விழாக்கள்

சிவராத்திரி பலன் வளம் தரும் ஐந்து வகை சிவராத்திரி

சிவராத்திரி ஐந்து வகைப்படும்

1.நித்ய சிவராத்திரி

2.பட்ச சிவராத்திரி

3.மாத சிவராத்திரி

4.யோக சிவராத்திரி

5.மஹா சிவராத்திரி

1.நித்ய சிவராத்திரி

ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவபூஜை புரிவது நித்ய சிவராத்திரி எனப்படும்.

2.பட்ச சிவராத்திரி

தைமாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் பதிமூன்று நாட்கள் நித்யம் ஒரே வேளை பூஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.

3.மாத சிவராத்திரி

1.மாசி கிருஷ்ண சதுர்த்தசி
2.பங்குனி முதலில் வரும் திருதியை –
3.சித்திரை கிருஷ்ண அஷ்டமி –
4.வைகாசி முதல் அஷ்டமி
5.ஆனி சுக்ல சதுர்த்தி –
6.ஆடி கிருஷ்ணா பஞ்சமி
7.ஆவணி சுக்ல அஷ்டமி –
8.புரட்டாசி முதல் த்ரியோதசி –
9.ஐப்பசி சுக்ல துவாதசி
10.கார்த்திகை முதல் சப்தமி அஷ்டமியும் –
11.மார்கழி இரு பட்ச சதுர்த்தசிகள்:-
12.தை மாத சுக்ல திருதியை இவை மாத சிவராத்திரி .

4.யோக சிவராத்திரி

சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.

5.மஹா சிவராத்திரி

மாசி கிருஷ்ண சதுர்த்தசி மஹா சிவராத்திரி, சிவபெருமான் சிவராத்திரியின் மகிமையை நந்திதேவருக்கு உபதேசித்து அருளினார். நத்திதேவர் சிவராத்திரியின் மஹாத்மியத்தை எல்லா தேவர்களுக்கும், கணத்தவர்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்து அருளினார். இத்தகைய சிவராத்திரி விரதத்தை பிரம்மதேவர், திருமால், பார்வதி, ஆதிசேஷன், சரஸ்வதி அனுஷ்டித்துள்ளனர்.
ஒரு சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பது நூறு ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலனைக் கொடுக்கிறது என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர்க்கு காசியில் முக்தி அடைந்த பலன் கிட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: