விரதங்கள்

வெள்ளிக்கிழமை விரதம் – Vellikizhamai Viratham in Tamil

வெள்ளிக்கிழமை விரதம்

சக்திக்கு வெள்ளிக்கிழமை விரதம்

அம்மனுக்கு உரிய விரத நாள் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் சக்தி வழிபாடு காலம் காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக சக்தி விரதம் வெள்ளிக்கிழமைகளில் பெண்களே இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் சௌபாக்கியமும், திருமணம் ஆன பெண்களுக்கு அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்தின் ஆயுட்காலம் பெருகும், செல்வ செழிப்பும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டிடும். அன்றைய தினம் விரதம் இருப்போர் குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்து லலிதா சஹஸ்ரநாமம் பராயணம் செய்தால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும். தட்சணாயனம், உத்தராயனம் என்றும் இவ்விரு அயனங்களுமே புண்ணிய காலம் ஆகும். இவ்விரு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இம்முறையை பற்றி இவ்விரு மாதங்களில் வரும் அமாவாசை, கிருத்திகை மிகவும் விசேஷம்

முருகனுக்கு வெள்ளிக்கிழமை விரதம்

உடையதாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.

"வெள்ளிநாள் விரதந்தானே விண்ணவர் உலகைக் காத்த
வள்ளல்தன் விரதமாகும். மற்றது புரிந்த மேலோர்
உள்ளமேல் நினைந்து மெல்லாம் ஒல்லையின் முடியுமன்றே"

என்று கந்தபுராணம் உயர்வாகச் சொல்கிறது.

விநாயகர்கு வெள்ளிக்கிழமை விரதம்

சதுர்த்தி விரதம் மட்டுமல்லாது விநாயகர் பெருமானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது பழக்கத்தில் இருந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *