காரடையான் நோன்பு | karadaiyan nombu
காரடையான் நோன்பு என்றால் என்ன ?
இதை சாவித்ரி நோன்பு என்றும் இந்நோன்பு கணவனின் குறித்து செய்யப்படுவதாகும். இதை மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் வரும் சமயம் நோற்க வேண்டும். “பாசிக் கயிறு பாசி படியும்” என்று இம்மாதம் புதிய திருமாங்கல்ய சாடு மாற்றிக் கட்டிக் கொண்டால் மிகவும் விசேஷம்,
காரடையான் நோன்பு கதை
சாவித்ரி யமதர்ம ராஜனிடமிருந்து தன் கணவன் உயிரை மீட்டது இந்த தினத்தில்தான் என்று கூறுவார்கள்.
காரடையான் நோன்பு விரத முறை
வீட்டைப் பெருக்கி மெழுகி; மாக்கோலம் இட்டு செம்மண் இட வேண்டும். மாதம் பிறக்கும் சமயம்தான் நோன்பு நோற்க வேண்டும். நோன்பு செய்யும் வரை உபவாசம் இருந்து சாப்பிட வேண்டும். பூஜைக்கு காமாக்ஷி அம்மனின் படத்தை வைத்து, ஒரு கொத்து மாவிலையை சொருகி. தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், நோன்பு அடை, வெண்ணெய் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். நோன்பு சரட்டில் ‘புஷ்பந்தைக் கட்டி படத்திற்கு சார்த்திவிட்டு கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.