ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றிக்கொள்ள உகந்த நாள்
ஆவணி அவிட்டம் பூணூல் சிறப்பு
ஆடை அணிவது உடம்புக்கு அவசியமானது போல உயிர் நலத்துக்கு அவசியமாகப் பூண (அணிய) வேண்டிய நூல் ஆதலின் “பூணூல்” என்று பெயர் பெற்றது. மந்திர பூர்வமாக அணிவதால் தெய்வீகத் தன்மை பெறுகிறது. தெய்வ காரியங்களைச் செய்யும்போது இடது தோளில் பூஜால் இருந்தால் தோரிகளும், பித்ரு வழிபாட்டின் போது வலது தோளில் பூணூல் அணிந்து கொண்டால் பித்ருகளும் வந்து வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். வேதத்தை ஓதி, கடவுளை வேண்டி நாடு செழிக்க நலம் பெற ஜீவ வர்க்கங்கள் மரம், செடி கொடி, பிராணி வாக்கங்கள், மனித சமுதாயம் எல்லோரும் நல்வாழ்வு பெற வேண்டுகோள் விடுக்க பூணூல் அணிந்து வேள்விகளையும், பூஜைகளையும் செய்து வருகிறார்கள். பூணூல் ஒன்பது விதமான தேவதைகளுடன் முப்புரி நூல்களாக விளங்கித் தெய்வ வழிபாடு செய்ய உதவியாகிறது. இது கடவுளுக்கு அடிமை என்ற அடையாளத்தையே காட்டுகிறது.