சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி சனிக்கிழமை விரதம் சிறப்பு
திங்களுக்கு ஈஸ்வரன், செவ்வாய் முருகன், வியாழன் குரு, வெள்ளியன்று சக்திக்கு உகந்த தினம், சனிக் கிழமை திருமாலுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. விஷ்ணு பகவான் சனிக்கு அதிபர்.பகவான் வழிப்படுவோருக்கு எல்லாத் துன்பங்களை போக்கி நீண்ட ஆயுளை தருவார். சனியை போல் கெடுப்பவரும் இல்லை. கொடுப்பவரும் இல்லை. ஆகவே சனிக்கிழமையன்று சனிக்கு அதிபதியான . திருமாலை வணங்குவது மிகச்சிறந்தது ஆகும். ஆகவே, சூரியன் தெற்கு பக்கமாக சாய்ந்து சஞ்சரிக்கும் காலமான தட்சணாயன காலத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் திருமாலை வணங்குவது மிகவும் சிறந்தது ஆகும்.
மக்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி ஸ்ரீவெங்கடாஜலபதியை வணங்குதலை வழக்கமாக கொண்டுள்ளனர்