Panguni uthiram in tamil | பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம் என்றால் என்ன ?
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பார்வதி பாகராகிய சிவபெருமானை திருமணக் கோலத்தோடு. தியானித்து திருமண விரதம் இருக்க வேண்டிய நாள் பங்குனி உத்திரம். இது சிவபெருமானை கல்யான சுந்தரமூர்த்தியாக பாவித்து அனுஷ்டிக்கும் விரதம். இன்றைய தினம் உமாபிராட்டியாரை சிவபெருமான் திருமணம் செய்து கொள்ளும் திருக்கல்யாண வைபவம் எல்ல சிவ ஆலயங்களிலும் நடைபெறும்.
பங்குனி உத்திர சிறப்பு
திருமகள் இவ்விரதத்தை கடைபிடித்து விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தகைமை பெற்றாள். இந்திரன் இவ்விரதத்தை கடைபிடித்து இந்திராணியை அடைந்தான். பிரம்மன் சாஸ்வதியை நாவினிடத்தே: வைத்துக் கொண்டிருக்கும் தவம் பெற்றான். சந்திரன் அழகு வாய்ந்த 27 கன்னியர்களை மனைவியாக்கிக் கொண்டு மகிழ்ந்தான், அன்றைய தினத்தில் விரதம் இருந்து திருக்கோயில் செல்ல இயலாதவர்கள் இறைவன் இறைவியை மணக்கோலத்தில் மனதளவில் தியானித்தால் நல்ல குடும்ப வாழ்க்கை கிட்டும்.