10. கண்ணப்ப நாயனார்

வரலாறு:


         பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் என்னும் பழம்பதியில் நாகன் என்னும் வேடர் தலைவன் அவன் மனைவி தத்தை என்பவள். அவர்களுக்கு நெடுநாட்களாக மகப்பேறு இல்லாமல் முருகன் திருவருளால் திண்ணன் என்னும் ஒரு மைந்தன் பிறந்தான். 


nayanargal

 முதல் வேட்டைக்குப் புறப்படல் :


         ஒரு நாள் தன் நண்பர்கள் காடன், நாணன் ஆகியவர்களுடன் கூடி முதன் முதலாக வேட்டைக்குப் புறப்பட்டான். அவர்களுடன் ஒரு பன்றியைத் தொடர்ந்து சென்று கொன்றான். அதனால் களைப்படைந்து தாகத்திற்கு நீர் கேட்டான். அந்த நண்பர்கள் அருகில் இருந்த பொன்முகலி ஆற்றுக்கு அவனை அழைத்துச் சென்றனர். பன்றியையும் ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்றனர். திண்ணனார் அருகிலிருந்து திருக்காளத்தி மலையைக் கண்டு காடனைப் பார்த்து, "நீ பன்றியைப் வதம் செய்வாயாக" என்று கூறித் தாமும் நாணனும் மலைமேல் ஏறிச் சென்றனர். காளத்தி மலையில் கோயில் கொண்டுள்ள திருக்காளத்தியப்பரைத் திண்ணனார் கண்டு மனமுருகினார். பின்பு சேயைவிட்டுப் பிரியாத தாயைப்போல இறைவனுடன் கொஞ்சிக் குலாவினார். தம் உடன் வந்த நாணனை நோக்கி, “இந்தத் தேவருக்கு இந்தப் பச்சிலையும் மலரும் சாத்தியவர் யாரோ?" என்று கேட்டார். "நாணன் திண் ணனாரை நோக்கி, நானும் உன் தந்தையாரும் சில நாட்களுக்கு முன் இம்மலைக்கு வந்தோம். அச்சமயத்தில் ஓர் அந்தணர் இவரை நீராட்டி மலர் சுட்டி உணவூட்டுவதைக் கண்டேன்" என்றான்.


திண்ணனார் பெருமானுக்கு அமுதூடல் :


         திண்ணனார் அதுகேட்டு, "நம் குடுமித்தேவருக்கு இவை. பெரிதும் விருப்பமானவைபோலும்! நானும் அவ்வாறே செய்வேன்" என்று எண்ணியவாறு காடன் இருக்குமிடத்தை அடைந்தார். அங்கு அவன் பதமாகச் செய்து வைத்திருந்த பன்றி இறைச்சியைச் சுவைத்துப் பார்த்து, சுவையானவைகளைத் தேக்கிலைகளாலான ஒரு தொன்னையில் எடுத்துக்கொண்டு, பொன்முகிலி ஆற்றின் நீரை வாயில் முகந்து. மலர்களைப் பறித்துத் தம் தலையில் வைத்துக்கொண்டு குடுமித்தேவர் மலைக்குத் திரும்பிச் சென்றார். திண்ணனாரின் செயல்களை அறிந்த நண்பர்கள் அவரை ஊருக்குத் திரும்புமாறு வலிந்து அழைத்தார்கள். திண்ணனார் அவர்களுடைய அழைப்பிற்குச் செவிசாய்க்கவில்லை அவர்கள், இவன் அதிக மயக்கம் கொண்டுள்ளான்" என்று எண்ணித் தந்தை தாயாருக்குத் தெரிவிப்பதற்காகச் சென்றனர். திண்ணனார், அவர்கள் சென்றதையும் அறியாமல் எம்பெருமானுக்கு அமுதூட்டச் சென்றார். திண்ணனார் குடுமித்தேவரைத் அபிசேகம் செய்ய பொன்முகிலி ஆற்றிலிருந்து கொண்டுவந்த நீரைத்தம் அன்பினை உயிழ்பவர்போல அத்தேவரின் திருமுடிமேல் கொட்டினார், மலர்களைச் சாத்தினார். தொன்நையில் கொண்டு வந்த இறைச்சிகளைப் படைத்து அவற்றை திருவமுது செய்யுமாறு இறைவனுக்கு ஊட்டினார். பின்னர் மேலும் எம்பெருமானுக்கு இறைச்சி வேண்டுமென்று எண்ணினார். அதற்குள் சூரியன் மறைந்தான். காரிருள் வந்தது. இரவு முழுவதும், தேவருக்கு வளவிலங்குகளால் துன்பம் நேருமோ என அஞ்சிக் கண்விழித்துக் காவல் புரிந்தார். பொழுது விடிந்தபின்னரே இறைச்சி தேட வெளிச் சென்றார்.


