பக்தி பாடல்கள்முருகன் பாடல்கள்

Kandhan Kaladiyai Vananginal Lyrics in Tamil

கந்தன் காலடியை வணங்கினால் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று  வாழ வேண்டிக் கொள்கிறோம் .

கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால் ..

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் .

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *