பிரதோஷம் மகிமை | pradosham details in tamil
பிரதோஷம் மகிமை
பிரதோஷ காலம் என்பது மாதா மாதம் வளர்பிறை தேய்பிறைகளில் வரும் பதிமூன்றாம் நாளாகிய திரியோதசி திதியில் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. பிரதோஷ காலத்தில் சரஸ்வதி தன்கையில் வீணை வைத்துக் கொண்டும், இந்திரன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், பிரம்ம தேவன் தாளம் போட்டுக்கொண்டும், இலக்குமி தேவி பாடல்கள் பாடிக்கொண்டும், திருமால் மிருதங்கத்தை வாசித்துக்கொண்டும், தேவர்கள் எல்லா புரங்களிலும் நின்று கொண்டும் ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் பார்வதி தேவியின் பதியாகிய சிவபெருமானை பக்தியுடன் பணிவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு பிரதோஷ வேளையில், விஷ்ணு, இலக்குமி, பிரம்மா, தேவர்கள் வழிபடுகின்றனர். இக்காலத்தில் எல்லாம் வல்ல சிவபெருமானை விரதம் இருந்து வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.