பிடித்து வைத்தால் பிள்ளையார் உருவ சிறப்பு
விநாயகர் உருவ சிறப்பு
இவருக்கு உருவம் செய்து வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார். மஞ்சள்தூள், வெல்லம், சாணம் எதில் வேண்டுமானாலும் பிடித்து வைத்து வழிபடலாம். இவர் வழிபாட்டில் மூலாதாரம் பிருத்திவி அம்சம், பிருத்திவி என்றால் மண் ஆகவே களிமண்ணில் உருவம் செய்து வழிபடுவது விசேஷம். விநாயகர் உருவை வெள்லேருக்கன் வேரில் செய்து வழிபடுவது மிகச்சிறந்தது. இவரை வழிபடுதல் எளிது. விநாயகர் பூஜைக்கு அருகம்புல் மிகவும் ஏற்றது. தலையில் குட்டிக் கொள்வதும் தோப்புக்காணம் போடுவதும் அவருக்கு மிக பிரியமானது