7. அமர்நீதி நாயனார்


வரலாறு:


         சோழ நாட்டில் பழையாறை என்னும் பழம்பதி ஒன்று உண்டு. அங்கு வணிகர் குலத்தில் அமர் நீதி நாயனார் என்னும் அடியார் ஒருவர் அவதரித்தார். அவர் பொன், முத்து, இரத்தினம், ஆடை முதலிய பொருள்களை விற்றுக் குன்றுபோல் பெருநிதி சேர்த்துக் குபேரனைப் போல் பெருவாழ்வு வாழ்ந்தார். அவர் எப்போதும் சிவனடியார்களையே ஆதரிக்கும் திருவுள்ளம் படைத்தவர். அவரவர் குறிப்புணர்ந்து போர்வையும் அரைஞாணும், கோவணமும் அளித்துவந்தார். அமர்நீதி தாயனார் அடியார்கள் பொருட்டுத் திருநல்லூரில் மடம் ஒன்று கட்டினார். அம்மடத்தில் சிவனடியார்களுக்கு அமுதளித்தல் முதலிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார்.


nayanargal

சிவபெருமான் சோதித்து அருளுதல் :


         சிவபெருமான் அவருடைய அன்பை உலகறியச் செய்யும் பொருட்டு, ஒரு பிரமச்சாரி வேடம் பூண்டு திருமடத்தை அடைந்தார். அமர்நீதி நாயனார் அவரை முகமலர்ந்து வரவேற்று அகமலர்ந்து இன்சொல் கூறி உபசரித்தார். பிரமச்சாரி தாம் கொண்டு வந்த கோவணத்தை அவரிடம் தந்து, "இதன் பெருமை அளவில்லாதது. இதனைப் பத்திரப்படுத்தி வைப்பாயாக" என்று கூறி நீராடச் சென்றார். அமர்நீதியார் பத்திரப்படுத்திவைத்த கோவணம் சிவபெருமான் மாயையால் மறைந்தது. பிரமச்சாரி நீராடி மழையில் நனைந்து வந்து அமர்நீதியாரிடம் கொடுத்து விட்டுப்போன கோவணத்தைத் திரும்பக் கேட்டார். அமர்நீதியார் அதைக் காணாமையால் "வேறு ஒன்று தருகிறேன்" என்றார். பிரமச்சாரி கோபம் கொண்டு “நான் முன் கொடுத்த கோவணத்தை ஒத்த மற்றொரு கோவணம் நின்பால் உளதாயின் கொடுத்துவிடுக" என்றார். நாயனார் தம்மிடமிருந்த புதிய கோவணம் ஒன்றை நிறையிட்டார். அது சரி வரவில்லை. தம்மிடம் இருந்த உடைகைளயும் பொருள்களையும் ஏனைச் செல்வங்களையும் வைத்தார். அப்போதும் அப்பிரமச்சாரியின் கோவணத்திற்கு எடை சரியாகவில்லை. முடிவில் நாயனார் தாமும் தம் மனைவியாருமாக ஐந்தெழுத்தை முறைப்படி ஓதிக்கொண்டே தராசுத் தட்டிலில் ஏறி நின்றார். துலாக் கோலின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன. அனைவரும் வியந்தனர்.நாயனாரும் அவர்தம் துணைவியாரும் தராசே தெய்வ விமானமாக மாறச் சிவலோகம் அடைந்து இன்புற்று இருந்தனர்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>