Thula Snanam | ஐப்பசி துலா ஸ்நானம் சிறப்பு
ஐப்பசி துலா ஸ்நானம்
ஐப்பசி முதல் தேதியிலிருந்து 30ஆம் தேதிவரை துலாஸ்நானம் என்று காவேரிக் கரையில் உள்ளவர்கள் செய்வார்கள். கங்கையே, காவேரியில் வந்து தன் பாவத்தை போக்கிக் கொள்ள ஸ்நானம் செய்கிறாள் என்பது ஐதிகம்.
துலா ஸ்நானம் சிறப்பு
வீட்டிலேயே மாதம் முழுவதும் தினமும் விடியற்காலை எழுந்து ஸ்நானம் செய்து, காவேரி பூஜை செய்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். மாதம் முழுவதும் செய்ய இயலாவிட்டாலும் கடைமுக ஸ்நானம் ஐப்பசி கடைசி தினத்தன்று அவரவர்கள் அருகாமையில் உள்ள ஆற்றிற்கு சென்று ஸ்நானம் செய்து பூர்வஜென்ம பாவத்தை போக்கிக் கொள்ளலாம். மனிதர்கள் இறைவனின் அருட்கடலில் மூழ்கிய புனிதமடைந்து வீடுபேறு அடைவதே இதன் நோக்கமாகும்.