பக்தி பாடல்கள்முருகன் பாடல்கள்

தங்க மயம் முருகன் பாடல் வரிகள் | Thanga Mayam Murukan Lyrics

தங்க மயம் முருகன் சந்நிதானம் என்ற முருகன் பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறோம் 

தங்க மயம் முருகன் சந்நிதானம் பாடல் வரிகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்

அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே
அவன் ஈராறு கைகளாம் தாமரையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்

அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *