விரதங்கள்

ஏகாதசி விரத சிறப்பு – ஏகாதசி விரதம் இருக்கும் முறை

ஏகாதசி விரதம்

ஏகாதசி என்பது வளர்பிறை தேய்பிறைகளின் பதினோராம் நாள், இவ்விரதம் காத்தல் கடவுளாகிய விஷ்ணுமூர்த்தியைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவது. இது நித்தியம். காமியம் என இருவகைப்படும். நித்தியம், நிலையான முக்தியை விரும்பி அனுஷ்டிக்கப்படுவது. காமியம், நிலையான இம்மைப் பயன்களை விரும்பி அனுஷ்டிக்கப்படுவது. ஏகாதசி, சிவபிரானுக்குரிய திதியாகும். துவதசி திருமாலுக்குரிய திதியாகும். இவ்வீரண்டு திதிகளும் பொருந்திவரும் விரதமாதலின் சைவர்கள் வைஷ்ணவர்கள் யாவரும் இதனை அனுஷ்டிப்பர்.

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

ஒரு வருடத்தில் வரும் ஏகாதசி நாட்கள் இருபத்துநான்கு. இவற்றுள் பூர்வ பட்சத்தில் வரும் பன்னிரண்டு ஏகாதசி திதிகளிலே இவ்விரதம் அனுஷ்டிக்கப்படல் வேண்டும்.

இவ்விரதத்தைக் கார்த்திகை மாதம் பூர்வபட்ச ஏகாதசியை முதலாகக் கொண்டு அனுஷ்டித்தல் வேண்டும் என்பர். ஏனெனில், இம்மாதத்தில்தான் மகாவிஷ்ணுமூர்த்தி ஆடி முதல் கார்த்திகை முடியவுள்ள ஐந்து மாதங்களில் நெடுந்துயில் கொள்ளுதலின் இவ்வைந்து மாதங்களில் நிகழும் ஏகாதசிகள் சிறந்தனவெனவும் கூறுவர். இக்காலத்து இவ்விரதம் மார்கழி மாதப் பூர்வப்பட்ச ஏகாதசியை முதலாகக் கொண்டும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஏகாதசி விரத சிறப்பு

மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் பதினோறாம் நாளன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப் படுகிறது. மந்திரத்துக்கு காயத்ரி தெய்வத்துக்கு தாய் தீர்த்தத்திற்கு காசி – முக்திக்கு காஞ்சி – விரதத்துக்கு ஏகாதசி என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு அந்த அளவிற்கு ஏகாதசி விரதமானது பக்தியிலும் புண்ணியத்திலும் உவர்ந்து சிறந்து விளங்குகிறது. மொத்தம் ஒரு ஆண்டுக்கு இருபத்தைந்து ஏகாதசிகள் வருகின்றன. ஒரு மாதத்திற்கு இரு ஏகாதசிகள், சுக்ல பக்ஷத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியும் சேர்த்து இருபத்தைந்தாக கணக்கிடுகின்றனர்.

தை – பைலை , புத்ரா
மாசி – ஷட்திலா , ஐயர்
பங்குனி – விமலா , ஆமலகா
சித்திரை – பாபமோஹினி , காமதா
வைகாசி – வருதினி , மோஹினி
ஆனி – அபரா , நிர்கிலா
ஆடி – யோகினி , சயினி
ஆவணி – காமிகை , புத்திரதா
புட்டாசி – அஜா , பத்மநாபா
ஐப்பசி – இந்திரா , பாபங்குசா
கார்த்திகை – ரமாபிரம , போதினி
மார்கழி – மோ , உத்பத்தி

-இருபத்தைந்தாவது ஏகாதசி “கமலா”

ஏகாதசி விரத பயன்

இவ்விரத மகிமையால் நாம் செய்த பாபங்கள் அனைத்தும் நிவர்த்தியாகிறது. இந்த ஏகாதசி விரதங்களையும் பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிப்பது ஆரோக்கிய ஐசுவரிய சகல சம்பத்தும் எளிதில் சித்தி பெறுவதற்கு ஏற்ற சக்தியைத் தரும் மார்க்கங்களாக விளங்குகின்றன. ஆனி மாதம் வருகின்ற நீர்கிலா ஏகாதசியில் விரதம் அனுஷ்டிப்பதால், மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *