வளம் தரும் சித்ரா பௌர்ணமி | சித்ரா பௌர்ணமி சிறப்பு

சித்ரா பவுர்ணமி :

இந்தநாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தி அடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

சித்ரா பவுர்ணமி பூஜை :

சித்ரா பவுர்ணமி அன்று செய்யப்படும் விரிவான பூஜையை பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும். நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தில் தேவதையை ஆவாஹனம் செய்து. சித்திர குப்தம்

"மஹா ப்ராக்கும் லெகானி தாரிணம்
சித்ர ரத்னாம்பாதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்”

என்ற சித்ரகுப்தனின் சுலோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனை பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். பூஜையில் பேப்பர். பென்சில், நவதானியங்கள், அரிசி, பருப்பு முதலியவைகளை வைத்து,பூஜை முடிந்தவுடன் பிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சித்ரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.

சித்ரா பவுர்ணமி பூஜையின் பலன் :


சித்ரகுப்தம் என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்குநாமே நினைவுப்படுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.