய பெண் மீது வைத்த மோகம் போதும் .

அபிராமி அந்தாதி 32 வது பாடல் வரிகள்

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட திருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே! 32

விளக்கம் பரமேசுவரரது பாகத்தில் எழுந்தருளியிருக்கும் தேவி, மண் , பெண் , பொன் என்னும் மூன்றன் ஆசையாகிய கடலிற் சிக்கி அதன் பயனாக இரக்கமற்ற யமனது கைப்பாசத்திற்பட்டுத் துன்புறும்படி இருந்த என்னை, உன் திருவடியாகிய மணமுள்ள தாமரை மலரை அடியேன் : தலையின்மேல் வலிய வைத்தருளித் தடுத்தாண்டுகொண்ட உன் கருணைப் பெருக்கை எவ்வாறு எடுத்து உரைப்பேன் ?

அபிராமி அந்தாதி 33 வது பாடல் வரிகள்

இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே. 33

விளக்கம் இறைவரது திருவுள்ளம் முழுதும் உருகும்படிசெய்யும் கலவைச் சந்தனத்தைப் பூசிய குவீந்த தனபாரங்களை உடைய
யாமளையாகிய மெல்லியலே, ௮டியேன் செய்யும் பாவத்தின் விலவாக அதுபற்றி என்னைவந்து கொல்லப்புகும் யமன் நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில் நான் மிக வருந்துவேன் ; அவ்வாறு வருந்தும்பொழுது நின்பால் ஓடிவந்து நின்னையே அன்னையே சரணம் என்று புகலடைவேன் ; அக்காலத்தில் என்பால் எழுந்தருளி, அஞ்சாதே என கூறி என்னைப்
பாதுகாத்தருள வேண்டும் .

அபிராமி அந்தாதி 34 வது பாடல் வரிகள்

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் திருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. 34

விளக்கம் அபிராமி, தன்பால் வந்து புகலடையும் அடியவர்களுக்குச் சொர்க்கலோக பதவியை அன்போடு தந்து, தான் பிரம
தேவனுடைய நான்கு முகத்திலும் தேனொழுகும் துழாய் மாலையும் பருத்த மணியம் அணிந்த திருமாலின் திருமார்பிலும் , சிவபிரானது வாமபாகத்திலும் , செந்தேன் சொரியும் பொற்றாமரை மலரிலும் , பரவிய கரணங்களையுடைய சூரியனிடத்திலும் சந்திரனிடத்திலும் போய் வீற்றிருப்பாள் .

அபிராமி அந்தாதி 35 வது பாடல் வரிகள்

திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. 35

விளக்கம் அலை வீசும் பாற்கடலில் ஆதிசேடனாகிய பாம்பின்மீது துயிலும் மேலான பரம்பொருளே, சிவபிரானது திருமுடியிலுள்ள பிறைச் சந்திரனது மணம் வீசும் உன்னுடைய சிறிய அடியை எங்கள் சிரத்திலே :நீ வைத்தருள எங்களுக்கு ஓப்பற்ற தவம் அமைந்தவாறு, என்ன வியப்பு! கணக்கில்லாத பல தேவர்களுக்கும் இத்தகைய தவம் கிடைக்குமோ? இடையாது.

அபிராமி அந்தாதி 36 வது பாடல் வரிகள்

பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
திருளேதும் இன்றி ஒளிவெளியாகி திருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!
36

விளக்கம் பலவகைச் செல்வமாக உள்ளாய் , அச்செல்வத்தால் நீறைவேறும் போகமே, அறிய போகங்களைத் துய்க்கும்படி
செய்யும் மாயா ரூபியே, அம்மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த ஞானமே, தரமரையாகிய இருக்கையில் எழுந்தருளிய
தாயே, அடியேனது மனத்தில் மாயையிருள் சிறிதும் இல்லாது ஒழியச் சுடர்வீசும் பராகாசமாக இருக்கும் உன் திருவருள் எத்தகையதென்று அடியேன் அறியவில்லை.

அபிராமி அந்தாதி 37 வது பாடல் வரிகள்

கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
37

விளக்கம் எட்டுத்திசை உடுத்த அழகிய உடையாக உடைய சிவபெருமானது வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி,
தன் திருக்கரத்தில் ௮ணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும் ஆம் ; செந்தாமரைபோன்ற நிறமுடைய
திருமேனியில் அணிவது வெள்ளிய முத்துமாலையாம் ; விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற குஹ்ய ஸ்தானத்தில்
தரிப்பவை பல மணிகளால் ஆகிய மேகலை வகைகளும் பட்டும்ஆம் .

அபிராமி அந்தாதி 38 வது பாடல் வரிகள்

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. 38

விளக்கம் நல்ல இனபப்பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே, இந்திர பதவியைப் பெற்றுத் தேவலோக ராசதானீயாகிய அமராவதியை ஆளவேண்டுமெனின் அதன் பொருட்டு, பவளக்கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல்வரிசையும் தமக்குத் துணையாக நிற்க, எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக எதிர்ப்பட்டுத் துடிபோன்ற இடையைக் கனத்தால் மழையச்செய்யும் இரண்டு தனங்களையுடையாளாகிய அபிராமியை வழிபடுவீர்களாக.

அபிராமி அந்தாதி 39 வது பாடல் வரிகள்

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே! 39

விளக்கம் திரிபுரங்களும் அழியும் பொருட்டுத் திருமாலாகிய அம்பைத் தொடுத்த மேருமலையாகிய வில்லையுடைய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஓளி படர்ந்த திருநுதலையுடைய தேவி, அடியேனை ஆட்கொண்டருளுதற்கு நின் திருவடீத்தாமரை மலர்கள் இருக்கின்றன ; காலன்பாற் செல்லாமல் மீண்டு உய்வதற்கு உபகாரமாக நின் கடாக்ஷவீகஷண்யம் இருக்கிறது; இவற்றின்மேல் கருத்தைப் பொருத்துகைக்கு இன்னும் காலம் வராமல் இருப்பது என் குறைதான் ; உன் திருவருட்குறை அன்று.

அபிராமி அந்தாதி 40 வது பாடல் வரிகள்

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே. 40

விளக்கம் ஒளி பொருந்திய நெற்றியிலே திருவிழி படைத்தவளை, தேவர்களெல்லோரும் வந்து வழிபட்டுப் பூசை செய்ய நினைத்
தற்கு இடமாகிய எம் தலைவியை, அறியாமையையுடைய நெஞ்சனாம் காண்பதற்கு அருகே உள்ளவளல்லாத கன்னிகையைத்
தரிசித்துப் பேறுபெறும் அன்பை மேற்கொள்வதற்கு எண்ணிய எண்ணமன்றோ முற்பிறவீகளிலே செய்த புண்ணியத்தின்
பயனாவது?

அபிராமி அந்தாதி 41 வது பாடல் வரிகள்

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 41

விளக்கம் மனமே, மலர்ந்த புதிய குவளை மலரைப்போன்ற திருவிழிகளையுடைய அபிராமியும் , அப்பிராட்டியின் செந்
நிறத்தையுடைய பதியும் சேர்ந்து நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால் நாம் இருக்குமிடத்தை அணுகிவந்து நம்மைத் தம் அடியார்களிடையே இருக்கும்படி. திருவருள் பாலித்து ஈம்முடைய தலையின்மேலே தம் திருவடி. மலர்களைப் பதிப்பதற்கு – உரிய புண்ணியச் செயலை முற்பிறவியில் செய்திருக்கின்றோம் ; இது வியத்தற்குரியது.

அபிராமி அந்தாதி 42 வது பாடல் வரிகள்

இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே. 42

விளக்கம் பரந்த இடத்தைக்கொண்டு பருத்து ஒன்றோடொன்று. ஓக்க வளர்ந்து தளர்ச்சியின்றிச் செறிந்து மெத்தெனக் குழைந்து. மூத்து மாலையை ௮ணியாகச்கொண்ட தலமென்னும் மலையைக் கொண்டு சிவபிரானது வன்மைபெற்ற நெஞ்சைத் தான் நினைத்தவாறெல்லாம் ஆட்டிவைக்கும் விரதத்தையும் அதற்கேற்ற அழகையும் உடையதே, நல்ல பாம்பின் படத்தையொத்த குளிர்ச்சியையுடைய திருவார்த்தைகளையும் வேதமாகிய சிலம்பையும் உடையவள் .

அபிராமி அந்தாதி 43 வது பாடல் வரிகள்

பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து திருந்தவளே. 43

விளக்கம் சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும் பாசாங்குசத்தையும் உடையவள் ; ஐந்து மலர்ப் பாணங்களைத் தரித்
தவள் ; இனிய சொல்லையுடைய திரிபுரசுந்தரி ; சிந்துரம்போலச் சிவந்த திருமேனியை யுடையவள் ; நெஞ்சினால் நினைந்து தேவர்களுக்குத் தீங்குகள் செய்த திரிபுரத்தில் உள்ள வஞ்சகராகய அசுரர்களை அஞ்சுவிக்க வளைத்த மேரு மலையாகிய வில்லையுடையதிருக்கரத்தையும் நெருப்பை யொத்த திருமேனியையும் உடைய சிவபிரானது ஓத்த ஒரு பாதியில் எழுந்தருளி யிருந்தவளாகும் .

அபிராமி அந்தாதி 44 வது பாடல் வரிகள்

தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. 44

விளக்கம் தவம்செய்யும் உமாதேவியே ; எங்கள் பிரானாகய சங்கசனார் மனைக்குமங்கலமாகய பத்தினி ஆகிய அவளே அவருக்குஒரு திறத்தில் தாயுமாயினாள் , ஆகையினால் இவளே தேவர் யாவருக்கும் மேலான தலைவியாவாள் ; இவளைத் தெய்வமாகக் கொண்டு தொண்டு புரிதலல்லது வேறொரு தெய்வம் உண்டென்பகாக எண்ணி மெய்யால் தொழும்பு செய்து தளர்ச்சி அடையேன் .

அபிராமி அந்தாதி 45 வது பாடல் வரிகள்

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே. 45

விளக்கம் தேவி, நின் திருவடிச்குத் தொண்டு செய்யாமலும் நின் பாத சேவை செய்யாமலும் உண்மைப் , பொருள் இன்ன
தென்று தெளிந்து தம் மனம் விரும்பியவற்றையே பழங்காலத்திற் செய்த மெய்ஞ்ஞானியராகிய நின் அடியார்கள் திருந்
தனரோ, இல்லையோ ; .( திருந்தனராதலின் ) அவரைப்போலவே அடியேனும் தெரிந்து என் இச்சைக்குரிய செயல்களைச் செய்தால் அது வஞ்சகமாகுமோ அல்லது அந்த மெய்ஞ்ஞானியர் செய்கையெல்லாம் தவமாதலைப்போல இவையும் யான் செய்யும் தவமாகுமோ அடியேன் மாறுபாடான செயல்களைச் செய்தாலும்பொறுத்தல் ஈலமாம் ; என்னை அதனால் வெறுத்து ஒதுக்கல் நன்றன்று.

அபிராமி அந்தாதி 46 வது பாடல் வரிகள்

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே! 46

விளக்கம்
புதிய ஆலகாலவிடத்தை நுகர்ந்து கறுத்த திருக்கழுத்தை உடைய சிவபிரானது வாமபாகத்திற் பொருந்திய:
பொன்னிற மேனிப் பெருமாட்டியே, தாம் வெறுப்பதற்குரிய இயல்பினவாகிய செயல்களைத் தம் அடியவர்கள் செய்தாலும்
அவர்களை. அறிவினால் மிக்க பெரியோர்கள் பொறுத்தருளும் இயல்பு இவ்வுலகத்தில் இன்று நேற்று வந்த புதிய வழக்கம்
அன்றே; ஆதலால் நீ ஏற்றுக்கொள்ளாது விலக்கும் இயல்புடைய காரியங்களை அடியேன் செய்தாலும் ,அவற்றை. நீ
பொறுத்தருள்வாய் என்ற தைரியத்தால் மீட்டும் நின்னை வாழ்த்தித் துதிப்பேன் .

அபிராமி அந்தாதி 47 வது பாடல் வரிகள்

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47

விளக்கம் அழிவற்ற இன்பத்தில் வாழும்படியாக ஒரு பரவஸ்துவை மெய்ஞ்ஞானத்தால் அறிந்து கொண்டேன் ; அது மனத்தில் ஒருவர் விரும்பித் தியானிக்குமாறு : உள்ளதன்று; வாயினால் இப்படி. இருப்பதென்று உரைப்பதற்கும் உரியதன்று.
கடலேழும் உலகேழும் பெரிய அட்டகுலாசலங்களும் அணுகாமல் இரவையும் பகலையும் . முறையே செய்யும் சுடர்களாகிய சந்திர சூரியர்களுக்கு நடுவே அமைந்து விளங்குகின்றது அப்பொருள் .

அபிராமி அந்தாதி 48 வது பாடல் வரிகள்

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது திருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48

விளக்கம் பிரகாசிக்கும் கலைகளையுடைய பிறை பொருந்திய சடையோடு கூடிய திருமுடியையுடைய மேருமலை போன்ற சிவபெருமானோடு இணைந்து படர்கின்ற மணமுள்ள பசுங்கொடியாகிய அபிராமவல்லியைத் தம் நெஞ்சினால் தியானித்து, அதனால் துன்பம் நீங்க, இமைக்கும் ஒரு கணப்போதாவது பரமானந்த நிலையில் இருப்பவர்கள் , மீட்டும் குடரும் நிணமும் இரத்தமும்சேர்ந்த கூடாகிய தேகத்தை அடைவார்களோ ; அடையார் .

