பக்தி பாடல்கள்முருகன் பாடல்கள்

Unai Padum Thozhil Indri Veru Illai Lyrics | உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்

உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம்.

உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா !!!!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே

arupadai veedu

சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே

வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா !!!!

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே

குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா !!!!

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா !!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *