மாசி மகம் | masi magam in tamil
மாசி மகம்
மாசி மாதத்திலே வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய புண்ணிய காலம் மாசி மகம் எனப்படும். முன் ஒரு காலத்தில் ஓர் கொடிய அரசனை வெல்வதற்கு உபாயம் கேட்டு வந்தவரை புகைவன் என நினைத்து வருனன் தன் பாசத்தை அவன் மேல் வீசி இறக்க செய்தான். இத்தவறான செய்கையினால் வருனன் சமுத்திரத்தின் உள்ளே நெடுங்காலம் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
மண் உலகத்தாரும் விண் உலகத்தாரும் சிவபெருமானிடம் வருனனின் துன்பத்தை நீக்கி அருள பிராத்தித்தனர். மாசி மாதம் மக நட்சத்திர தினத்தில் வருனனின் துன்பத்தை நீக்கி அருள் செய்தார் சிவபெருமான் ஆகவே இத்தினத்தில் சமுத்திரத்தில் நீராடினால் துன்பம், பாவங்கள் நீங்கும். மாசி மகதினத்திலே சமுத்திரத்தில் நீராடுபவர்களுக்கு இறைவன் பாவத்தை நீக்கி அவர்களுக்கு முக்தியை கொடுத்து அருளுவதாக ஐதீகம்.
மாசி மகம் சிறப்பு
மாசி மகத்தில் குரு சிம்ம ராசியில் சேரும் காலம் புண்ணிய காலமாக கருதப்படுகிறது. இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழ்கிறது. செய்த பாவங்களை போக்கிக் கொள்ள புண்ணிய க்ஷேத்திரம் காசிக்கு செல்வோம் என்பர். காசியில் உள்ளவரே பாவம் செய்தால்
“காசி க்ஷேத்ரேகுருதம் பாபம் கும்பகோனே விநச்யாதி” காசியிலே இருக்கிறவர் பாவம் செய்தால் கும்பகோணத்திற்கு போனால் தான் போகும்.
“கும்பகோணக்ருதம் பாபம் கும்பகோணே விநச்யாதி” கும்பகோணத்தில் செய்யும் பாவம் கும்பகோணத்தில் தான் போக வேண்டும் என்று பரமாச்சாரியர்கள் கூறுவார்கள். எனவே பாபவிமோசன தலமான கும்பகோணத்தில் இருக்கும் மகாமக தெப்ப குளத்தில் மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியில் சேரும் காலமான மகாமக தினத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் அனைத்திற்கும் விமோசனம் கிட்டும்.