ரதசப்தமி | ratha saptami in tamil
ரதசப்தமி
தை அமாவாசையை அடுத்த ஏழாம் நாள் ரதசப்தமி பண்டிகை. அன்று சூரியபகவாளின் தேர் மேற்கே திரும்புவதாக ஐதிகம். அன்று சுமங்கலிகள் ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி வைத்து அதில் சிறிது அட்சதை வைத்து தலையில் வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதாக ஐதீகம். பெற்றோர் உள்ள ஆண்கள் இலையில் அட்சதை மாத்திரம் வைத்துக் கொண்டு ஸ்தானம் செய்ய வேண்டும். பெற்றோர் இல்லாத ஆண்கள் எருக்கத்தழையுடன் எள்ளை வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று பூஜை அறையில் தேர்க்கோலம் போட்டு, காவி இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நைவேத்தியம் செய்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
ரதசப்தமி பலன்
ரதசப்தமி நாளில் ஏழு எருக்கன் இலைகளை தலைமீது வைத்து அப்பெருமானை துதித்து நீராடினால் எழு ஜன்மங்கள் பாவம் அகலும் என்பது மரபு.