விழாக்கள்

பிருந்தாவன துவாதசி சிறப்பு

பிருந்தாவன துவாதசி

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு அடுத்த நாள் அன்று துளஸி கல்யாணம் செய்ய வேண்டும். அன்று துளஸி தேவி மஹா விஷ்ணுவை மணந்து கொண்ட நாளாகும். கார்த்திகை மாதம் வரும் சோமவார காலங்களிலும், நெல்லிப்பூஜை எனும் நெல்லி மரத்திற்கும், துளசி செடிக்கும் திருமணம் செய்வித்து வனபோஜனம் செய்வதை பெரியோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

பிருந்தாவன துவாதசி பூஜை

துளசியை பிருந்தை என்றும் கூறுவர். பகவான் நெல்லி மரமாகத் தோன்றியதால் அன்று நெல்லிக் கிளையை துளசி செடியுடன் வைத்து பூஜை செய்யவேண்டும். கிளை கிடைக்காவிடில் நெல்லிகாயின் மேல் நெய்யில் திரியை நனைத்து வைத்து தீபம் ஏற்ற வேண்டும். துளசி மாடத்தை அலம்பி கோலம், செம்மண் இட்டு, மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து பூஜிக்கவேண்டும். துளசி தோத்திரம் கூறி பூஜை செய்து கற்பூரம் ஏற்ற வேண்டும். நேரங்களில் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள் கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *