Aanmeega thagavalgal in tamil | ஆன்மிக தகவல்கள்

சிதரகுப்தன் வரலாறு | History of Siddharguptan
சிதரகுப்தன்  (சித்ரபுத்திரன்) வரலாறு

சித்திரகுப்தன் தோன்றியது எவ்வாறு?

இவ்வுலகின் பாவ புண்ணிய பலணை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப் பலகை கொண்டு வரசெய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார், சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்று பெயரும் வைத்தார். இந்த சித்ரபுத்திரன் (சிதாகுப்தன்) சித்ராபவுர்ணமி தினத்தில் அவதரித்தார்.

The post சிதரகுப்தன் வரலாறு | History of Siddharguptan appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

அட்சய திருதியை பற்றிய தகவல்கள்
அட்சய திருதியை

உத்தராயனா காலத்தில் தமிழ் வருடத்தின் துவக்க மாதமான சித்திரை மாதத்தில் அமாவாசை அடுத்து வளர்பிறை திருதியை திதி தினத்தை அட்சய திருதியை என்கிறோம். சித்திரை மாதத்தில் அக்ஷ்ய திருதியை தினத்தில் நம் குடும்பத்திற்கு தேவையான பொன், ஆபரணங்கள், ஆடைகள் வாங்கினால் அந்தாண்டு முழுவதும் குறைவில்லா பொன், பொருள் நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை சிறப்பு

“க்ஷதம்” என்றால் குறை உடையது ‘அக்ஷதம்” என்றால் குறைவு இல்லாதது, நிறைவு உடையது. பூரணத்வம் உடையது என்று பொருள், குறைவு இல்லாத பூரணாத்வம் பெற்று வாழ வாழ்த்துவதற்கு பயன்படுத்தும் அரிசி மஞ்சள் இந்த மங்கல பொருட்களை அக்ஷதை என்கிறோம்.

The post அட்சய திருதியை பற்றிய தகவல்கள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

பிடித்து வைத்தால் பிள்ளையார் உருவ சிறப்பு
விநாயகர்  உருவ சிறப்பு

இவருக்கு உருவம் செய்து வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார். மஞ்சள்தூள், வெல்லம், சாணம் எதில் வேண்டுமானாலும் பிடித்து வைத்து வழிபடலாம். இவர் வழிபாட்டில் மூலாதாரம் பிருத்திவி அம்சம், பிருத்திவி என்றால் மண் ஆகவே களிமண்ணில் உருவம் செய்து வழிபடுவது விசேஷம். விநாயகர் உருவை வெள்லேருக்கன் வேரில் செய்து வழிபடுவது மிகச்சிறந்தது. இவரை வழிபடுதல் எளிது. விநாயகர் பூஜைக்கு அருகம்புல் மிகவும் ஏற்றது. தலையில் குட்டிக் கொள்வதும் தோப்புக்காணம் போடுவதும் அவருக்கு மிக பிரியமானது

The post பிடித்து வைத்தால் பிள்ளையார்  உருவ சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

காயத்ரி ஜபம் செய்யும் முறை – காயத்ரி மந்திர சிறப்பு
காயத்ரி மந்திரம் சிறப்பு

காயத்ரி ஜபம் பொருள் அறிந்து மிகவும் அவசியம், காயத்ரி மஹா மந்திரத்தை பற்றி காஞ்சி ஆச்சார்ய சுவாமிகள் கூறுகையில் காயத்ரி என்றால் எவர்கள் தன்னை தானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம்.
“காயந்தம் த்ராயதே யஸ்மாத் யாத்ரிஇ) த்யபித்யதே!“

காயத்ரி ஜபம் செய்யும் முறை:

மிகவும் பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து, உள்ளத்தை ஒருமுகப்படுத்தி பலமாகக் கூறாமல், மூச்சை அடக்காமல் 5 இடங்களில் நிறுத்தி மிகவும் ஜாக்கிரதையாக உள்ளத்துள்ளே ஜெபிக்க வேண்டும். மௌனமாக ஜெபிக்க வேண்டும். இதுவே மிகச் சிறந்த முறை. ஒருவன் நாள்தோறும் தவறாமல் காயத்ரி மந்திரம் ஜெபிப்பானாயின் அவனது இரு புருவங்களுக்கு மத்தியில் ஒருவித தேஜஸ்காணப்படும். சாமானியர்களின் கண்களுக்குத் தெரியாது. மிகப்பெரும் மகரிஷிகளால்தான் அதைக் கண்டு உணர முடியும்.
காயத்ரி மந்திரத்தை நாள் ஒன்றுக்கு மூன்று தடவைகள் அதாவது (காணாமல், கோணாமல், கண்டு) சூரியன் உதிப்பதற்கு முன்னர், தலைக்கு நேராக இருக்கும் சமயம், அஸ்தமனத்திற்கு முன்னர் 108 தடவைகள் ஜெபிக்க வேண்டும். இயலவில்லை எனில் காலை ஒரு தடவை மட்டுமாவது ஜெபிக்கலாம். இதை சந்தியாவந்தனம் எனவும், அனுஷ்டானம் எனவும் கூறலாம். இம்மந்திரத்தைக் கூறி எத்தனையோ மகான்கள், ரிஷிகள் மிகப்பெரும் பேறுகளைப் பெற்றுள்ளனர்.

காயத்ரி மந்திரதின் பலன்

காயத்ரியின் அருளைப் பெற்ற ஒருவன் இயல்பில் எவ்வளவு தீயவனாயிருந்தாலும், காயத்ரியை உபாசிக்க எண்ணிய கணத்திலிருந்து பரம சாத்வீகனாகவும் பவித்திரனாகவும் மாறி விடுவான். நாளடைவில் அவனுடைய பக்தி, சிரத்தை, சாதனைகளின் காரணமாக அவனுடைய நற்பண்புகள் மேலும் வளர்ந்தோங்கத் தொடங்கும்.
காயத்ரியைக் கூறுவதால் உடல் ஆரோக்யமடையும். நோய் நொடிகள் அணுகா, பலம், தேஜஸ், ஓஜஸ் ஆகியவற்றை நாம் பெறமுடியும். வாக்கு பலிதம் ஏற்படும். புகழ், செல்வம், சீர்த்தி, நன்மைகள் ஆகியன ஏற்படும்.

The post காயத்ரி ஜபம் செய்யும் முறை – காயத்ரி மந்திர சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய தகவல்கள் | srardham in tamil
மஹாளயம் சிரார்த்தம்  சிறப்பு

மஹாளயம் என்பது புரட்டாசி மாதத்திலே செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தம், இறந்தோருக்கு செய்யும் கிரியை இது பிதிர் தேவதைகளுக்குடைய திருப்தியின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம், சுப கருமத்தின் கண்ணும் அசுபக் கருமத்தின் கண்ணும் செய்யப்படும் ஸ்ரார்தம் சாந்தி என்றும் அப்பியுதம் என்றும் சொல்லப்படும், பிரேத திருப்தியின் பொருட்டு செய்யப்படுவது பிரேதஸ்ரார்தம் எனப்படும். சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம் புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேரே நிற்கின்றது. அப்போது சந்திரனது தென்பாகமும் நேராக நிற்கின்றது அத்தருணம் பிதிர்கருமங்களுக்கு விசேஷமான காலமாகும்.

சிரார்த்தம் உரிய  தலங்கள்

சிரார்த்த கருமங்களுக்குரிய சிறந்த தலங்கள் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குரு ஜாங்கலம், புட்கலக்ஷேத்திரம் முதலியனவாகும். இவற்றுள் கயா சிராத்தம் மிக விசேடமுடையது. இறந்த தினம், அமாவாசை, மாளய பட்ச காலம் என்பன சிரார்த்தம் உரிய காலமாகும்.

பிதிர்களுக்கு உரிய காலம்

தேவர்கள் வருடக் கணக்கின்படி புரட்டாசி மாதம் நடுராத்திரியாகும். நடுராத்திரி காலம் நிசப்தமாயிருக்கும். தேவர்கள் ஆராதனைக்கும், பிதிர்களுக்கு உபசாரத்திற்கும் அக்காலமே உரியது சிறந்ததுமாகும். சாத்திரங்களும் நூல் முறைகளும் கூறுவன அதுவேயாகும். எனவே, அக்காலத்தி பிதிரர்களுக்குத் தர்ப்பணம் செய்து பிரீதி செய்ய வேண்டியது அவசியமாகும். ஒரு சிலர் கயாவில் தர்ப்பணம் செய்து விட்டால் பிதிரர்கள் சாந்தமடைந்து விடுவார்கள் பின்னர் எள் தொடவேண்டியதில்லை என்பது தவறான கருத்து. பிரதி மாதம் அமாவாசையன்ரு பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது சாத்திரம். இறந்தவர்களுக்குச் செய்யும் பிதிர் தர்ப்பணத்தால் அவரவர்களுக்குரிய பலன்களை அவர்கள் அவரவரிடத்தில் கொண்டு சேர்ப்பார். ஆதலின் அக்காலத்தில் உபவாசமிருந்து, பிதிர் தர்ப்பணம் செய்து, இயன்றவரை சாதுக்கள் அடியார்களுக்கு அமுது செய்வித்தல் வேண்டும் அங்கனம் செய்தல் பிதிரர்களுக்குப் பிரீதியளிக்கும்.

The post தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய தகவல்கள் | srardham in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

விநாயகருக்கு தோப்புக்கரணம் சிறப்பு
தோப்புக்கரண சிறப்பு

ஒவ்வொருவரும் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வழிபடுவது மிகவும் சிறந்ததாகும். விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் குட்டிக்கொண்டும் வழிபடுவதால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி, தட்டி எழுப்பப்பட்டு அதனால் கஷும்னா நாடி திறந்து கொள்கிறது. நெற்றியில் குட்டிக் கொள்வதால் அங்கே உள்ளடங்கியுள்ள அமிர்த கலசம் எழும்பி அமிர்தம் உடல் முழுவதும் பரவுகிறது. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும், உள் எழுச்சியும் உண்டாகிறது. தியானிப்பதற்கேற்ப மன ஒருமைப்பாடும் இதனால் கிடைக்கின்றது.

The post விநாயகருக்கு தோப்புக்கரணம் சிறப்பு appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ?
அபிஷேகப் பொருட்களும், பலன்களும்

சுகத்திற்காக எண்ணை அபிஷேகமும்,

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட மாப்பொடி அபிஷேகமும்,

பிணி நீங்கி தேக ஆரோக்கியத்திற்கும் நெல்லிமுள்ளி பொடி அபிஷேகமும்,

எதையும் வசீகரிக்கும் சக்திபெற மஞ்சள்பொடி அபிஷேகமும்

மனத்தூய்மைக்கு பஞ்சகவ்யம் அபிஷேகமும்,

எக்காரியத்திலும் வெற்றி அடைவதற்கு பஞ்சாமிர்த அபிஷேகமும்,

ஆயுள் விருத்திக்கு பால் அபிஷேகமும்

மக்கட் பேறுக்கு தயிர் அபிஷேகமும்,

முக்தி பெறுவதற்கு நெய் அபிஷேகமும்,

சுக வாழ்க்கைக்கு – இனிமையான குரலுக்கு தேன் அபிஷேகமும்,

செழுமையான பயிர் வளர்ச்சிக்கு பழவகை அபிஷேகமும்,

எமபயம் நீங்க எலுமிச்சைசாறு அபிஷேகமும்,

சக்திக்கு இளநீர் அபிஷேகமும்,

லட்சுமி காடாச்சம் பெறுவதற்கு சந்தன அபிஷேகமும்,

அறியாமல் செய்கிற குற்றங்களை மன்னித்து அருள கலசாபிஷேகமும் செய்கின்றோம்.

The post அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ? appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

சிவாலயங்களில் அன்ன அபிஷேகம் | annabishekam
சிவாலயங்களில் அன்ன அபிஷேகம் – annabishekam

நாம் உண்ணும் உணவு பஞ்சம் இன்றி கிட்ட அன்ன அபிஷேகமும் செல்கின்றோம். அதிலும் ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்ன அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு இந்த அபிஷேகம் செய்த அன்ன பிரசாதத்தை உட்கொண்டால் சகல ஜன்வரியமும், குறிப்பாக புத்திர பாக்கியம் கிட்டும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. ஆதி சிவ ஆலயமான சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் அன்ன அபிஷேகம் நடைபெறும் இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன அபிஷேகஷேத்திரம் என்று பெயரும் உண்டு.ஆகவே, ஐப்பசி பெர்னமியில் சிவனுக்கு அன்ன அபிஷேகம் செய்து நாட்டில் உணவு பஞ்சம், பசி பட்டினி இன்றி அனைவருக்கும் நல்வாழ்வு கிடைத்திட பிரார்த்திப்போம்.

The post சிவாலயங்களில் அன்ன அபிஷேகம் | annabishekam appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

கார்த்திகை தீப விரதம் | karthigai viratham in tamil
கார்த்திகை தீப விரதம்

கார்த்திகை மாத வளர்பிறை கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி அகல் விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும்.கார்த்திகை அன்று பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும், கார்த்திகை அன்று மாலையில் வீட்டியிருக்கும் எல்லா திருவிளக்குகளையும் ஏற்ற வேண்டும். வாசலில் சிறுவிளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும் போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.

The post கார்த்திகை தீப விரதம் | karthigai viratham in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி மாதம்.
மார்கழி மாதம்

இதை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள். இம்மாதம் அதிகாலையில் நீராடி, பூஜை செய்தால் ஒரு வருடத்தில் பூஜை செய்த பலனைத் தரும் என்பார்கள். அதிகாலையில் பஜனை செய்து கொண்டு வீதிவலம் வருவார்கள். ஆண்டாள் இம்மாதம் பகவானைக் குறித்து பாவை நோன்பு இருந்தது பிரசித்தம்.

மார்கழி மாத சிறப்பு

இம் மார்கழி மாதத்தில் பல வைஷ்ணவ ஆச்சாரியர்களும் பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர். இம்மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர். இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவசமுறுவர்.

ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார் பாடிக் கொடுத்த மணிமாலையாம் திருப்பாவை” கண்ணானுக்கு மணமாலையாக விளங்குவதுபோல் அடியார்களுக்கும் மனதை தெளிவு படுத்தும் அருட் பாமாலையாகவும் விளங்கலானது.
அதுபோலவே மாணிக்கவாசகப் பெருமான் இயற்றிய திருவாசகத்தின் நடு நாயகமாக விளங்கும் திருவெம்பாவையும், திருசடைப் பெருமானின் தண்டைச் சிலம்பணிந்த சேவடி
கமலங்களைப் போற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. அத்தெய்வீகப் பாடல்கள், நம் சிந்தையையும் செயலையும் செம்மைப்படுத்துகிறது.

மார்கழி மாத நோன்பு

இம்மாதத்தில் பல வகையான நோன்புகளை பெண்கள் நோற்கின்றனர். அதன் பலனாக அவர்கட்கு நல்ல கணவன்மார் அமைகின்றனர். இதனைப் ‘பாவை நோன்பு” என்றும் கூறுவர். மார்கழி 27-ஆம் நாள் எம்பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரை பொங்கல் செய்து நிவேதிப்பதனை “கூடார வல்லி” என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.

