கோகுலாஷ்டமி – ஜன்மாஷ்டமி | gokulashtami in tamil

கோகுலாஷ்டமி – ஜன்மாஷ்டமி

கோகுலாஷ்டமி என்றால் என்ன ?

கண்ணன் பிறந்த நாளைப் பாரதம் முழுவதும் இந்துக்கள் பண்டிகையாகவே கொண்டாடுகிறார்கள். ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு எட்டாவது நாள் அஷ்டமி தினத்தன்று நள்ளிரவில் கண்ணான் பிறந்ததாகக் கொண்டாடப் படுகிறது.
இத்திருநாளை வடக்கே ஜன்மாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள். வைனவர்கள் கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

கிருஷ்ணன் பிறந்த மதுராவில் இந்த நள்ளிரவு நேரத்தில் சிறப்புப் பூஜையுடன் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. அந்த நாளை அந்த நேரம் வரை உபவாசம் இருந்து பூஜை செய்வது வழக்கம். வைணவர்கள் குழந்தை பிறந்தபின், பிறந்த நாளாகக் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படும் தமிழ்நாட்டில் கண்ணனின் பிறந்த நாள் குழந்தைகளால் குதூகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று கண்ணனுக்குப் பிடித்தமான முறுக்கு சீடை, தேன்குழல், கட்டு, அப்பம், வெண்ணை ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்துப் பூஜித்துக் குழந்தைகள் ரசித்துச் சாப்பிடுவார்கள். கண்ணன் வீட்டுக்கு வருவதாகக் கருதி வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரையில் குழந்தைக் கண்ணானின் பாதங்களை மாக் கோலத்தில் வரைந்து மகிழ்வார்கள். தமிழக கிராமங்களில் இன்றும் கண்ணன் பிறந்தநாள் இரவு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் கதாகாலட்சேபம், கச்சேரி பஜனை போன்றவற்றில் ஈடுபடுவார்கள். கிருஷ்ணன் படத்தை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பழக்கமும் உண்டு. தமிழ்நாட்டில் உறியடி உற்சவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். எண்ணெய், பிசுக்கு ஆகியவற்றைப் பூசி உருவாக்கிய கம்பத்தில் உச்சியில் அடங்கிய பரிசு மூட்டை தொங்கும். வாலிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு காசுகள் அடங் வழுக்குமாத்தில் ஏறிப் பரிசுப் பணத்தை பறிப்பார்கள். அவர்கள் ஏற முடியாதபடி சுற்றிலும் உள்ள மக்கள் தண்ணீரை அவர்கள் மீது பீச்சி அடித்து விளையாடுவார்கள். வேறு சில முறைகளிலும் உரியடி உற்சவம் நடைபெறுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.