கந்த சஷ்டி விரதம் முறை | kanda sashti viratham
கந்த சஷ்டி விரதம் சிறப்பு
ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ வளர்பிறையில் சஷ்டிதிதியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் விரதங்களுள் முதன்மையான சிறப்புடன் விளங்குகிறது. கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்போர் மற்ற எல்லா விரதங்களையும் கொண்டாடிய பலனைப் பெறுவர்.
இந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஆறு நாட்களும் விரதமிருப்போர் பூரண உபவாசம் இருந்து இந்த விரதத்தைக் கொண்டாட வேண்டும். அவ்வாறு இருப்பதற்கு இயலாதவர்கள், முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உட்கொள்ளனம். ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது கண்டிப்பாக பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
கந்தசஷ்டி விரதத்தை ஆண்டுதோறும் அனுஷ்டிக்க இயலாதவர்கள் ஆறு ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிப்பது உத்தமம். கந்தசஷ்டி ஆறு தினங்களில் ஒரு நாள் மௌனவிரதம் இருப்பது சிறந்தது, மன வலிமை தரும்.