பெருமாள் பாடல்கள்வைணவம்

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | Kurai ondrum illai lyrics tamil

Kurai ondrum illai lyrics in tamil.

பல்லவி – ராகம்: சிவரஞ்சனி

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா …,

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா …,

அனுபல்லவி – ராகம்: சிவரஞ்சனி

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா …,

சரணம் 1 – ராகம் சிவரஞ்சனி

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா …,

சரணம் 2 – ராகம்: காபி

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா …,

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா …,

சரணம் 3 – ராகம்: சிந்துபைரவி

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா …,

யாரும் மறுக்காத மலையப்பா …,
யாரும் மறுக்காத மலையப்பா …,
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா …,
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா …,

One thought on “குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | Kurai ondrum illai lyrics tamil

Comments are closed.

%d bloggers like this: