இவர் தொண்டை நாட்டிலுள்ள காஞ்சீபுரத்தில் ஏகாலியர் குலத்தில் அவதரித்தார். இவர் சிவனடியார்களின் ஆடை முதலியவைகளை அழுக்கு நீக்கி உதவுவார்.
சிவபெருமான் சோதித்து அருளுதல் :
ஒருநாள் சிவபெருமான் ஒரு கிழவர் உருவத்தில் அழுக்கடைந்த ஆடையோடு வந்தார். நாயனார் அவரை எதிர்கொண்டு பணிந்து, “உம்முடைய ஆடைகொடுத்தால் அடியேன் அழுக்கு நீக்கிக் கொடுப்பேன்" என்றார். கிழவர் ஆடைஒன்றை அவரிடம் கொடுத்து, "இது ஆடை கந்தையானாலும் குளிருக்கு ஆதரவானது. பொழுது போவதற்குள் இதனை அழுக்கு நீக்கித் தரவேண்டும்" என்று கூறினார். நாயனார் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டு அதை வாங்கி வெள்ளாவியில் வைத்து மீண்டும் கசக்கத் தொடங்கினார். அச்சமயம் வானம் இருண்டது. மழை பெய்தது. அதனால் நாயனார் தமது வாக்கு தவறும் எனவும், முதியோர் குளிரால் வருந்துவார் எனவும் கருதி தாம் ஆடை துவைக்கும் கருங்கல் பாறையில் தமது தலையை மோதத் துணிந்தார். உடனே சிவபெருமான் அந்தப் பாறையில் தோன்றிய திருக்கரத்தால் நாலனாரின் தலைபிடித்து, "அன்பனே உன் அடியார் பக்தியை மூன்று உலகிலும் றைவனில் பரவுமாறு செய்தோம். இனி நீ நம் உலகை வந்தடைக” என்று திருவாய்மலர்ந்தார். நாயனார் எல்லாம் வல்ல திருவருளால் திருக்கயிலை மலையை அடைந்தார்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.