இதன் உண்மை தத்துவத்தை “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்ற பாட்டால் பாவை ஆண்டாள் நமக்கு அழகுற மொழிகின்றாள். மார்கழி மாதத்தில் மதி மறைந்த நன்நாள் மூல நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் ஆஞ்ச நேயருடைய ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

மங்களகரமான மார்கழி

இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறுகின்றோம். இந்த மாதத்தில் அனைத்து சிவ வைஷ்ணவ ஆலயங்களில் அதிகாலையில் திருமஞ்சனம் நடைபெறும். பெண்கள் அதிகாலையில் பல வண்ணங்களில் தெருவில் கோலம் போடுவார்கள். அதில் அரிசிமாவினால் போடுவது மிகவும் அவசியம், எறும்பு போன்ற சிறுஜீவன்களுக்கு அது உணவாக அமைகின்றது.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் மனிதனுக்கு மிகஅவசியமான ஓசோன் வாயு மிக அதிக அளவில் பரவி இருக்கும் அதை சுவாசித்தல் நுரையீரலுக்கு மிகவும் நல்லது ஆகவேதான் இந்த மாதத்தில் அதிகாலையில் கோலமிடுதல், பஜனை செய்தல் ஆலயம் செல்லுதல் முதலியவைகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவியலாளர் தெரிவிக்கின்றனர்.

The post மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி மாதம். appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
மகா சிவராத்திரி விரதம்

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர் சிவராத்திரி அன்று வைகறைத் துயிலெழுந்து திருநீறு அணிந்து, உருத்திராட்ச மாலைகள் தரித்து. சிவபூஜை செய்து நம சிவாய நம சிந்தையோடு ஆலயம் செல்ல வேண்டும்.

கோயிலை 108 முறை வலம் வரவேண்டும். எம்பெருமானுக்கு நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜைகளைக் கண்டுகளிக்க வேண்டும். சிவ வில்வதளம், அபிஷேகத்திற்காக நெய், தயிர், பால், தேன் மற்றும் பூஜைக்காக கரும்பு, இளநீர், சந்தனம் முதலியவைகளை க்ஷேத்ரங்களுக்குக் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் முழு உபவாசம் இருக்க வேண்டும். அதற்கு இயலாதவர்கள் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒரு வேளை உட்கொள்ளலாம் அல்லது வள்ளி கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம். நான்காவது கட்ட பூஜை முடியும் பொழுது மறுநாள் பொழுது புலர்ந்துவிடும். உடனே சென்று நீராடி, சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி விரத பயன்

இத்தகைய சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு சகல சித்திகளும் கிட்டும். சகல சௌபாக்கியங்களும் பொங்கும்.

சிவராத்திரி விரத மகிமை

திருவைகாவூரில் சுச்வான் என்ற வேடன் மானை வேட்டையாடி வீடு திரும்ப முடியாமல் புலிக்கு பயந்து ஒருமரத்தின் மீது ஏறி அமர்ந்தான். என்ன செய்வது என்றே தெரியாமல் வீட்டை நினைத்து அழுதபடி மரத்தின் இலையை கிள்ளி கீழே போட்டபடி இரவு முழுவதும் விழித்திருந்தான். பசியும், தாகமும் அவனை வாட்டின; பொழுதும் விடிந்தது. வீட்டிற்கு செல்லும் வழியில் மானை விற்று வீட்டிற்கு தேவையான உணவை வாங்கினான். வழியில் வந்த பிச்சைகாரனுக்கும் உணவு அளித்தான், மரணத்தருவாயில் சிவதூதர்கள் சுச்வரனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். வேடனான என்னை சிவலோகத்திற்கு என் அழைத்துச் செல்கிறீர்கள் என காரணம் கேட்டான். அதற்கு சிவதூதர்கள் சிவராத்திரி இரவில் நீ இருந்த வில்வமரத்தின் கீழே ஒரு சிவலிங்கம். இருந்திருக்கிறது. நீ உனது குடும்பத்தை நினைத்து அழுத கண்ணீர் சிவனை அபிஷேகமாக நனைத்துள்ளது. கிள்ளிப்போட்ட வில்வ இலையோ சிவனை அர்ச்சனை செய்ததுபோல் இருந்தது. பசியுடன் விழித்திருந்ததோ சிவனுக்குரிய விரதம் போல் இருந்தது. இவ்வாறு நீ என்ன செய்கிறோம் என தெரியாமலேயே சிவரத்திரி விரதம் இருந்திருக்கிறாய் என கூறினார்கள். இதனாலேயே சுச்வான் என்ற வேடன் மறுபிறவியில் சித்திரபானு என்ற மன்னனாக பிறந்துள்ளான். தெரியாமல் செய்ததற்கே, வேடனை மறுபிறவியில் சித்திரபானு மன்னனாக பிறக்க வைத்தார் இறைவன். நாமும் தெரிந்தே முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து இறைவனின் பரிபூரணா அருளைப்பெறுவோமாகப்

