ஆடிப்பெருக்கு சிறப்பு
ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் பிறந்ததும் தக்ஷினாயனம் ஆரம்பமாகிறது. முன்னோர்கள் ஒரு ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி வரை தக்ஷினாயனம். தை முதல் ஆனிவரை உத்ராயணம், ஒன்று மாரி காலத்தின் ஆரம்பத்தையும் அடுத்தது கோடை காலத்தின் துவக்கத்தையும் காட்டுகின்றன. இந்த புண்ணிய கால கட்டங்களில் தீர்த்த ஸ்தானம் மிகவும் விசேஷம்!
ஆடிப்பெருக்கு சிறப்பு
ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது தமிழர் மரபு. ஆற்றங்கரையில் சித்திரான்னங்கள் எடுத்துச் சென்று குடும்பத்தோடும் நண்பர்களோடும் உண்டு மகிழ்வார்கள். காவேரி அம்மனுக்கு காதோலைகருகமணி வாங்கி ஆற்றில் போடுவது வழக்கம்.
இத்திருநாளில் குழந்தைகள் சப்பரம் கட்டி ஆற்றின் கரையில் குதூகலமாக களித்து மகிழ்வார்கள். ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கம் ஏற்படுகிறது! ஆடி பாதம் பண்டிகைகளின் ஆரம்பம் ! பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதம், அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்ப மாதம்!