5. மெய்ப்பொருள் நாயனார்

வரலாறு:


         சேதி நாட்டின் தலைநகரம் திருக்கோவலூர் என்னும் சிறந்த பகுதியாம். அதனை மெய்ப்பொருள் நாயனார் என்பவர் ஆண்டு வந்தார். சிவபெருமானுடைய அடியார்களின் திருவேடத்தையே அவர் மெய்ப்பொருளாகக் கருதிவந்தமையால் அவருக்கு அப்பெயர் வந்தது. அடியார்களுக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் மனமுவந்து அளித்துப் பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்ற வாழ்த்த நாயனார்.


Ilayankudi Maranar

முத்தநாதன் வஞ்சனை:

          நாயனார் மீது முத்தநாதன் என்னும் ஓர் அரசன் பகையை கொண்டு பல முறையும் எதிர்த்துத் தோல்வியுற்றான். பின்னர் அவரை வஞ்சனையால் வெல்ல எண்ணிச் சிவனடியார் வேடங்கொண்டு உடைவாளைப் புத்தகக் கவளி ஒன்றில் வைத்து எடுத்துக்கொண்டு மெய்ப்பொருள் நாயனாரை அடைந்தான். இவ்வாறு வஞ்ச நெஞ்சுடன் முத்தநாதன் வந்து சேர்ந்த நாயனார் அவனை உபசரித்து, "தேவரீர் ஈங்கு எழுந்தருளியுள்ள காரணம் யாது?” என்று கேட்டார். அதற்கு முத்தநாதன், சிவபெருமான் அருளிய ஆகம நூல் ஒன்றை உமக்குப் போதிப்பதற்கு வந்துள்ளேன் என்றான். நாயனார் அவன் சொல்லை உண்மை என்று நம்பி வணங்கி நின்றார். அதுதான் தக்க சமயம் என்று நினைத்து முத்தநாதன் முன்னே தான் நினைத்த அச்செயலை செய்து முடித்தான். அப்போதும் மெய்ப்பொருள் நாயனார், "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்" என்று எண்ணி அவ்வஞ்சகனை வணங்கினார். மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்த எண்ணி வந்தான் முத்தநாதன். தனது வஞ்ச தெஞ்சத்தில் தீட்டியிருந்த திட்டப்படியே அவன் நாயனாரை வெட்டி வீழ்த்திவிட்டான். ஆயின் இக்கொடுஞ் செயலை முத்தநாதன் செய்த கொடுமையைக் கண்ட தத்தன் என்னும் காவலன் அவனைக் கொலை புரிய முயன்றான்.

நாயனார் பாதுகாத்தல்:

         இரத்தம் பெருகிக் கீழே விழுகின்ற நாயனார் தம் கைகைளை நீட்டித் "தத்தா அவர் நம்மவர் அவரை ஒன்றும் செய்யாதே" என்று தடுத்து விழுந்தார். தத்தன் அவரைத் தாங்கிக் கொண்டு, அரசே யான் யாது செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் நாயனார் தம்மை வாளால் குத்திய முத்தநாதனை யாரும் தடை செய்யாதவாறு காவல் புரிந்து நகர் எல்லையைக் கடந்து விட்டுவிடவேண்டும் என்றார். அவனும் அங்ஙனமே செய்தான். பின்னர் நாயனார் இளவரசர், அமைச்சர், மனைவியார். உறவினர் ஆகியோரை அழைத்து, 'நீங்கள் எல்லோரும் திருநீற்றில் கொண்டுள்ள அன்பைப் பாதுகாத்து அதனை உலகில் பரப்புங்கள்'" என்று கூறி இறைவன் திருவடி அடைந்தார்.

வெற்றி யாருக்கு? 

         நாயனாரை வீழ்த்தியவன் முத்தநாதன். ஆனால் வெற்றி யாருக்கு? முத்தநாதனுக்கு அன்று. வெற்றி பெற்றவர் மெய்ப்பொருள் நாயனாரே ஆவார். துன்பம் செய்தவர்களுக்கு இன்பம் செய்வதுதான் நண்டிக்கும் வழியாகும் என்று வள்ளுவரும் வாய்மொழிந்துள்ளார். நாயனாரே வெற்றி பெற்றவர் என்னும் உண்மையைச் சுந்தரரும் திருத்தொண்டத் தொகையுள் "வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>