சோழ வளநாட்டில் திருக்கடவூர் அங்கு வேதியர் குலத்தில் குங்கிலியக் கலயனார் என்பவர் தோன்றினார். அமிர்த கடேசராகிய சிவபெருமானுக்கு, நாடோறும் குங்கிலியத் தூபம் இடும் திருத்தொண்டில் ஈடுபட்டுவந்தார். ஆதலால், அவரை எல்லோரும் குங்கிலியக் கலயர் என்று அழைத்தனர்.
தெய்வச் செயலால் வறுமை அடைந்தார்:
இவ்வாறு இருக்கும் நானில் நம் நாயனார் தெய்வச் செயலால் வறுமை அடைந்தார். ஒரு நாள் நாயனாரின் மனைவியார், மக்களும் சுற்றமும் பசியால் வருந்துவது கண்டு தமது தாலியைக் கழற்றி நாயனாரிடம் கொடுத்து, அரிசி முதலியன வாங்கி வருமாறு அனுப்பினார். தாயனார் தெருவில் செல்லும்போது வழியில் ஒரு வணிகர் குங்கிலியப் பொதியைக் கொண்டு வருதலைக் கண்டு மனம் மகிழ்ந்தார். தாம் எடுத்துச் சென்ற தாலியை வணிகரிடம் கொடுத்து அம்மூட்டை வாங்கிக்கொண்டார். அதனை நேராகத் திருக்கோயில் பண்டாரத்திடம் சேர்த்தார். தாமும் வீடு செல்லாமல் அங்கேயே இருந்தார்.
இறைவன் கட்டளை:
அன்று மனைவியாரும் மக்களும் மிக்க பசியினால் வருத்தி அயர்ந்து தூங்கினர். அந்நிலையில் சிவபெருமான் தமது திருவருளால், அவர்கள் வீடு முழுவதும் நெல்லும் பொன்னும் குவியுமாறு செய்தார். அதனை நாயனாரின் மனைவியாரிடத்து தெரிவித்து, நாயனாரையும் அசரீரி வாக்கால் அழைத்து, "அன்பனே நீ மிகவும் பசித்தாய். நீ வீடு சென்று பால் உணவு உண்க" என்று திருவாய்மலர்த்தருளினார். எல்லாம் இறைவன் கட்டளைப்படியே நாயனார் வீடு சென்று நெல்லும் பொன்னும் குவிந்திருக்கக் கண்டார். மனைவியார் வாயிலாக செய்தியை உணர்ந்து, அச்செல்வங்களை சிவனடியார்களுக்கும் கொடுத்துத் தாமும் அனுபவித்து நலமாக வாழ்ந்து வந்தார்.
திருப்பணி:
அக்காலத்தே திருப்பனந்தாளில் சிவலிங்கம் சாய்ந்திருந்தது .யானை, குதிரை முதலியன கட்டி இழுத்தாலும் அது நிமிராதது கண்டு அரசன் கவலை அடைந்தான். அதனைக் கேள்வியுற்ற நாயனார் தமது கழுத்தில் கயிறு கட்டிப் பூட்டி இழுக்க அச்சிவலிங்கம் நிமிர்ந்தது. நாயனார் அங்குச் நாட்கள் தங்கி இருந்து, திருக்கடவூர் சென்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரைக் கண்டு அமுது செய்வித்தார். இவ்வாறு பற்பல திருப்பணிகளைப் புரிந்த நாயனார் சில நாட்களுக்குப் பின்னர் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.