The post மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

பிரதோஷம் மகிமை | pradosham details in tamil
பிரதோஷம் மகிமை

பிரதோஷ காலம் என்பது மாதா மாதம் வளர்பிறை தேய்பிறைகளில் வரும் பதிமூன்றாம் நாளாகிய திரியோதசி திதியில் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. பிரதோஷ காலத்தில் சரஸ்வதி தன்கையில் வீணை வைத்துக் கொண்டும், இந்திரன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், பிரம்ம தேவன் தாளம் போட்டுக்கொண்டும், இலக்குமி தேவி பாடல்கள் பாடிக்கொண்டும், திருமால் மிருதங்கத்தை வாசித்துக்கொண்டும், தேவர்கள் எல்லா புரங்களிலும் நின்று கொண்டும் ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் பார்வதி தேவியின் பதியாகிய சிவபெருமானை பக்தியுடன் பணிவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு பிரதோஷ வேளையில், விஷ்ணு, இலக்குமி, பிரம்மா, தேவர்கள் வழிபடுகின்றனர். இக்காலத்தில் எல்லாம் வல்ல சிவபெருமானை விரதம் இருந்து வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.

The post பிரதோஷம் மகிமை | pradosham details in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

வள்ளலார் வரலாறு | vallalar history in tamil
வள்ளலார் வரலாறு

கல்வியில் வல்லமை பெற ஏதுவாக இருக்கும் எனக்கருதி இவரை மக்கள் வழிபடுகிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் கல்வி, சமயம், சமுதாயம் போன்ற துறைகளில் பலநல்ல மாற்றங்களைச் செய்த பெருமைக்குரியவர் வடலூர். வள்ளல் பெருமான் என்று கூறப்பெறும் இராமலிங்க அடிகளார் ஆவார்.

வள்ளலார். இம்மண்ணுலகில் 50 ஆண்டுகள் 3 மாதங்கள் 25 நாட்கள் வாழ்ந்தவர். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடி உயிர்களின் மீது தனக்குள்ள சுருணையைப் புலப்படுத்தியவர் அவர். பசியால் வாடும் மனிதர்களின் பசிப்பிணி போக்க சத்திய தருமச்சாலையை அமைத்தவர்.

சமாச சுத்த சன்மார்க்கம்

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் நம் நாட்டில் சாதி வேறுபாடுகள் மிகுந்திருந்தன, சமயங்களின் பேரால் பிணக்குகள் மளிந்திருந்தன, இவற்றையெல்லாம் போக்குவதற்கு அவர் பெரு முயற்சி மேற்கொண்டார். இறுதியில் ஒரு வழியையும் கண்டு பிடித்தார். வள்ளலார் கண்டுபிடித்த வழிக்கு சமாச சுத்த சன்மார்க்கம் என்று பெயர், சன்மார்க்க நெறி என்றால் எல்லாருக்கும் உரிய பொதுவான நெறி என்று பொருள். இந்த நெறிக்குச் சாதி, மதம், குலம், இனம், வெள்ளை, கறுப்பு என்பது போன்ற நிற வேறுபாடு எதுவும் இல்லை. எல்லாச் சமயத்தவர்கள், சாதியினர், இனத்தினரும் சன்மார்க்க நெறியை அடைய முடியும். கருணை மனமும் அன்புணர்வும் உடையவர்கள் எவராயினும் சன்மார்க்கத்தைப் பின்பற்றலாம் என்று வள்ளலார் அறிவித்தார். எத்துணையும் பேதமுறா எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒத்துரிமை உடையவராய் வாழும் உள்ளம் கொண்டவர்களை வள்ளலார் பெருமான் தெய்வம் எனப் போற்றி வணங்குகிறார்.

வள்ளலார் பார்வை

அவரது பார்வையில் உயிர்க்கொலை புரியாது, புலால் உண்ணாது, பிற உயிர்களையும் தமது உயிர்போல் மதிக்கிறவர்கள் மனிதர்கள் அல்லர், அவர்கள் யாவரும் வாழும் தெய்வங்களே. இவ்வாறு மதத்தை விடவும், மனிதர்களை நேசித்த வள்ளற்பெருமான்

வள்ளற்பெருமான் 30-01-1874 அன்று தைப்பூசத் திருநாளில், தம் அன்பர்களிடத்தே உங்கள் கண்களுக்கு தெரியாமல் இன்று சிறிது நேரத்தில் அருட்பெரும் சோதியாக விளங்கும் இறைவன் அருளால் அச்சோதியில் கலந்து விடப்போகிறேன் என்று கூறி, ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டார். அவ்வறையை வெளிப்பக்கத்தில் பூட்டி விடுமாறு உத்திரவிட்டார். அவர் விரும்பியபடி வெளிப்புறக் கதவு பூட்டப் பட்டது. வள்ளலார் சோதியுள் கலந்தார். இந்த நாளை நினைவு படுத்தும் வகையில் வடலூரில்,

தைப்பூச ஜோதி தரிசனம்

வள்ளலார் அமைத்த சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் நடைபெற்று வருகிறது. வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் சோதி வழிபாடு முறையாக நடைபெற்று வருகிறது. இவ்வழிபாடு உயர்ந்த தத்துவத்தை உருவகமாக உணர்த்துகிறது.

ஏழு திரைகள் தத்துவம்

வள்ளலார் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் ஏழு திரைகள் உள்ளன.அவை

1, கருப்பு, 2. நீலம், 3. பச்சை, 4. சிவப்பு, 5. பொன்மை, 6. வெண்மை, 7. கலப்பு நிறம் கொண்டவை,

இவை ஒவ்வொன்றாக விலகிய பின்னர்தான் ஒளி வடிவிலிருக்கும் இறைவனைக் காணமுடியும். இந்த ஒளிவழிபாட்டுத் தத்துவம் எண்ணிப் பார்க்கத்தக்கது. நமது உள்ளம் விளக்கு. உள்ளத்தில் உள்ள இறைவன் ஒளிவடிவாய் இருக்கின்றான். இந்த இறையொளியை நாம் உடனே பார்க்க முடிவதில்லை. காரணம் அதனைப் பல மாயத்திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அம்மாயத்திரைகள் விலகினால் மட்டுமே அருட்சோதி ஆண்டவரைக் காணலாம்.

இந்த ஏழு திரைகளும் ஏழு வகை சக்திகளைக் குறிக்கின்றன.

கருப்புத்திரை – மாயாசக்தி
நீலத்திரை – கிரியாசக்தி
பச்சைத்திரை – பராசக்தி
சிவப்புத்திரை – இச்சாசக்தி
பொன்மைத்திரை – ஞானசக்தி
வெண்மைத்திரை – ஆதிசந்தி
கலப்பத்திரை – சிற்சக்தி

இலை ஒவ்வொன்றாக விலகினால் உண்மை ஒளியாகிய இறையொளி புலப்படும். இதனைக் குறியீடாக உணர்த்துவதே சந்திய ஞான சபையிலுள்ள எழு திரைகளும் ஜோதி தரிசனமும் ஆகும். இந்தாளில் தான் பிரம்மா, மகா விஷ்ணு, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் மற்றும் அனைத்து தேவர்களும் சிவனின் திருவருளால் ஞானக்கள் பெற்று சிவனின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து ஆனந்தக்கடலில் மூழ்கினார்கள். பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கினங்க நடராஜப்பெருமானும் அன்னை சிவகாமியுடன் ஞானசபையிலே வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

The post வள்ளலார் வரலாறு | vallalar history in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.