விழாக்கள்

தீபாவளி பண்டிகையின் வரலாறு மற்றும் சிறப்பு

தீபாவளி பண்டிகை

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தியில் வரும் பண்டிகை தீபாவளி பண்டிகை. தீம் ஆவளி (தீபாவளி) தீப வரிசை வாழ்க்கையில் இருளை நீக்கி ஒளியை கொடுப்பது.

தீபாவளி பண்டிகையின் வரலாறு

பகவான் ஸ்ரீகிருஷ்ணான் நரகாசூரனை வதம் செய்தார். அவன் இறக்கும் தருவாயில் பகவானிடம் சில வரங்களை கேட்டான். அதாவது அவன் இறந்த தினத்தை உலகில் உள்ள மக்கள் எவ்வித துக்கம் இன்றி அன்று மங்கள ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதே அன்று எண்ணை ஸ்நானம் செய்வது மிக அவசியம், எண்ணையில் லட்சுமியும் நீரில் கங்கையும் அன்று வருவதால் கங்கா ஸ்தான பலன் கிடைக்கும்.

அன்றையதினம் காலை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது கங்கா ஸ்நானம் ஆச்சு என்று கேட்பது வழக்கம். வடநாட்டில் அன்று லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஜைன மதத்தினர் அன்று லட்சுமி பூஜை செய்து புது கணக்கு ஆரம்பிப்பர். ஒரு சிலர் அன்றையதினம் சூபோ, லட்சுமி பூஜையும் செய்வதுண்டு. கேரளாவில் ஓணம் பண்டிகை சர்வ மதத்தினர் கொண்டாடுவது போல் தமிழகத்தில் மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் பட்டாக வெடித்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி, புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் மணமகள் வீட்டில் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர். பகவான் கிருஷ்ணன் அரகனை பலவித அஸ்திர, சக்கரங்களை கொண்டு தாக்கி அழித்த போது ஏற்பட்ட பயங்கர சப்தங்களை நினைவு கொள்ளும் வகையில் அன்றையதினம் பட்டாசு வெடிக்கப்படுகின்றது.

தலை தீபாவளி

புதுமாப்பிள்ளைகள் வந்து கொண்டாடும் தலை தீபாவளியன்று மணமக்கள் இருவரையும் அணிந்த உட்கார வைத்து எண்ணை நலங்கிடுவது வழக்கம். கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை பிறகு மணமக்கள் இருவரையும் அமரச் செய்து ஆரத்தி எடுப்பது வழக்கம்.
தீபாவளி மருந்து அன்றைய தினம் பட்சணங்கள் சாப்பிடும் முன் தீபாவளி மருந்து சாப்பிட வேண்டும். தீபாவளி மருந்து என்பது சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, ஓமம், லவங்கம், சித்தரத்தை, எலக்காய் பரங்கிசக்கை இவைகளை சூரணம் செய்து பனைவெல்லம், நெய், தேன் சேர்த்து தயாரிப்பது.

தீபாவளி சிறப்பு

நரகாசூரன் என்ற கொடிய அசுரனை அழித்த இத்தினத்தில் நம் அகா எண்ணங்களை ஒழித்து நல்ல எண்ணங்களுடன் தீபத்திருநாளில் தீபம் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்திடுவோம். கேதார கௌரி விரதம் ஐப்பசி அமாவாசை அன்று அனுஷ்டிப்பது போல் ஒரு சிலர் தீபாவளியன்றும் விரதம் இருந்து நோன்பு செய்வதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *