அறுபடை வீடு முருகன் கோயில்கள் | Arupadai veedu temples.
Arupadai veedu koil list
அறுபடை வீடு | மூலவர் | மாவட்டம் | திருவிழாகள் |
---|---|---|---|
1. திருப்பரங்குன்றம்
Subramanya Swamy Temple | கடவுள் : தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி | மாவட்டம் : மதுரை | முக்கிய விழாக்கள் : கந்தசஷ்டி , பிரம்மோற்சவம் (பங்குனி மாதம்) கார்த்திகை தீபம் |
2. திருச்செந்தூர் Subramanya Swamy Temple | கடவுள் : வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி | மாவட்டம் : தூத்துக்குடி | முக்கிய விழாக்கள் : சூரசம்ஹாரம் |
3.பழனி Dandayuthapani Swamy Temple | கடவுள் : தண்டாயுதபாணி – பாலதண்டாயுதபாணி | மாவட்டம் : திண்டுக்கல் | முக்கிய விழாக்கள் : தைப்பூசம் |
4. சுவாமி மலை Swaminatha Swamy Temple | கடவுள் : சுவாமிநாத சுவாமி | மாவட்டம் : தஞ்சாவூர் | முக்கிய விழாக்கள் : வைகாசி விசாகம் |
5. திருத்தணி Subramanya Swamy Temple | கடவுள் : வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி | மாவட்டம் : திருவள்ளூர் | முக்கிய விழாக்கள் : ஆடிக்கிருத்திகை |
6. பழமுதிர்சோலை Subramanya Swamy Temple | கடவுள் : வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி | மாவட்டம் : மதுரை | முக்கிய விழாக்கள் : பங்குனி உத்திரம் |
திருப்பரங்குன்றம்
மூலவர்: தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி
முதல்படை வீடு .தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது .
தல சிறப்பு
சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைத்த தலம் ஆறுபடை வீடுகளில் மிகப்பழமையானது . கிபி ஆறாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது இங்கு தேவசேனாவுடன் முருகன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பது சிறப்பு. இங்கு வேலுக்கு அபிஷேகம் செய்வது மிக சிறப்பு
திருவிழாக்கள்
கந்த சஷ்டி ,பிரம்மோற்சவம் பங்குனி மாதத்தில் மற்றும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம்
திருச்செந்தூர்
மூலவர்: வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி
இரண்டாம் படைவீடு . வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
கடலின் ஓரத்தில் அமைந்திருப்பதால் திருச்சீலைவாய் , ஜயந்திபுரம் என்றழைக்கப்படும் திருக்கோயில் சூரன் சூரபத்மனை போரில் வெற்றி கொண்ட திருத்தலம் . கிழக்கே வங்காள விரிகுடா கடல் இருப்பதால் மேற்கில் ராஜ கோபுரம் கொண்ட கோயில் இதன் தனிச்சிறப்பு இது முருகனை குரு வழிபட்ட ஸ்தலம் ஆகும்
திருவிழாக்கள்
கந்த சஷ்டி விழா சிறப்பு
பழனி
மூலவர்: தண்டாயுதபாணி – பாலதண்டாயுதபாணி
மூன்றாம் படைவீடு தண்டாயுதபாணி – பாலதண்டாயுதபாணி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
நாரதர் கொண்டுவந்த ஞானப்பழத்தை அடைய வேண்டி யார் முதலில் உலகத்தை சுற்றி வருவது என்ற போட்டியில் தமையன் பிள்ளையாரும் முருகனும் போட்டியிடுகின்றனர் முருகன் மயில் மீதேறி உலகை சுற்றி வலம் வருவதற்கு முன் பிள்ளையார் அம்மையப்பனை சுற்றி வந்து பிள்ளையார் ஞான பழத்தை பெற்றுக்கொள்கிறார். இதனால் கோபம் கொண்ட முருகன் தண்டு மற்றும் கோமணத்துடன் பழனி மலை மீது பாலதண்டாயுதபாணி எழுந்தருளுகிறார் .
பழனி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழனி முருகன் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது எனவே அங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பஞ்சாமிர்தம் பால் மற்றும் தீர்த்தங்களை உண்டால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம்
திருவிழாக்கள்
தைப்பூசம் விழா சிறப்பு
சுவாமி மலை
மூலவர்: சுவாமிநாத சுவாமி – சிவகுரு நாதன்
நான்காம் படைவீடு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
படைக்கும் தொழில் செய்பவர் ஆகிய பிரம்மா ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை மறந்ததால் முருகன் அவரை சிறை வைத்தார் இதனால் சினம் கொண்ட சிவபெருமான் ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியுமா என முருகனிடம் கேட்க .முருகன் குருவாகவும் சிவபெருமான் சிஷ்யராக அமர்ந்து ஓம் எனும் மந்திரத்தின் பொருளை சிவபெருமானுக்கு அருளிச் செய்த இடம் .அதனால் இந்த சுவாமி மலை முருகனுக்கு ‘சிவகுரு நாதன்’ என்ற பெயர்.
திருவிழாக்கள்
வைகாசி விசாகம்
திருத்தணி
மூலவர்: வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி
ஐந்தாவது படைவீடு . வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தபின் முருகன் தன் கோபத்தை தணித்துக் கொள்வதாக கூறி திருத்தணிக்கு செல்கிறார் அங்கு குறப்பெண் வள்ளியை தன் அண்ணன் விநாயகரின் உதவியால் காதல் திருமணம் செய்து கொள்கிறார் முருகன் கோபம் தணிக சென்றதால் திருத்தணிகை என பெயர் பெற்றது
திருவிழாக்கள்
ஆடிக்கிருத்திகை
பழமுதிர்சோலை
மூலவர்: வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி
ஆறாவது படைவீடு. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
முருகன் மாடு மேய்க்கும் சிறுவன் போல் வந்து ஒளவை சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என எனக் கேட்டபொழுது ஒளவை சுட்டபழம் வேண்டுமென கேட்க முருகன் மரத்தை உழுக்க பழுத்த பழங்கள் மண்ணில் விழுந்தன அப்பொழுது நாவற்பழங்களை மீது மண் துகள்கள் ஒட்டி இருந்தன ஒளவை வாயால் ஊதினார் அதற்கு முருகன் என்ன பழம் சுடுகிறதா என கேட்க ஒளவை வந்திருப்பது முருகன் என உணர்ந்து முருகனை வழிபட்டு போற்றிப் பாடிய இடம்
திருவிழாக்கள்
பங்குனி உத்திரம்