24. காரைக்காலம்மையார்

வரலாறு:

         சோழ நாட்டில் , காரைக்கால் என்னும் திருநகரில் தனதத்தனார் என்னும் வணிகர் ஒருவர் இருந்தார் அவருக்குப் புனிதவதியார் என்னும் திருமகளார் அவதரித்தார். அவ்வம்மையார் பரமதத்தன் என்னும் வணிகரை மணந்து அன்பு இன்புற்று இல்லறம் நடத்திவந்தார்.


nayanargal

சிவனடியார் மாங்கனி அமுதுண்டுதல் :

         ஒருநாள் பரமதத்தனைத் தொழில் காரணமாகக் காண வந்த ஒருவர், அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றனர். பரமத்தன் அவற்றை வீட்டுக்கு அனுப்பினால், புனிதவதியார் அவற்றை வாங்கிப் பத்திரமாக வைத்தார். அச்சமயம் சிவனடியார் ஒருவர் வந்தார். மிகுந்த பசியுடன் வந்த அடியவரைப் புனிதவதியார் முகமலர்ந்து வரவேற்று அன்போடு அமுதிட்டார். கணவர் அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அவருக்களித்தார். சிவனடியார் வயிறார அமுதுண்டு சென்றார்.


கடவுளை வேண்டி மாங்களியொன்றினைப் பெற்றுதல் :

         பின்னர், பரமதத்தன் வீட்டுக்கு வந்து உணவருந்தினான். புனிதவதியார் எஞ்சியிருந்த ஒரு மாங்களியைக் கணவனுக்குப் படைத்தார். அதனை உண்ட பரமதத்தன் அது மிகமிக இனிமையாக இருந்ததால் மற்றென்றையும் கேட்டாள் புனிதவதியார் ஒன்னும் தோன்றாமல் கடவுளை வேண்டி மாங்களியொன்றினைப் பெற்றுக் கணவனிடம் கொடுத்தார். அக்கனியோ முன் உண்ட கனியைவிடப் பன்மடங்கு இனிமையாக இருப்பதைக் கண்டு அவன் "இது நான் அனுப்பிய பழம் அன்று. இப்பழம் உனக்கு ஏது?” என்று கேட்டான். அம்மையார் அக்கனியின் வரலாற்றைக் கூறப் பரமதத்தன் வியப்படைந்து, "அப்படியாயின் மற்றொரு களியை வரவழை, பார்க்கலாம்" என்றான். அம்மையார் முன்போலவே இறைவனை வேண்டினார். அதிமதுர மாங்கனியொன்று மீண்டும் அவர் கையில் வந்து நின்றது. பரமதத்தன் அதனைக் கையில் வாங்கினான். அது திடீரென்று மறைந்தது. அந்த அற்புதத்தைக் கண்ட பரமதத்தன் அவர் தெய்வப் பிறவியே என எண்ணி, அவருடன் வாழ அஞ்சி வாணிகம் செய்வதற்குச் செல்வானைப் போலக் கடற்கரைப் பட்டினமொன்றை அடைந்து, அங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டு இல்லறம் இயற்றினான். வயிற்றில் பிறந்த பெண்ணுக்குப் புனிதவதியென்றே வளர்த்தான்.


உருவம் பேயுருவம் பெற்றல் :

         புனிதவதியாரின் சுற்றத்தார்கள் பரமதத்தன் பாண்டி தாட்டில் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு அழைத்துக் கொண்டு செல்ல புனிதவதியாரின் அறிந்த பரமதத்தன் தன் குடும்பத்துடன் சென்று வணங்கி வரவேற்றான். அதுகண்ட உறவினர், மனைவியை வணங்குவது ஏன்?" என்று கேட்டனர் பரமதத்தன் அவர்களைப் "இவர் மானிடர் அல்லர் வணங்கும் நீங்களும் வணங்குங்கள்" என்றான். புனிதவதியார் கேட்டவுடன் இறைவனை வணங்கி கணவனுக்காகத் மனித உருவம் நீங்கி  பேயுருவம் பெற்றார்.


திருவாலங்காட்டிற் திருநடனம்:

         அதன் பின்னர் அம்மையார் பல பிரபந்தங்கள் பாடிச் சிவபெருமானைத் தரிசிக்கத் திருக்கயிலைக்குத் தலையால் நடந்து சென்றார். சிவபெருமான் அவரை, "அம்மையே வா" என்று அழைத்தார். புனிதவதியார் அப்பா என்று அலறி அவர். திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார், பின்னர் அம்மையார் அவரை நோக்க, "ஐயனே! எக்காலத்தும் மாறாத அன்பு வேண்டும்” என்று வேண்டினார். பின்னர் சிவபெருமானின் கட்டளைப்படி திருவாலங்காட்டிற்குச் சென்று அவருடைய திருநடனம் கண்டு சிவப்பேறு பெற்றார். அவர் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டதால் காரைக்காலம்மையார் என்று வழங்கப்பெற்றார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>