விழாக்கள்

வரம் தரும் நவராத்திரி சிறப்பு

நவராத்திரி சிறப்புகள்

புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி, சக்தியை வழிபட தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி, சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரத நவராத்திரி எனப்படும். பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை தசரா என்று அழைப்பர்.

நவராத்திரி 9 நாள் வழிபாடு விளக்கம்

முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் “துர்கை வழிபாடு” அடுத்த மூன்று நாட்கள் “லட்சுமி வழிபாடு இறுதி மூன்று நாட்கள் “சரஸ்வதி வழிபாடு” என்று வழிபடுவது நன்று. துர்கை, மகிஷன் என்ற எருமை தலை வடிவம் கொண்ட அரகன் உடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இதையே நவராத்திரி என்றும் அவனை வதம் செய்த பத்தாம் நாள் விஜயதசமி என்றும் கூறுகிறது. மகிஷனை வதைத்ததால் மகிஷா ‘சுரமர்த்தினி” என்ற பெயர் பெற்றுள்ளாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *