சிவாலயங்களில் அன்ன அபிஷேகம் | annabishekam
சிவாலயங்களில் அன்ன அபிஷேகம் – annabishekam
நாம் உண்ணும் உணவு பஞ்சம் இன்றி கிட்ட அன்ன அபிஷேகமும் செல்கின்றோம். அதிலும் ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்ன அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு இந்த அபிஷேகம் செய்த அன்ன பிரசாதத்தை உட்கொண்டால் சகல ஜன்வரியமும், குறிப்பாக புத்திர பாக்கியம் கிட்டும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. ஆதி சிவ ஆலயமான சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் அன்ன அபிஷேகம் நடைபெறும் இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன அபிஷேகஷேத்திரம் என்று பெயரும் உண்டு.ஆகவே, ஐப்பசி பெர்னமியில் சிவனுக்கு அன்ன அபிஷேகம் செய்து நாட்டில் உணவு பஞ்சம், பசி பட்டினி இன்றி அனைவருக்கும் நல்வாழ்வு கிடைத்திட பிரார்த்திப்போம்.