வள்ளலார் வரலாறு | vallalar history in tamil

வள்ளலார் வரலாறு

கல்வியில் வல்லமை பெற ஏதுவாக இருக்கும் எனக்கருதி இவரை மக்கள் வழிபடுகிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் கல்வி, சமயம், சமுதாயம் போன்ற துறைகளில் பலநல்ல மாற்றங்களைச் செய்த பெருமைக்குரியவர் வடலூர். வள்ளல் பெருமான் என்று கூறப்பெறும் இராமலிங்க அடிகளார் ஆவார்.

வள்ளலார். இம்மண்ணுலகில் 50 ஆண்டுகள் 3 மாதங்கள் 25 நாட்கள் வாழ்ந்தவர். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடி உயிர்களின் மீது தனக்குள்ள சுருணையைப் புலப்படுத்தியவர் அவர். பசியால் வாடும் மனிதர்களின் பசிப்பிணி போக்க சத்திய தருமச்சாலையை அமைத்தவர்.

சமாச சுத்த சன்மார்க்கம்

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் நம் நாட்டில் சாதி வேறுபாடுகள் மிகுந்திருந்தன, சமயங்களின் பேரால் பிணக்குகள் மளிந்திருந்தன, இவற்றையெல்லாம் போக்குவதற்கு அவர் பெரு முயற்சி மேற்கொண்டார். இறுதியில் ஒரு வழியையும் கண்டு பிடித்தார். வள்ளலார் கண்டுபிடித்த வழிக்கு சமாச சுத்த சன்மார்க்கம் என்று பெயர், சன்மார்க்க நெறி என்றால் எல்லாருக்கும் உரிய பொதுவான நெறி என்று பொருள். இந்த நெறிக்குச் சாதி, மதம், குலம், இனம், வெள்ளை, கறுப்பு என்பது போன்ற நிற வேறுபாடு எதுவும் இல்லை. எல்லாச் சமயத்தவர்கள், சாதியினர், இனத்தினரும் சன்மார்க்க நெறியை அடைய முடியும். கருணை மனமும் அன்புணர்வும் உடையவர்கள் எவராயினும் சன்மார்க்கத்தைப் பின்பற்றலாம் என்று வள்ளலார் அறிவித்தார். எத்துணையும் பேதமுறா எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒத்துரிமை உடையவராய் வாழும் உள்ளம் கொண்டவர்களை வள்ளலார் பெருமான் தெய்வம் எனப் போற்றி வணங்குகிறார்.

வள்ளலார் பார்வை

அவரது பார்வையில் உயிர்க்கொலை புரியாது, புலால் உண்ணாது, பிற உயிர்களையும் தமது உயிர்போல் மதிக்கிறவர்கள் மனிதர்கள் அல்லர், அவர்கள் யாவரும் வாழும் தெய்வங்களே. இவ்வாறு மதத்தை விடவும், மனிதர்களை நேசித்த வள்ளற்பெருமான்

வள்ளற்பெருமான் 30-01-1874 அன்று தைப்பூசத் திருநாளில், தம் அன்பர்களிடத்தே உங்கள் கண்களுக்கு தெரியாமல் இன்று சிறிது நேரத்தில் அருட்பெரும் சோதியாக விளங்கும் இறைவன் அருளால் அச்சோதியில் கலந்து விடப்போகிறேன் என்று கூறி, ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டார். அவ்வறையை வெளிப்பக்கத்தில் பூட்டி விடுமாறு உத்திரவிட்டார். அவர் விரும்பியபடி வெளிப்புறக் கதவு பூட்டப் பட்டது. வள்ளலார் சோதியுள் கலந்தார். இந்த நாளை நினைவு படுத்தும் வகையில் வடலூரில்,

தைப்பூச ஜோதி தரிசனம்

வள்ளலார் அமைத்த சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் நடைபெற்று வருகிறது. வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் சோதி வழிபாடு முறையாக நடைபெற்று வருகிறது. இவ்வழிபாடு உயர்ந்த தத்துவத்தை உருவகமாக உணர்த்துகிறது. இங்கே

ஏழு திரைகள் தத்துவம்

வள்ளலார் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் ஏழு திரைகள் உள்ளன.அவை

1, கருப்பு, 2. நீலம், 3. பச்சை, 4. சிவப்பு, 5. பொன்மை, 6. வெண்மை, 7. கலப்பு நிறம் கொண்டவை,

இவை ஒவ்வொன்றாக விலகிய பின்னர்தான் ஒளி வடிவிலிருக்கும் இறைவனைக் காணமுடியும். இந்த ஒளிவழிபாட்டுத் தத்துவம் எண்ணிப் பார்க்கத்தக்கது. நமது உள்ளம் விளக்கு. உள்ளத்தில் உள்ள இறைவன் ஒளிவடிவாய் இருக்கின்றான். இந்த இறையொளியை நாம் உடனே பார்க்க முடிவதில்லை. காரணம் அதனைப் பல மாயத்திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அம்மாயத்திரைகள் விலகினால் மட்டுமே அருட்சோதி ஆண்டவரைக் காணலாம்.

இந்த ஏழு திரைகளும் ஏழு வகை சக்திகளைக் குறிக்கின்றன.

கருப்புத்திரை – மாயாசக்தி
நீலத்திரை – கிரியாசக்தி
பச்சைத்திரை – பராசக்தி
சிவப்புத்திரை – இச்சாசக்தி
பொன்மைத்திரை – ஞானசக்தி
வெண்மைத்திரை – ஆதிசந்தி
கலப்பத்திரை – சிற்சக்தி

இலை ஒவ்வொன்றாக விலகினால் உண்மை ஒளியாகிய இறையொளி புலப்படும். இதனைக் குறியீடாக உணர்த்துவதே சந்திய ஞான சபையிலுள்ள எழு திரைகளும் ஜோதி தரிசனமும் ஆகும். இந்தாளில் தான் பிரம்மா, மகா விஷ்ணு, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் மற்றும் அனைத்து தேவர்களும் சிவனின் திருவருளால் ஞானக்கள் பெற்று சிவனின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து ஆனந்தக்கடலில் மூழ்கினார்கள். பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கினங்க நடராஜப்பெருமானும் அன்னை சிவகாமியுடன் ஞானசபையிலே வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.