சிவகோசரியாரின் கனவில் சிவபெருமான் :


         திருக்காளத்தி நாதருக்கு நால்றும் வழிபாடு செய்யும் சிவகோசரியார், இறைவன் திருமுன்னே இறைச்சிகளும் எலும்புத் துண்டுகளும் சிந்திக் கிடப்பதைக் கண்டு மனம் வருந்தி அவற்றை அப்புறப்படுத்தித் தூய்மை செய்தார். தாம் வழக்கப் படி செய்யவேண்டிய வழிபாடுகளைச் செய்துவிட்டுத் திருப்பிடத்துக்குத் திரும்பினார். மறுநாளும் முன்போலவே தம் இருப்பதைக் கண்டு மனம் நொந்தார் இறைவனிடம் முறையிட்டுப் புலம்பினார். அன்றிரவு சிவபெருமான் சிவகோசரியாரின் கனவில் தோன்றி, "அன்பனே, நீ அவனை வேடன் என்று நினைக் வேண்டாம்". மேலும் அவர் சிவகோசரியாரை நோக்கி, "அவன் நம்மிடம் செலுத்தும் பேரன்பை நாளைக்குக் காட்டுவோம் நம்மிடத்திற்கு வந்து நீ மறைந்திருந்து காணலாம்” என்று கூறினார். வேதியர் விழித்தெழுந்தார். மனம் வருந்தினார். மறுநாள் தம் வழிபாடு முடிந்தபின்


திண்ணனார் பேரன்பு :


         இறைவன் கட்டளைப்படியே மறைவில் நின்று பார்த்திருந்தார்.திண்ணனார் சிவபெருமானுக்கு வேண்டிய இறைச்சி முதலியவைகளைத் திரட்டிக்கொண்டு திரும்பினார். சிவபெருமாள் அவரது வழிபாட்டுக்குத் பேரன்பைச் சிவகோசரியாருக்கு அறிவிக்க நினைத்துத் தம் வலக்கண்ணில் இரத்தம் சிந்துமாறு செய்தனர். அது கண்ட திண்ணனார் பதைபதைத்தார். மதி மயங்கினார்: கீழே விழுந்தார். ஒன்றும் தோன்றாமல் பெரு மூச்சு விட்டார். எம்பெருமானுக்கு இத்தகைய துன்பத்தைச் செய்தவர்கள் யார் என எழுந்தார். வில்லில் அம்பைப் பூட்டி நெடுந்தூரம் அலைந்து திரிந்து மீண்டும் இறைவனிடம் வந்தார். பல பச்சிலைகளைக் கண்ணில் பிழிந்தார் அப்போதும் இரத்தம் நிற்கவில்லை.

கண்ணை தோண்டுதல் :


         இனி என்ன செய்வது? என்று திகைத்து, தம் வலக்கண்ணை அம்பினால் தோண்டி எடுத்துக்காளத்திநாதரின் கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றது. இந்நிலையில் சிவபெருமான் மீண்டும் தம் இடக்கண்ணில் இரத்தம் சோரவிட்டார். திண்ணனார் சிறிதும் மனந்தளரா தவராய், "தக்க மருந்து என்பால் உளது" என்று மகிழ்ச்சியுடன் இரத்தம் ஒழுகும் கண் தமக்குத் தெரியுமாறு தமது செருப்புக் காலைக் கடவுளினது திருக்கண்ணின் அருகில் ஊன்றிக்கொண்டு, அம்பினால் தமது இடக்கண்ணைத் தோண்ட முயன்றார். உடனே காளத்தி நாதர் தம் திருக்கையை வெளியே நீட்டி. அன்பினால் தன் இடக்கண்ணைத் தோண்டுகின்ற இண்ணனாரைத் தடுத்து, "நில்லு கண்ணப்பா! நில்லு கண்ணப்பா! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்பா!" என்று திருவாய்மலர்த்து, திண்ணனாரின் கையைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்க்கு தம் வலப்புறம் இருக்கும் கண்ணை ஈசனார் அளித்தார். திண்ணனார் ஆறு நாட்களில் பிறவாப் பெரும் அடைந்தார். அன்று முதல் திண்ணனாருக்குக் கண்ணப்பர் என்ற பெயரே வழங்குவதாயிற்று.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>