அபிராமி அந்தாதி 49 வது பாடல் வரிகள்

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே. 49

விளக்கம் யாழ் நரம்பைப் பொருந்திய இசையின் வடிவாக நின்ற ஈசுவரியே, உடம்பாகிய கூட்டை யடுத்துக் குடியாகப் புகுந்த
உயிரானது, வெவ்விய கூற்றுவனுக்கு இந்நாளில் நீ கொள்ளென்று பிரமன் குறித்த நாளாகிய எல்லையை அடைந்து சுழலுகின்ற அக்காலத்தில் , நீ உன்னைத் தொழும் அரம்பையும் அவளை அடுத்த தேவ மகளிரும் சுற்றிச் சேவியா நிற்க எழுந்தருளி வந்து
நின் வளையையணிந்த திருக்கரத்தை அமைத்துக் காட்டி அஞ்சாதே என்று திருவாய்மலர்ந் தருளுவாயாக.

அபிராமி அந்தாதி 50 வது பாடல் வரிகள்

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50

விளக்கம் ஈசுவரி, நான்கு முகங்களை உடையவள் . காராயணிகைத் தாமரையில் ஐந்து மலரம்புகளைத் தரித்தவள் , சம்புவின் ‘
மனைவி, சங்கரி, சாமளை, நஞ்சை வாயிலே உடைய நல்லபாம்பை மாலையாக உடையவள் , வாராகி, சூலினி, மாதங்
என்று ஆய புகழை உடையவளாகிய அபீராமியின் திருவடிகள் தமக்குப் பாதுகாப்பாகும் .

அபிராமி அந்தாதி 51 வது பாடல் வரிகள்

அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. 51

விளக்கம் பொன் வெள்ளி இரும்பு என்பவற்றாலாகிய திரிபுர: மதில்களே உண்மையான செல்வமென்று எண்ணி இரக்கம்
சிறிதும் இல்லாத வித்யுன்மாலி, தாரகாக்ஷன் , வாணன் என்னும் மூன்று அசுரர்களுடைய வலிமையும் அன்றொரு நாள் அழிந்த
பெருமானாகிய சிவபிரானும் , திருமாலுமே நின் திருவடியே எமத்குப் புகல் என்று கூறுநிற்க நின்ற தலைவியின் அடியார்கள் இறப்பு, பிறப்பு என்னும் இரண்டையும் இவ்வுலகத்தில் அடையார் .

அபிராமி அந்தாதி 52 வது பாடல் வரிகள்

வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52

விளக்கம் தேர் , குதிரை, மதமிக்க களிறு, பெரிய கிரீடம் ,பல்லக்கு, பி.ற மன்னர்கள் திரையாக வழங்கும் பொன் , மிக்க விலையையுடைய. பொன்னாரம் , முத்து மாலை என்பன, பிறையைத்திருமுடிக்கண் சூடிய சிவபெருமானுடைய அழகிய பத்தினியாகிய அபிராமியின் திருவடித்தாமரைக்குப் பூர்வஜன்மங்களில் அன்பு செய்த தவமுடைய அடியார்களுக்கு உண்டாகிய அடையாளங்களாம் .

அபிராமி அந்தாதி 53 வது பாடல் வரிகள்

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி திருப்பார்க்கு இது போலும் தவமில்லையே. 53

விளக்கம் தேவி, மிகச் சிறிய தன் திருவிடையிலே சாத்தியசிவந்த. பட்டாடையும் , மிகப்பெரிய நகலும் , அவற்றின் மேலணிந்த முத்து மாலையும் , பிச்சிமலர் நெருங்கிய மிகக் கரிய கூந்தலும் , மூன்று கண்களும் தம் சிந்தையிலே தியானித்துத்
தனித்திருந்து யோகம் செய்வாருக்கு இங்கனம் தியானிக்கும் செயலையன்றி வேறு பயனுடைய தவம் ஒன்மில்லை.

அபிராமி அந்தாதி 54 வது பாடல் வரிகள்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54

விளக்கம் ஒரு செல்வரிடத்திலே போய் உங்களுடைய வறுமை நிலையைச் சொல்லி அவர்களால் அவமானப்பட்டு நில்லாத நிலை வேண்டுமென்று நெஞ்சில் கருதுவீர்களானால் , தினந்தோறும் உயர்ந்த தவத்தைப் பயிலாமையைச் கற்ற இழிகுண த்தவரிடம் ஒருபொழுதும் செல்லாத பெருமிதத்தை என்பால் அருளிவைத்த ‘திரிபுரசுந்தரியின் திருவடிகளைப் புகலாக அடைவீர்களாக.

அபிராமி அந்தாதி 55 வது பாடல் வரிகள்

மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே. 55

விளக்கம் பல ஆயிர மின்னல்கள் ஓரு திருமேனியின் ௨௫வெடுத்து விளங்குவது போன்ற கோலத்தையுடையவள் ; அடியவர் நெஞ்சத்தில் துய்க்கும் ஆனந்தமயமான கொடி போன்றவள் ; அரிய வேதத்திற்கு முன்னாக நடுமுழுவதுமாகி முடிவும் ஆகிய முதல்வியை உலகத்து உயிர்கள் நினையா தொழிந்தாலும் கினைத்தாலும் அவளுக்கு அவர்களால் வேண்டப்படுவது ஒரு பொருளும் இல்லை.

அபிராமி அந்தாதி 56 வது பாடல் வரிகள்

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 56

விளக்கம் ஓரு பொருளாகிய பராசக்தியாய்த் தோன்றிப் பல பல சக்திகளாகி விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்ற
வளாய் , அவ்வனைத்துப் பொருள்களையும் நீங்க நிற்பவளாகிய அபிராமி என் கருத்துக்குள்ளே நீங்காமல் நிலைபெற்று விரும்பியருள்வது என்ன வியப்பு ! இக்கருத்தை அறிவார் பிரளய காலமாகிய அன்று ஆலிலையில் யோகத்துயில் கூர்ந்த பெருமானாகிய திருமாலும் , என் தந்தையாகிய சிவபிரானுமே யாவர் .

அபிராமி அந்தாதி 57 வது பாடல் வரிகள்

ஐயன் அளந்தபடி திருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே. 57

விளக்கம் தேவி, சிவபிரான் அளந்தளித்த இரண்டுபடி. நெல்லைக்கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கப் பிழைக்கும்படித் தர்மம்
செய்கின்ற நின்னையும் துதித்து, மானிடராகய செல்வர் ஒருவரிடத்தில் அவரைப் பாடிய செம்மையும் பசுமையும் உடைய
தமிழ்ப் பாமாலையையும் கைக்கொண்டு போய் , பொய்யையும் மெய்யையும் கலந்து சொல்லும்படி அடியேனை வைத்தாய்
இதுவோ நின் உண்மையான திருவருள் ?

அபிராமி அந்தாதி 58 வது பாடல் வரிகள்

அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே. 58

விளக்கம் செந்தாமரை மலரிலும் என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருளி யிருக்கும் , தாமரை அரும்புபோன்ற நகிலையுடைய
பாலாம்பிகையின் அழகு சேர்ந்த கருணை விழியாகிய தாமரையும் , திருமுகத் தாமரையும் , திருக்கர மலரும் , திருவடிக் கமலமும் ஆகிய பற்றுக்கோடுகளையன்றி வேறொரு பற்றுக்கோட்டையும் யான் அறிந்திலேன் .

அபிராமி அந்தாதி 59 வது பாடல் வரிகள்

தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59

விளக்கம் நீண்ட தனி வில்லும் , ஐந்து அம்புகளும் முறையே: கரும்பாகவும் மலராகவும் கைக்கொண்டு நின்ற தேவி
வேறு பற்றுக்கோடு இல்லையென்று நின்னைத் தியானிக்கும் தவவழியில் மனத்தைப் பழகும்படி செய்ய எண்ணினேனில்லை ;
பஞ்சை மிதிப்பதாயினும் அஞ்சுகின்ற மென்மையான அடிகளையுடைய தாய்மார் தாம் பெற்ற பிள்ளைகள் அறியாமையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கமாட்டார்கள் .

அபிராமி அந்தாதி 60 வது பாடல் வரிகள்

பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே? 60

விளக்கம் பாலைக் காட்டிலும் இனிய சொல்லையுடைய தேவி, குளிர்ச்சியையுடைய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை
வைத்தருள, திருமாலும் மற்றும் உள்ள தேவர்களும் வணங்கும்படி. நின்ற சிவபிரானது கொன்றைக் கண்ணியை அணிந்த:
நீண்ட சடையின் மேலிடத்தைக் காட்டிலும் , கீழே நின்று வேதங்கள் பாடுகின்ற உண்மையான பிரணவ பிடங்கள் தான்
கைக் காட்டிலும் அடியேனுடைய நகாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற தலையானது மிகவும் நன்றோ ?

அபிராமி அந்தாதி 61 வது பாடல் வரிகள்

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே. 61

விளக்கம் உலகத்து உயிர்க்கெல்லாம் மாதாவே, பார்வதிதேவியே, சிவந்த கண்ணையுடைய திருமாலுடைய அழகிய
தங்கையே, நாய் போன்ற என்னையும் நீ இங்கே நின் பார்வைக்கு விஷயமாகிற பொருளாகத் திருவுள்ளங்கொண்டு விரும்பி நீயே வலிய வந்து, இவனை ஆட்கொள்ளலாகும் , ஆகாது என்று ஆர௱யும் : நினைவு இல்லாமல் அடியேனை அடிமைகொண்டாய் நீ இருந்தபடி நின்னைப் பேய்போன்ற யான் அறியும் ஞானத்தை அருளினை அடியேன் எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன்.

அபிராமி அந்தாதி 62 வது பாடல் வரிகள்

தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே. 62

விளக்கம் மேரு மலையாகிய பொன்வில்லைக் கொண்டு அசுரர்களுக்குரிய திரிபுரத்தை அழித்து, மதம் பொருந்திய வெவ்விய
கண்ணையுடைய யானையின் தோலைப் போர்த்த செவ்விய வீரனாகிய சிவபெருமான் திருமேனி முழுவதும் நகிலாகிய குரும்பையடையாளத்தை வைத்த பிராணேசுவரியினுடைய தாமரைமலரைப் போன்ற சிவந்த கையிலுள்ள கரும்பு வில்லும் , மலரம்புகளும் எக்காலத்திலும் என் மனத்துள்ளே இருப்பனவாகும் ,

அபிராமி அந்தாதி 63 வது பாடல் வரிகள்

தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் திருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே. 63

விளக்கம் பெரியோர்களால் எடுத்தோதப்படும் ஆறு சமயங்களுக்கும் தெய்வம் அபிராமியாகிய இவளாக இருப்பதை அறிந்
திருந்தாலும் , இவளையன்றி வேறு தெய்வத்தை கூறும் சமயமும் உண்டு என்று அதனைப் பாராட்டிய வீணர்களுக்கு, அவர்கள்
உண்மை தெளியும்படி சில பிரமாணங்களைக் காட்டி, அவர்கள் மேலே செல்லும் நற்கதிக்கு உபகாரமாக அறிவுறுத்தப்படும்
பொருள்கள் மலைப் பாறையிலே அதனைத் தகர்க்கும் பொருட்டு மூட்டும் மாத்தூணை ஓக்கும் .

அபிராமி அந்தாதி 64 வது பாடல் வரிகள்

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் திருநிலமும் திசை நான்கும் ககனமுமே. 64

விளக்கம் தேவி, விணாக உயிர்ப்பலியை ஏற்றுக்கொள்ளும் புன்சிறு தெய்வங்களிடம் போய் மிக்க பக்தி கொள்ளேன் ;
நினக்கே அன்பு மேற்கொண்டேன் : ஆதலின் எந்தக் காலத்திலும் மின் தோத்திரமன்றி வேறொருவர் துதியைச் செய்யேன் ; பெரிய பூமியிலும் நான்கு திசைகளிலும் ஆகாயத்திலுமாகிய எங்கும் நின் திருமேனியின் ஒளியன்றி வேறு ஒன்றைக் காணேன் .

அபிராமி அந்தாதி 65 வது பாடல் வரிகள்

ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு திருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே! 65

விளக்கம் அபிராம வல்லீயே, நீ இயற்றிய வலிமைச் செயல் ,மேலுள்ள உலகங்களும் தேவலோகமும் பூவுலகமும் பார்க்கும்
படியாகக் காமனது உடலை முன் ஒரு காலத்து எரித்த யோகியாகிய சிவபெருமானுக்கு விசாலமான திருக்கரங்களும் , திருமுகங்களூம் முறையே பன்னிரண்டும் ஆறும் என்றுஅமைய அவதரித்த பழைய ஞானத்தையுடைய குமாரனும் உண்டாகியதல்லவா

அபிராமி அந்தாதி 66 வது பாடல் வரிகள்

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே. 66

விளக்கம் பசும்பொன் மலையாகிய மேருவை வில்லாகக்கொண்ட சிவபெருமானுடன் கவலையின்றி எழுந்தருளியிருக்கும் தேவி,அறிவாற்றல் ஒன்றையும் அடியேன் அறியமாட்டேன் ; சிற்றறிவினனாகிய யான் எங்கும் வியாபித்த நின் திருவடியாகய
சிவந்த தளிரையல்லாமல் வேரொரு பற்றையுடையே னல்லேன் ; தீவினையையுடைய யான் அந்தாதியாகத் தொடுத்த சொற்கள் பொருளில்லாத வீண் : சொற்களாயினும் இடையிடையே வைத்த நின் திருநாமங்கள் தோத்திரமாக உதவும் .

அபிராமி அந்தாதி 67 வது பாடல் வரிகள்

தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே. 67

விளக்கம் தேவி, நின்னை வாயால் துதிசெய்த, உடம்பால் வணங்கி, மின்னலைப்போலச் சுடர்வீடும் நின் திருமேனித் தோற்
தத்தை ஒரு கணப்போதாவது மனத்தில் இருத்தித் தியானம்செய்யாதவர் , கொடைத் தன்மை, குடிப்பிறப்பு, கோத்திரம் , கல்வி,
நல்ல குணம் ஆகியவற்றிற் குறைபாடுடையராகி உலக முழுவதும் ஒவ்வொருநாளும் பிச்சைப் பாத்திரத்தைக் கைக்கொண்டு
குடிசைகள்தோறும் பிச்சைக்காகத் திரிவார்கள் .

அபிராமி அந்தாதி 68 வது பாடல் வரிகள்

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே. 68

விளக்கம் பிருதிவியும் அப்புவும் அக்கினியும் வேகத்தையுடைய வாயுவும் படர்ந்த ஆகாசமும் ஆகிய ஐந்து பூதங்களிலும் முறையே பரவிய கந்தமும் , சுவையும் , ஒளியும் , பாசமும் , சத்தமுமாகிய தன்மாத்திரைகள் இயையும்படி. அவற்றினிடத்தே வியாபித்து நிற்கும் பரமேசுவரியாகிய சிவகாமசுந்தரியின் சிறிய ‘ திருவடிக் கண்ணே சார்ந்து நிற்கும் தவத்தை உடைய அடியார்கள் தமக்கே உரியதாகப் பெறாத செல்வம் ஓன்றும் இல்லை.

அபிராமி அந்தாதி 69 வது பாடல் வரிகள்

தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 69

விளக்கம் பூவை அணிந்த கேச பாரத்தையுடைய அபிராமியின் கடைக்கண்கள் , அத்தேவியின் அன்பர்களுக்கு எல்லாவகை ஐசுவரியங்களையும் தரும் ; கல்வியைக் கொடுக்கும் ; ஒரு நாளேனும் தளர்ச்சியை அறியாத உறுதியான மனத்தை அளிக்கும் . தெய்விக அழகை வழங்கும் ; மனத்தில் வஞ்சகமில்லாத உறவினரை ஈயும் ; இன்னும் எவை எவை நல்ல பொருட்களோ அவை எல்லஈவற்றையும் வழங்கும் .

அபிராமி அந்தாதி 70 வது பாடல் வரிகள்

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. 70

விளக்கம் கடம்பவனத்தில் , பண்களாற் களிக்கும் குரலோடு இசைந்த வீணையும் , அதனை ஏந்திய திருக்கரமும் , திருத்தனபாரமும் , பூவுலகமெல்லாம் தரிசித்துக் களிக்கும் பச்சைத் திருநிறமும் ஆகத் திருக்கோலங்கொண்டு, மதங்கரென்னும் யாழ்ப்பாணர் குலப் பெண்களில் ஒருத்தியாக அவதரித்த எம்பெருமாட்டியின் அளவிடற்கரிய பெரிய அழகை அடியேன் விழிகள் மகிழும்படி தரிசனம் செய்தேன் .

அபிராமி அந்தாதி 71 வது பாடல் வரிகள்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே! 71

விளக்கம் கழிந்ததற்கு வருந்தி நின்ற நெஞ்சமே, தன் அழகுக்குவேறு யாரும் ஒப்பற்ற கொடிபோன்ற அபிராமி, அரிய வேதங்களிலே பயிலுவதனாம் சிவந்த திருவடி. மலர்களை உடையாள் , குளிர்ச்சியும் பெருமையும் உடைய பிறையைத் திருமுடியிலே. சூடும் மெல்லியலாகிய யாமனை யென்னும் .கற்பகப் பூங்கொம்பு” இதிருக்கும்போது நீ இரங்குதலை ஒழிவாயாக ; உனக்கு வரும் குறை யாது ?

அபிராமி அந்தாதி 72 வது பாடல் வரிகள்

என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண்; திரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே. 72

விளக்கம் அகன்ற உயர்ந்த வானத்தின் ௧ண் உள்ள மின்னலுக்கு. ஒரு குற்றத்தைக் கற்பித்து அதனினும் மெலிந்து நின்ற நுணுகிய திருவிடையையும் மென்மையாகிய இயல்பையும் உடையாய் , எம்பிரானாகிய சிவபெருமான் நின் ஊடல் கண்டு தன் குறையை நீக்கி அவ்வூடலைத் தீர்க்கும் பொருட்டு நின்னை வணங்கித் தன் சடாபாரத்தின்மேல் வைத்த நின்றன் திருவடித் தாமரைகளையே என் குறைகள் நீங்கும்படி நின்று துதிக்கின்றேன் ; இனிமேல் யான் பிறவியை அடைந்தால் அது நின் குற்றமே? அல்லாமல் வேறு யார் குற்றம் ?

அபிராமி அந்தாதி 73 வது பாடல் வரிகள்

தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே. 73

விளக்கம் அபிராமி அம்மைக்கு உரிய மாலை கடம்பு; ஆயுதம்பஞ்ச புட்பபாணம் ; வில் கரும்பு; அவளுடைய மந்திர சாதகர் –
களாகிய பைரவர்கள் அவளைத் துதிக்கும் காலம் அர்த்த யாமம் ;எமக்கு உய்வைத் தருவதற்கு என்று வைத்த பாதுகாப்பு அவள்
திருவடி. அவளுடைய வந்த திருக்கரங்கள் நான்கு ; திருமேனி ஒளி சிவப்பு ; திருநாமம் திரிபுரை என்பது ; கண்கள் மூன்று ஆம் .

அபிராமி அந்தாதி 74 வது பாடல் வரிகள்

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74

விளக்கம் மூன்று கண்களையுடைய சிவபிரானும் வேதங்களும் திருமாலும் பிரமதேவனும் புகழ்ந்து பாராட்டுகன்ற ஆபிராம
வல்லியின் இரண்டு திருவடிகளையே முத்திப் பயனென்றுகொண்டு- தியானிப்பவர் , அரம்பை மகளிர் நடம்புரியவும் , பாடல்களைப்பாடவும் அவற்றைக் கண்டும் கேட்டும் இன்புற்றுப் பொன்னிறம் பெற்ற பாயலில் : அவர்களோடு பொருந்தி இன்புறும் பொள்னிறமாகிய கற்பகச் சோலையில் இந்திரராகி வீற்றிருப்பார்களா

அபிராமி அந்தாதி 75 வது பாடல் வரிகள்

தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75

விளக்கம்
அட்ட குலாசலங்களையும் , மேலே கிளரும் உப்புத்தன்மையையுடைய கடல் முதலிய ஏழு கடலையும் , பதீனான்கு
புவனங்களையும் பெற்றெடுத்த திருவயிற்றையும் , வாசனை பரவியமலரை யணிந்த கூந்தலையும் உடைய தேவியின் திருவுருவத்தைத் இயானம் செய்யும் அடியார் , இந்திர பதவி பெற்றுக் கற்பக விருட்சத்தின் நிழலில் வீற்றிருப்பர் : அன்பு பூமியில் பிறந்திறந்து இடையறவீன்றி வரும் பிறவியைத் தம்மைப் தாய்மார் இல்லாமையாலே மங்கச் செய்வர் .

அபிராமி அந்தாதி 76 வது பாடல் வரிகள்

குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே. 76

விளக்கம் வண்டுகள் கிண்டுவதனால் மணமுடைய தேன் கட்டவிழ்ந்து சொரிகின்ற கொன்றைக் கண்ணியைத் திருமுடியி
லணிந்த சிவபிரானது ஒரு பகுதியை அவர் திருமேனியினின்றும் . வலியக் கவர்ந்து அங்கே குடி புகுக்தருளிய பஞ்ச புட்பபாணத்தையுடைய பைரவீயே, நின் திருமேனிக் கோலத்தை யெல்லாம் அடியேன் மனத்துள் தியானம் செய்தேன் ; அதன் பயனாக நின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து யமன் என் உயிரைக் கொள்வதற்கு. .வருகின்ற நுணுகிய வழியை அடைத்துவிட்டேள் .

அபிராமி அந்தாதி 77 வது பாடல் வரிகள்

பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே. 77

விளக்கம் பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சகர் உயிரைப் பலியாகக் கொள்ளும் உயர்ந்த பெருமையை
யுடைய சண்டிகா தேவி, காளி, விளங்குகின்ற கலைகளாகிய உயிரங்களையுடைய சிறந்த வட்டமான மேகலையை யுடையவள் , மாலினி. சூலி, வராகி என்று குற்றந் தீர்ந்த நான்கு வேதங்களில் சேர்ந்த தேவியின் திருநாமங்களை அறிந்தோர் கூறுவர் .

அபிராமி அந்தாதி 78 வது பாடல் வரிகள்

செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே. 78

விளக்கம் தந்தத்தாற் கடைந்த செப்பும் , பொற்கலசமும் போன்ற அழகிய நகிலின்மேல் அப்பிய கலவைச் சந்தனத்தை
யுடைய அபிராமவல்லி காதில் அணிந்த முத்துக்கொப்பையும் , வயிரக்குழையையும் திருவிழியின் கொழுத்த கடைசியையும்
பவளம்போன்ற திருவாயையும் அதன்கண் மலர்ந்த’ புன்னகையாகிய நிலவையும் என் இரண்டு கண்களிலும் எழுதிவைத்தேன் .

அபிராமி அந்தாதி 79 வது பாடல் வரிகள்

விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே. 79

விளக்கம் அபிராமவல்லிக்குத் திருவிழியில் எமக்கு வழங்கும் திருவருள் இருக்கின்றது. அவ்வருளைப் பெறும் பொருட்டு
வேதங்கள் கூறியுள்ள நன்னெறியின்படியே அவளை வழிபட்டுத் தியானிக்க எமக்கு அநுகூலமாகிய நெஞ்சம் இருக்கிறது ; அந்த வேதநெறி திருக்கவும் , பழிச்செயல்களிலே ஈடுபட்டுத் இரிந்து கொடிய பாவங்களையே செய்து பாழான நரகக்குழியில் அழுந்துகின்ற கீழ் மக்களோடு இனி என்ன சம்பந்தம் நமக்கு உண்டு?

அபிராமி அந்தாதி 80 வது பாடல் வரிகள்

கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே. 80

விளக்கம் பொற்றாமரையில் எழுந்தருளி யிருக்கும்அழகியாகிய தேவி, ஒன்றுக்கும் பற்றுத என்னைத் தன்அடியாருள் ஒருவனாகச் சேர்த்தருளியவாறும் , ௮ங்ஙனம் சேர்த்துப் பின் என்பாலுள்ள கொடிய இருவினைகளையும் போக்கியவாறும் , என்பால் அருள் புரிய ஒடி வந்தவாறும் , தன் திருக்கோலத்தை உள்ளபடியே காட்டியவாறும் , அதனைத் தரிசித்து
அறிந்த கண்ணும் மனமும் ஆனந்த மேலீட்டால் மகிழ்கின்றவாறும் , இவ்வாலெல்லாம் என்னைத் திருவருள் நாடகம் ஆட்டியவாறும் என்ன அதிசயம்

அபிராமி அந்தாதி 81 வது பாடல் வரிகள்

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே. 81

விளக்கம் தேவி, தேவ மாதர் நின் பரிவார சக்திகளாக இருத்த லினால் உன்னையன்றி வேறு ஒருவரை நான் வணங்கேன் ; வாழ்த்துதலும் செய்யேன் ; நெஞ்சில் வஞ்சகத்தையுடைய மக்களோடு தொடர்பு கோளென்; எனது பொருளெல்லாம் நின்னதேயென்று எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்து நிச்சலனமாக நிருக்கும் யோகியர் சிலர் ; அவர் யாவரோடும் மாறுபடாமல் உறவு பூண்டிருப்பேன் ; அறிவு சிறிதும் இல்லேனாயினும் என்பால் நீ வைத்த பெரிய கருணை இருந்தவாறு என்னே !

அபிராமி அந்தாதி 82 வது பாடல் வரிகள்

அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன். 82

விளக்கம் வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் எழுந்தருளிய தேவி, சகல அண்டங்களும் நின் ஒனியாகப் பரவி நிற்கக்
காரணமான பிரகாசிக்கும் அழகிய நின்றன் திருமேனியைத்தியானிக்குந்தோறும் என் அந்தக்கரணங்கள் ஆனந்த மயமாகிப் ‘
பூரித்துத் தத்துவ எல்லைகளைக் கடந்து பரவெளியாகி விடுவதாயின் ,நீ இயற்றிய இந்த அதிசய உபாயத்தை எவ்வாறு
அடியேன் மறப்பேன்

அபிராமி அந்தாதி 83 வது பாடல் வரிகள்

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே. 83

விளக்கம் அபிராமியே, நின்றன் திருவடியாகிய மணமுடையதாமரை மலர்க்கண் : பலவகையாக விரவிய அன்றலர்ந்த மலர்களை ‘அருச்சித்து இரவும் பகலும் அவற்றை வழிபடும் சக்தி உடையவர்கள் , : தேவர்கள் யாவரும் பரவும் பதவியையும் ஐரா
வதத்தையும் ஆகாச கங்கையையும் வலிமையையும் வச்சிராயுதத்தையும் கற்பகச் சோலையையும் உடைய இந்திரர் அவர் .

அபிராமி அந்தாதி 84 வது பாடல் வரிகள்

உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84

விளக்கம் நும்மவரே, எல்லாவற்றையும் உடையவளாக பரமேசுவரியை, திருவிடையில் , துவளுகின்ற செம்பட்டாகிய
உடையையுடையவளை, விளங்குகின்ற பிறையை அணிந்த சிவந்த சடையையுடையவளை, வஞ்சகர் நெஞ்சினிடத்தே ஒருகாலும் எழுக்கருளாதவளை, விளங்குகன்ற நுண்ணிய நூலைப்போன்றதிருவிடையை உடையவளை, எங்கள் பெருமானாகிய சிவபிரானது இடப்பாகத்தில் வீற்றிருப்பவளை , இனி இந்த உலகத்தில் என்னை மீண்டும் படையாமல் இருக்கப்போகிறவளை, உங்களையும் இனிப்படையாத வண்ணம் தரிசனம் செய்து கவலையற்று இருங்கள் .

