சோழ வளநாட்டில் ஆதனூர் என்னும் ஒரு சிற்றூர் உண்டு. அங்குப் புலையர் குலத்தில் நந்தனார் அவதரித்தார். அவர் சிவபக்தி மிகுந்தவராய்ச் சிவாலயங்களில் உள்ள பேரிகை, முழவு, யாழ் முதலிய கருவிகளுக்கு வேண்டிய தோல், வார், நரம்பு, கோரோசனம் முதலியவைகளை உதவி வந்தார்.
நந்தியை விலக்கி இறைவன் காட்சியளித்தல் :
அவர் பல சிவாலயங்களையும் வழிபட்டுத் திருப்புன்கூரை அடைந்தார். அங்கு இறைவனை நேரில் தரிசிக்க எண்ணினார். சிவபெருமான் தமக்கு எதிரில் இருந்த நந்தியை விலக்கி அவருக்குக் காட்சியளித்தருளினார்.
சிவபெருமான் சோதித்து அருளுதல் :
தந்தனார் சிதம்பரத்திலே உள்ள நடராசப் பெருமாளை வழிபட எண்ணி, “நாளைப் போவேன், நாளைப் போவேன்" என்று கூறி வந்ததால் அவருக்குத் திருநாளைப் போவார் என்று பெயர் வந்தது பல நாட்களுக்குப் பின் நந்தனார் தில்லையை அடைந்து கோயிலின் உள்ளே செல்லாமல் எல்லையை இருந்தார். அச்சமயத்தில் நடராசப் பெருமான் அவர் களவில் தோன்றி, "நீ நெருப்பில் மூழ்கி நம்மை வந்து அடைவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார் தில்லைவாழ் அந்தணர்களுக்கும் நந்தனார் வரும் செய்தியைத் தெரிவித்துத் தீ வளர்க்குமாறு கட்டளையிட்டு மறைந்தார். இறைவன் கட்டளைப்படியே தீ வளர்த்து அந்தணர்கள் நந்தனாரிடம் சென்று தெரிவித்தனர். நந்தனார் தீயை வலம் வந்து உள்ளே புகுந்து முனிவர் உருக்கொண்ட வேதியராக வெளிவந்து தோன்றினார். பின்னர் வேதியரான நத்தினார் இறைவனை வழிபட்டு அவர்தம் மலரடிகளைத் தொழுது கொண்டிருக்கும் இன்ப நிலையை அடைந்தார்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.