சோழவள நாட்டில் திருநாட்டியத்தான்குடியில் வேளாள மரபிலே கோட்புலியார் அவதரித்தார். இவர் சோழ மன்னரது படைத் தலைவராக விளங்கிப் பகைவர்களை வென்று புகழ் பெற்றவர். இவர் தாம் பெறும் ஊதியங்களை எல்லாம் சிவபெருமசலுக்குச் செந்நெல் வாங்கி அவற்றைச் சேகரித்து வைப்பதிவேமே செலவழித்தார். ஒரு சமயம் இவர் அரசனது ஆணைப்படிப் போருக்குச் செல்ல நேர்ந்தபோது, தமது சுற்றத்தினரிடம் சிவபெருமானுக்கு அமுது படைப்பதற்காகத் தாம் சேமித்து வைத்த நெற்களஞ்சியங்கலை எல்லாம் கொடுத்துச் சிவபெருமானுக்குப் படைக்கச் சொல்லிப் போயினார் ஆயின் இவர் சென்ற சிறிது காலத்திற்கெல்லாம். நாட்டில் பஞ்சம் ஏற்படவே இவருடைய சுற்றத்தினர் கோட்புலியார் கொடுத்த நெல்லைத் தம் செலவுக்கு உபயோகித்துவிட்டனர். போருக்குச் சென்ற கோட்புலியார் தம் ஊருக்குத் திரும்பினார். திரும்பியதும் தம் சுற்றத்தினர் செய்த தீங்கை அறிந்தார். மனத்திலே மிகுந்த பகைமை கொண்டு அவர்தம் சுற்றத்தினரைத் தமது மாளிகைக்கு வரும்படி அழைத்தார். ஆசையுடன் வந்த சுற்றத்தினரை எல்லாம் தமது வாலினால் இவர் கொன்றார். தாம் சிவனுக்களித்த உணவை உண்டதால் பசுங்குழவி ஒன்றையும் தூக்கி எறிந்து கொன்றார். இவரது செய்கையைக் கண்டு தம்பால் இவர் கொண்ட அன்பை எண்ணி வியந்து சிவபெருமான் இவர்முன் தோன்றி. "அன்பனே தின்னால் கொல்லப்பட்ட அனைவரும் சிறந்த உலகினை அடைந்து பின் தமது திருவடியை அடைவார்கள் நீ இப்போதுள்ள நிலைமையிலேயே தம்முடன் வருவாயாக" என்று கூறி இவருக்கு இணையில்லா முத்தி அளித்தனர்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.