அபிராமி அந்தாதி 85 வது பாடல் வரிகள்

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே. 85

விளக்கம் அடியேனுடைய துக்கங்களை யெல்லாம் போக்குகின்ற: திரிபுரசுந்தரியின் திருக்கையிலுள்ள பாசாங்குசமும் ,
குளிர்ச்சியைப் பெற்ற சிறகையுடைய வண்டுகள் முழங்கும் புதுமலர்களாகய ஐந்து அம்புகளும் , கரும்பாகிய வில்லும் , அவள்
திருமேனியும் , சிறிய திருவிடையும் , கச்சை யணிந்து குங்குமக் குழம்பு பூசிய நகிலும் , அவற்றின்மேல் அணிந்த முத்துமாலையும் பார்க்கும் திசைதோறும் தோன்றும் .

அபிராமி அந்தாதி 86 வது பாடல் வரிகள்

மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே. 86

விளக்கம் பாலையும் தேனையும் வெல்லப் பாகையும் போன்றஇனிமையையுடைய மெல்லிய சொற்களைப் பேசும் தேவி, திருமாலும் அயனும் தேடவும் , வேதம் தேடவும் , தேவர் தேடவும் :அவர்களுக்கு அரியனவாய் நின்ற நின் திருவடிகளையும் , வளையலணிந்த திருக்கரங்களையும் தாங்கியபடி, மேலெழுந்த மூன்றுகிளைகளையுடைய வேலாகிய திரிசூலத்தை யமன் என்மேல் விடும் அக்காலத்தில் : என் முன்னே வெளிப்படையாக வந்து சேவை சாதித்தருள்வாயாக.

அபிராமி அந்தாதி 87 வது பாடல் வரிகள்

மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே. 87

விளக்கம் தம் நெற்றித் திருக்கண்ணால் மன்மதனை எரிக்கும்பரமேசுவரரது அழிவில்லாத தவ விரதத்தை உலக முழுவதும்
பழிக்கும்படி குலைத்து: அவர் திருமேனியில் ஒரு பாகத்தைக் கைக்கொண்டு ஆட் செய்யும் பராபரையே, சொல்லுக்கும் எண்ணத்திற்கும் எட்டாத நின் திருவுருவமானது அடியேனுடைய கண்களுக்கும் பூசை முதலிய கிரியைக்கும் வெளிப்பட்டு நின்றது இஃது என்ன ஆச்சரியம் !

அபிராமி அந்தாதி 88 வது பாடல் வரிகள்

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்
தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே! 88

விளக்கம் பகைவராகிய அசுரருடைய முப்புரங்களும் அன்றுஎரியுமாறு மேருமலையாகிய வில்லை வளைத்த திருக்கரத்தானும் வெண்டாமரை மலரில் வீற்றிருகீகும் பிரமதேவனது தலையொன்றைத் தடிந்த திருக்கரத்தானுமாகிய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளிச் சிறப்புற்றோய் , வேறொரு பற்றுக்கோடற்ற தமியேனாகிய யானும் உன் பாரம் என்று முறையிட்டு உன்னைபுகல் அடைந்தேன் ; நின் பத்தருக்குள் சேரும் தகுதியுடையவனல்லன் இவன் என்று கருதி நீ தள்ளினால் அது நின் பெருமைக்குத்தகாது.

அபிராமி அந்தாதி 89 வது பாடல் வரிகள்

சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்ற, அறிவு
மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே. 89

விளக்கம் சிறப்புற்ற தாமரையில் வீற்றிருக்கும் திருமகளாகஉள்ள தேவி, நின் சிவந்த திருவடியைத் தன் சென்னியிலே ஒருவன் வைக்க அவனுக்கு மோட்ச பதவியைத் தரும் நின்னுடைய பதியாகிய பரமேசுவரரும் நீயூம் உடம்போடு உயிருக்கு உள்ள
நட்பு அற்று அறிவு அழிந்து எல்லாம் மறக்கின்ற மரணகாலத்தில் துரியம் கடந்த நிலையில் வரும் சிவானந்த ௮னுபவமாகிய
துாக்கத்தைத் தரும்பொருட்டு எழுந்தருளி வந்து, அங்ஙனம் வருதல் வருத்தம் தருவதாயினும் அவ்வருத்தத்தை ஏற்று அடி
யேனுக்கு முன்னே வந்து காட்சி கொடுத்தருளுதல் வேண்டும் .

அபிராமி அந்தாதி 90 வது பாடல் வரிகள்

வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
திருந்தாள் பழைய திருப்பிடமாக இனிஎனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90

விளக்கம் வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப்பாற்கடலிலே பிறந்த அமுதத்தை வழங்கிய கோமளையாகிய
தேவி, அடியேன் ஜனன மரணங்களில் வருந்தாத வண்ணம் என் இருதய கமலத்தில் தானே வந்து புகுந்து அதுவே தன் பழைய ,
இருப்பிடம்போல ஆகும்படி. இருந்தாள் ; இனிமேல் எனக்குக்கைவராத அரிய பொருள் ஒன்றும் இல்லை.

அபிராமி அந்தாதி 91 வது பாடல் வரிகள்

மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே. 91

விளக்கம் மெல்லிய நுண்மையாகிய திருவீடை மின்னலைப்போல உள்ளவளை, விரிந்த சடாபாரத்தையுடைய சிவபிரான் தழுவிய மெல்லிய நகிலின் நிறம் பொன்னைப்போல திருப்பவளாகிய அபிராமியை வேதம் புகழ்ந்து சொல்லியபடி. வழிபடும் அடியவர்களைத் தொழுகின்றவர்களுக்கு அத்தேவி பல வாத்தியங்கள் ஆரவாரித்து எழ வெள்ளை: யானையின்மேல் ஏறிச் செல்லும் இந்திரபதவியை அருள் செய்வாள் .

அபிராமி அந்தாதி 92 வது பாடல் வரிகள்

பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே. 92

விளக்கம் மும்மூர்த்திகளும் பிறர் யாவரும் வணங்கித் துதிக்கும்அரும்புகன்ற புன்னகையையுடைய தேவி, நல்ல பக்குவம்
பெற்று அப்பக்குவத்தில் என் உள்ளம் உருக உன் திருவடியில் பற்றுக்கொண்டு உன் திருவுள்ளத்துக்கு உவப்பான நெறியிலே
ஒழுகும்படி அடி.யேனை ஆட்கொண்டாய் ; ஆதலின் யான் இனிமேல் வேறொருவர் சமயக்கொள்கையைப் பெரிதென்று எண்ணி அறிவு கலங்கேன் ; அச்சமயத்தினர் ஒழுகும் வழியிலும் போக மாட்டேன் .

அபிராமி அந்தாதி 93 வது பாடல் வரிகள்

நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 93

விளக்கம் இந்த உலகங்களை யெல்லாம் ஈன்றெடுத்த பரமேசுவரிக்கு அரும்பிய மூலை தாமரை யரும்பு; அருளால் நிரம்பி
முதிர்ந்த கண் மருட்சியைப் பெற்ற மான்கண் ; இங்ஙனம் கூறுதல் சிரிப்புக்கு இடமாம் . அவளுக்கு முடிவும் இல்லை ; அவ்வாறே
பிறவியும் இல்லை? அப்படியிருக்க அவளை மலைக்குமகள் என்று கூறுவது வீணே ; இங்கனம் இவளுடைய ஓன்றற்கொன்று ஓவ்
வாத இயல்புகளை ஆராய்ந்து போற்றுதல் நம் அளவுக்கு மிஞ்சியசெயலாம் .

அபிராமி அந்தாதி 94 வது பாடல் வரிகள்

விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே. 94

விளக்கம் தன்னை விரும்பிப் பணியும் அடியார்கள் , கண்களில் நீர் மல்க உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிய ஆனந்தம் . மேன்
மேலும் பொங்க ஆன்ம போதத்தை இழந்து தேனுள் மயங்கிய வண்டுபோல மயங்கி வார்த்தை குழறி முன்னே தாம் நினையாது.
சொன்னவையும் பொருளுடையனவாகத் தரும் பித்தராவரென்ரால் , ௮வர் கடைப்பிடிக்கும் அபிராமிக்குரிய சமயம் நன்மையையுடையது.

அபிராமி அந்தாதி 95 வது பாடல் வரிகள்

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே! 95

விளக்கம் என்றும் அழிவற்ற குணமலையே, கருணாசமுத்திரமே, பருவதராசன் பெற்ற மெல்லியலே, நன்மையே வந்தாலும்
தீமையே வந்தாலும் அவற்றைக் குறித்து நான் நினைப்பது ஒன்றும் இல்லை; என்னைப்பற்றி வருவதெல்லாம் உனக்கே பாரம் ?
எனக்கு உள்ள உடல் பொருள் ஆவி எல்லாம் என்னை நீ ஆட் கொண்ட அன்றே் உன்னுடைய பொருளென்று அர்ப்பணம்
செய்துவிட்டேன் .

அபிராமி அந்தாதி 96 வது பாடல் வரிகள்

கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே. 96

விளக்கம் மெல்லிய :கொடி போன்றவளை, அகவிதழையுடை தாமரையாகிய ஆலயத்தில் எழுந்தருளி யிருக்கும் யாமளாகமத்ததினால் புகழப்பட்ட வலிமையையுடையவளை, குற்றமற்றவளை, ஓவியத்தில் எழுதுதற்கு அரிய சாமள நிறம் பொருந்திய சகல கலைக்கும் தலைவியாகிய மயில் போன்றவளை, தம்மால் இயன்ற அளவும் உபாசிப்பவர்கள் ஏழுலகிற்கும் அரசர்களாவார்கள் .

அபிராமி அந்தாதி 97 வது பாடல் வரிகள்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே. 97

விளக்கம் சூரியன் , சந்திரன் , அக்கினி, குபேரன் , இந்திரன் ,தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் , புராரி, திருமால் , அகத்தியர் , மோதிப் போர் செய்கின்ற வேற்படையையுடைய முருகன் , விகாயகர் , மன்மதன் முதலாகப் புண்ணியச் செயல்களைச் சாதனை செய்தவர்களாகய கணக்கில்லாத பேர்கள் பாலாம்பிகையாகிய அபிராமியை வழிபடுவர் .

அபிராமி அந்தாதி 98 வது பாடல் வரிகள்

தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே. 98

விளக்கம் உண்மை யுணர்வு பொருந்திய அடியார்களது மனத்திலன்றி வஞ்சகருடைய பொய் நிரம்பிய மனத்தில் ஒருகாலும் புகுதலை அறியாத இளமையையுடைய பொலிவு பெற்ற குயில் போலும் தேவி, நின் ஊடலைத் தீர்க்கும்பொருட்டு நின் திருவடித்
தாமரையை வருடி, அதனால் ஊடல் தீராமை உணர்ந்து பின் அத்தாமரையைத் தம் திருமுடிமேற் சூட்டிக்கொண்ட சிவபிரானுக்கு -அக்காலத்தில் திருக்கரத்தில் இருந்த அக்கினியும் ,திருமுடியில் இருந்த கங்கையும் மறைந்துபோனது எவ்விடத்தில் !

அபிராமி அந்தாதி 99 வது பாடல் வரிகள்

குயிலாய் திருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்
மயிலாய் திருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த
வெயிலாய் திருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே. 99

விளக்கம் கைலாய மலையாளராகிய சிவபிரானுக்கு இமயான் திருமணம் செய்து கொடுத்த கனவிய பொற்குழையை அணிந்ததேவியானவள் , கடம்பவனத்தில் . குயிலாக விளங்குவாள் இமாசலத்தில் அழகும் பெருமையும் உடைய மயிலாக இருப்பாள் வானத்தின்மேல் வந்து உதித்த சூரியனாக இருப்பாள் ; தாமரையின்மேல் அன்னமாக எழுந்தருளி யிருப்பாள் .

அபிராமி அந்தாதி 100 வது பாடல் வரிகள்

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே. 100

விளக்கம் தன்னைத் தமுவிய சிவபிரானது திருமார்பின் மாலையாகிய கொன்றையின் மணம் வீசுகின்ற
கொடிபோன்ற அபிராமியினுடைய மூங்கிலைப் பொருது வென்ற. அழகிய நீண்ட திருத்தோள்களும் , கரும்பாகிய வில்லும் , ஆண் பெண்கள் ஒருவரை ஒருவர் விரும்பும்படி பொரும் வலிமையையுடைய தேனையுடைய அழகிய மலரம்புகளும் , வெள்ளிய புன்மூறுவலும் , மான் கண்ணை வென்ற திருவிழியும் அடியேனது. நெஞ்சில் எக்காலத்தும் தோன்றிக் கொண்டிருக்கினற்ன .

அபிராமி அந்தாதி 101 வது பாடல் வரிகள்

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே… 101

விளக்கம் எங்கள் தாயை, அபிராமவல்வியை, அண்டங்களையும் ஈன்றருளியவளை, மாதுளம் பூவைப்போன்ற செந்நிறம்
பொருந்தியவளை, புவி முழுவதும் பாதுசாத்தவளை, அங்குச்மும் பாசமும் மலர்ப்பாணமும் கரும்புவில்லும் தன் நான்கு அழகிய
திருக்கைகளிலே வைத்தவை, மூன்று கண்களையுடையவவளை வணங்கும் அடியவர்களுக்கு வரும் துன்பம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *