ஆன்மிகச் செய்திகள்

காயத்ரி ஜபம் செய்யும் முறை – காயத்ரி மந்திர சிறப்பு

காயத்ரி மந்திரம் சிறப்பு

காயத்ரி ஜபம் பொருள் அறிந்து மிகவும் அவசியம், காயத்ரி மஹா மந்திரத்தை பற்றி காஞ்சி ஆச்சார்ய சுவாமிகள் கூறுகையில் காயத்ரி என்றால் எவர்கள் தன்னை தானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம்.
காயந்தம் த்ராயதே யஸ்மாத் யாத்ரிஇ) த்யபித்யதே!

காயத்ரி ஜபம் செய்யும் முறை:

மிகவும் பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து, உள்ளத்தை ஒருமுகப்படுத்தி பலமாகக் கூறாமல், மூச்சை அடக்காமல் 5 இடங்களில் நிறுத்தி மிகவும் ஜாக்கிரதையாக உள்ளத்துள்ளே ஜெபிக்க வேண்டும். மௌனமாக ஜெபிக்க வேண்டும். இதுவே மிகச் சிறந்த முறை. ஒருவன் நாள்தோறும் தவறாமல் காயத்ரி மந்திரம் ஜெபிப்பானாயின் அவனது இரு புருவங்களுக்கு மத்தியில் ஒருவித தேஜஸ்காணப்படும். சாமானியர்களின் கண்களுக்குத் தெரியாது. மிகப்பெரும் மகரிஷிகளால்தான் அதைக் கண்டு உணர முடியும்.
காயத்ரி மந்திரத்தை நாள் ஒன்றுக்கு மூன்று தடவைகள் அதாவது (காணாமல், கோணாமல், கண்டு) சூரியன் உதிப்பதற்கு முன்னர், தலைக்கு நேராக இருக்கும் சமயம், அஸ்தமனத்திற்கு முன்னர் 108 தடவைகள் ஜெபிக்க வேண்டும். இயலவில்லை எனில் காலை ஒரு தடவை மட்டுமாவது ஜெபிக்கலாம். இதை சந்தியாவந்தனம் எனவும், அனுஷ்டானம் எனவும் கூறலாம். இம்மந்திரத்தைக் கூறி எத்தனையோ மகான்கள், ரிஷிகள் மிகப்பெரும் பேறுகளைப் பெற்றுள்ளனர்.

காயத்ரி மந்திரதின் பலன்

காயத்ரியின் அருளைப் பெற்ற ஒருவன் இயல்பில் எவ்வளவு தீயவனாயிருந்தாலும், காயத்ரியை உபாசிக்க எண்ணிய கணத்திலிருந்து பரம சாத்வீகனாகவும் பவித்திரனாகவும் மாறி விடுவான். நாளடைவில் அவனுடைய பக்தி, சிரத்தை, சாதனைகளின் காரணமாக அவனுடைய நற்பண்புகள் மேலும் வளர்ந்தோங்கத் தொடங்கும்.
காயத்ரியைக் கூறுவதால் உடல் ஆரோக்யமடையும். நோய் நொடிகள் அணுகா, பலம், தேஜஸ், ஓஜஸ் ஆகியவற்றை நாம் பெறமுடியும். வாக்கு பலிதம் ஏற்படும். புகழ், செல்வம், சீர்த்தி, நன்மைகள் ஆகியன ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *