இவர் திருசெங்காட்டாங்குடியில் வேதியர் குலத்தில் தோன்றிச் பரஞ்சோதியார் என்னும் பெயருடன் வேதமும் வில்வித்தைகளும் கற்றுப் பல்லவ மன்னனின் அமைச்சராய் விளங்கினார். இவர் ஒரு சமயம் வடநாடு சென்று வாதாபியை வென்று மிகுந்த திறைகள் கொண்டுவந்தார். அரசன் பரஞ்சோதியாருக்குத் திரளான செல்வம் கொடுத்து சிவத்தொண்டில் ஈடுபடுத்தினான். இவர் வெண்காட்டுநங்கை என்னும் தம் மனைவியாருடன் இல்லறம் நடத்தி வந்தார். தம்மைத் தொண்டர்களில் சிறியவர் என்று மதித்துச் "சிறுதொண்டர்"என்னும் திருப்பெயர் பெற்றார்.
பிள்ளை கறி கேட்டல் :
சிவபெருமான் சிறுத்தொண்டரின் அன்பை உலகறியச் செய்ய விரும்பிப் பைரவ வேடம் பூண்டு அவர் இல்லத்தை அடைந்தார். அவர் நாயனாரை நோக்கி, ஒரு தாய்க்கு ஒரு மகனாக அங்கம் பழுதில்லா மைந்தன் ஒருவனை அறுத்துக் கறி சமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார். சிறுத்தொண்டர் சிறிதும் மனம் தளராமல் தன் மகன் சீராளனை அவர் விருப்பப்படிச் செய்து உண்கலத்தில் இட்டார். பைரவர் எல்லா உறுப்பும் சரியாகச் சமைக்கப்பட்டனவோ என்று கேட்க, நாயனார் தலையைத் தவிர எல்லா உறுப்புகளும் சமைக்கப்பட்டன என்றார்.
பைரவர் அதுகேட்டு அதனையும் சமைத்துக்கொண்டு வருக என்றார். அவ்வாது நேரும் என்று முன்னரே எண்ணியிருந்த சந்தனத்தாதி என்ற வேலைக்காரி முன்பே சமைத்து வைத்திருந்த தலைக்கறியையும் படைத்தாள். பைரவர் நாயனாரையும் தம்முடன் உட்கார்த்து உண்ணுமாறு கட்டளையிட்டார். நாயனாரும் அதற்கு உடன்பட்டார், உண்பதற்குமுன் பைரவர் அவரைத் தடுத்து, “உமக்கு மைந்தர் இருப்பின் அழையுங்கள்" என்றார் நாயனார் அவர் சொல்லைத் தட்டாமல் தெருவில் அவர்தம் மனைவியாருடன் “சென்று சீராள" என்று அழைத்தார்.
சீராளனை மீண்டும் அழைத்தல் :
அப்போது சிவபெருமானின் திருவருளால் சீராணன் பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிவருபவள்போல் ஓடிவந்தான். அன்னையார் அவனைத் தழுவி எடுத்து கணவர் கையில் கொடுத்தார். நாயனார் சிறுவனை எடுத்துக்கொண்டு வீட்டில் நுழைந்தார் அதற்குள் அங்கு இலைகளிலிருந்த உணவுகளுடன் பைரவர் மறைந்து விட்டார். சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறிக் காட்சி கொடுத்துச் சிறுத்தொண்டரைத் தம் திருவடியில் சேர்த்துக் கொண்டார். சிறுத்தொண்டரின் தொண்டு சிறியதொரு தொண்டோ?பெருந்தொண்டன்றோ? அருந்தொண்டன்றோ? அதனால்தானே பட்டினத்தடிகல்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.