பக்தி பாடல்கள்முருகன் பாடல்கள்

Sollatha Naal Illai Lyrics in Tamil | சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்

சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம் 

சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
சுவையான அமுதே செந்தமிழாலே ….

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !

சுவையான அமுதே செந்தமிழாலே …..
உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ !
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ !

கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !

murugan tamil god songs lyrics

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்

இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட

அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட

அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் – உன்னைச்

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !

சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா !

சுடர்மிகு வடிவேலா !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *