விழாக்கள்

கார்த்திகை தீபம் வரலாறு , தத்துவம் மற்றும் சிறப்பு

கார்த்திகை தீபம் – karthigai deepam

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருக்கார்த்திகை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவஸ்தலமான திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. எனவே, கார்த்திகை நட்சத்திரம் சிவன், முருகன் ஆகியோரை ஒருசேர வழிபட ஏற்ற நாளாக உள்ளது,

கார்த்திகை தீபம் தத்துவம்

திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப் படுவதின் நோக்கம் “நான்” அகந்தையுடன்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். நமக்கும் மேலாக ஒருவன் இருக்கிறான். ஆணவத்துடன் இருந்தால், நமக்கு அவன் புத்தி புகட்டுவான் என்ற அரிய தத்துவத்தை விளக்க இந்த விழா எடுக்கப்படுகிறது.

கார்த்திகை தீபம் வரலாறு

ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர். அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே பறக்க பறக்க சிவன் உயர்ந்து கொண்டே போனார். விஷ்ணு கீழே போசுப்போக சிவனின் கால்கள் நீண்டு கொண்டே போனது. இருவருமே தோல்வியடைந்து சிவபெருமானிடம் செய்வதறியாது நின்றனர். அப்போது சிவன் இருவரிடமும், இந்த உலகில் யாருமே பெரியவர் இல்லை, நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார். இதைக்கேட்ட பிரம்மா, விஷ்ணுவின் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த ஜோதி வடிவக்காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமாள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். இது முருகனுக்குரிய வழிபாடு. மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது.
அன்றைய தினத்தில்தான் உமையாம்பிகைக்கு சிவபெருமாள் தனது உடம்பில் ஒரு பாகத்தை அளித்து அர்த்தநாதீஸ்வரர் உருவெடுத்ததாக வரலாறு. அன்றைய தினம் திருவண்ணாமலையில் அர்த்தநாதீஸ்வரர்: புறப்பாடும் நடைபெறும்,

கார்த்திகை தீப சொக்கபனை

அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை தடைபெற்று, சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். சுட்டகப்பனை எனும் சொல்லே சொக்கபனையாக மருவியுள்ளது. சுட்டகம் என்பது வறட்சி, உலர்ந்த தென்னை பனை, கமுகு, வாழை இவற்றின் தண்டினை தீபதண்டமாக ஆலயங்களில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் சுட்டகப்பனை எனும் சொக்கப்பனையில் அக்னி மூட்டி, எரியும் ஜுவாலையில் ஜோதி சொரூபமாக இறைவனை வழிபடுவதாக வரலாறு இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *