ஆருத்ரா தரிசனம் | aaruthra tharisanam in tamil
ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன ?
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி கழிந்து பௌர்ணமி ஆதிரைத் திருநாள் சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். விசேஷமாக அன்று களி, எழுகறிகூட்டு செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.
ஆருத்ரா தரிசனம் வரலாறு
பக்தரை சோதனை செய்ய வேண்டி சிவபெருமான் கிழ வேடம் தரித்து, அவர் அளித்த களியை உண்டு (களித்ததாக கதை உண்டு. அதனால் தான் அன்றைய தினம் சிவனுக்கு களி நெய்வேத்தியம் செய்வது வழக்கமாகி விட்டது. களி என்றாலே ஆனந்தம் என்பர், திருவாதிரை “ஒருவாய்த் களிதின்காவர் நரசக்குழி” என்பார்கள்.
திருவாதிரைத் திருவிழா நடைமுறை மார்கழி ஆருத்ரா தரிசன விழா பத்துநாள் பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது. முதல் நாள் கொடியேற்று விழா, கொடியேற்றத்தன்று மாணிக்கவாசகரை எழுத்தருளச் செய்வர். அவர் திருமேனிக்கு அபிஷேகம், அலங்காரம், நிவேதனம் யாவும் முறைப்படி செய்வர். இதனையடுத்துத் திருவெம்பாவை இருபது பாடல்களையும் ஓதி, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தீபாராதனை செய்து வழிபாடு செய்வர். தேவாரம் முதலிய இதர திருமுறைகளுக்குத் திருக்காப்பிட்டுத் திருவெம்பாவை மட்டும் ஓதுவர். பிறகு இரண்டாம் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளிலும் விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறும். திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு மிகச்சிறப்பாக அபிஷேகம் நடைபெறும். உமையம்மை கண்டு மகிழ இறைவன் திருக்கூத்தாடியதால் நாமும் அந்த நாளில் கூத்தனின் மகா தரிசனத்தைக் கண்டு மகிழ்கின்றோம்.