இராப்பத்து பகல் பத்து உற்சவம் சிறப்பு
இராப்பத்து பகல் பத்து உற்சவம்
வைகுண்ட ஏகாதசியை இடையில் வைத்து அதற்குமுன் பகலில் 10 நாட்களும், அதற்கு பின் இரவில் பத்து நாட்களும் ஆக முறையே 20 நாட்கள் அத்யாயன உற்சவம் நடத்தப்பெறும் இதுவே பகல் பத்து, இராப்பத்து உற்சவம் என்று வைணவத்தில் சொல்லப் பெறும்.
இராப்பத்து பகல் பத்து உற்சவ வரலாறு
மகாவிஷ்ணுவை ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் சிம்மாசனத்தில் இருக்க வைத்துத் தாம் இயற்றிய திருவாய்மொழி என்ற ஆயிரம் பாக்களை மார்கழி மாத ஏகாதசி முதல் 10 நாட்களில் தினம் நூறாகக் கேட்கச் செய்து பத்தாம் நாள் திருவடி சேர்ந்தார்.
இதன்பிறகு ஆண்டுதோறும் இம்மரபைப்பின்பற்றி ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்து அரையர்கள் ஓதி இவ்விழாவை நடத்தி வந்தனர், பின் வந்த திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு எழுந்தருளச் செய்து இவ்விழாவைத் திருவரங்கத்தில் சம்பிரதாயப்படி நடத்தினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் விக்ரகம் அமைந்து ஏகாதசிக்கு முன் 10 நாட்களில் திருமொழி முதலிய மூவாயிரம் பாடல்களையும் ஓதி முடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.