விரதங்கள்

விநாயகர் பெருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று

விநாயகர் பெருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று

  1. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை விரதம்
  2. விநாயகர் சதுர்த்தி விரதம்,
  3. ஒவ்வொரு மாத வளர்பிறை சதுர்த்தி விரதம் ஆகும்.

சதுர்த்தி விரதம்

விநாயகரை துதித்து பார்வதி தேவியே விரதம் இருந்ததாக வரலாறு தெரிவிக்கின்றன. விநாயகர் சதுர்த்திக்கு பிறகும் தொடர்ந்து விரதம் கடைபிடித்து அடுத்து வருகிற சங்கடஹ சதுர்த்தி அன்று விரதத்தை முடிக்க வேண்டும். இயலாதவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் மட்டுமாவது கடைபிடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று களிமண் பிள்ளையாரை மா கோலமிட்ட மணைப்பலகையின் மீது வைத்து அவருக்கு பிடித்தமான எருக்கம் பூ அருகம்புல் மற்றும் இதர் பூக்களால் ஆன மாலைகளை அலங்கரித்து வஸ்திரம் உடுத்தி, ஒற்றை பூணூ இட்டு வண்ணகுடை வைத்து விநாயகர் பெருமானுக்கு பிடித்தமான அப்பம், மோதகம், கொழுக்கட்டை, பாயாசம், சுண்டல் மற்றும் பழ வகைகள் முதலியவற்றை நெய்வேத்தியங்களாக வைத்து விநாயகர் துதி சொல்லி அன்போடு ஆனை முகத்தினை நாம் துதிக்க நமக்கு பூர்ன மனநலம், உடல்நலம் வாழ்வில் சகல வளமும் கிட்டும். விக்கினங்களை எல்லாம் போக்க கூடிய விநாயகரின் பாதங்களை என்றும் தொழுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *