பக்தி பாடல்கள்விநாயகர் பாடல்கள்

ஸ்ரீகணேச புஜங்கம் பாடல் வரிகள் – Sri Ganesa Bhujangam lyrics

ஸ்ரீகணேச புஜங்கம்

ஆதிசங்கரரால் பாடப்பட்ட ஸ்ரீ கணேச புஜங்கம் பாடல் மூலம் விநாயகனின் அருள் பெறலாம் விநாயகனை தரிசிக்கும்போது கணேச பூஜை பாடுபவர்களுக்கு அனைத்து நன்மையும் தரும்-“கணகணவென ஒலிசெய்மணி இசை “.

Sri Ganesa Bhujangam lyrics

கவினுறு கற்பகக் கணபதி களிப்பவர் 
மனநிறை மதகரி இருசெவி முறமென
மகிழ்வுறு தாண்டவம் ஏற்புற நடிப்பவர் 
பெருவயி றதனிடை அரவினை அணியென
பெருமையில் உரிமையில் அருமையா யணிபவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 1

ஒலியில்வலிபெறும் தெளிவுறு வீணையின்
ஒலியினை ஒடுக்கிய மலர்முகம் உடையவர்
நவமுடன் சிறிதசை துதிக்கையின் நுனியில்
உளநிறை மாதுளங் கனியினை உடையவர்
புழை செவி வழிகிற மதமழை நறுமணம்
புணர்மகிழ் வண்டினப் பெருந்தொகை உடையவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 2

இளங்கதிர் செம்மலர் இனைவுறு செம்மணி
துலங்கிய பூந்தளிர் அனைய நல் ஒளியினர்
விளங்கிய ஒருதனி தானெனத் தனித்தவர்
இலங்கிடு பெருவயிறொருபுடை சாய்ந்துபின்
வரம்தரத் தொங்கிட வளை துதிக்கையொடு
திறம்பெறு ஒருகோடுடையவர் கணபதி 
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 3

பலபல ஒளிபெறு மணிநிறை புனைவுறு
வளமுடை மகுடமும் வளமுடன் அணிபவர்
நலமுடை மௌலியில் மதியதன் கலையினை
அழகென அணியென அழகினுக் கழகெனத்
துலங்கியே பிறவித் தொடர்பினை அழித்திட
விளங்கிய காரண விளைவெனவானவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 4

உயர்வுறத் தூக்கிய கொடியெனத் திகழ்வுறு
ஒளிர்துதிக் கையதன் ஆதியில் இலகுறும் 
அயர்வறு புருவ அசைவினில் அழகிய
மகிர்வருள் இணைவிழி மல்கிய பெருமையர்
துயரறு தேவதைத் தோகையர் சாமரம்
துணைகொடு வழிபடும் தூயநற் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 5

பலமுறைதுடிதுடித் தசைவுறும் கண்ணினை
வலமுற சிவந்திடும் வடிவழகுடையவர்
நலமுறு தயைமுதல் மென்மையும் பெருங்குணம்
இலகிய பலவிதப் பிறவிகள் உடையவர்
உறவென அறமென உரியபல்லீலைகள்
புரிபவர் யோகியர் துதி செய்யும் கணபதி
ஓமெனும் ஓங்காரத் துட்பொருள் ஆனவர்
ஏமமாம் சிவகணத் தலைவரைத் துதிக்கின்றேன். 6

ஓங்காரவடிவமே தானெனும் தூயவர்
மாறுபாடற்றவர் முக்குணம்
நீங்கிய ஆனந்த வடிவமே தன்னுரு
நேர்ந்து வேறோரு வற்றவர் யாவரும்
ஏங்கியே அடைந்திடும் சிறப்பிடம் இதுவென
எண்ணிலா வேதமும் தோற்றிய காரணர்
பாங்குடன் தொன்மையும் திறமையும் கொண்டவர்
பண்பாளார் போற்றிடும் அவரையே துதிக்கின்றேன். 7

பேரறிவானந்த அமைதியும் உடையவ!
பேசறு அரன்மகன் ஆன எம் இறைவா!
வீறுகொள் லீலைகள் அளவில புரிபவா!
வேறிலை தானென விளங்கிடும் அரியவ!
நீறென உலகழித் தளித்திடும் கருணையே!
நேர்ந்த இவ்வுலகிதன் ஆணியாம் பெரியவ!
மாறிலா மனதுடன் மதகளி உன்றனை
மனமொழி மெய்கொடு வணங்கினேன்!அருளுக! 8

எங்கனும் நிறைந்தவர் ஈசனின் மகனிவர்
பொங்கிய கருணையர் புகழ்விழை விதனையே
மங்களக் கதிரொளி பரவிடு காலையில்
மனமொழி மெய்களால் துதிப்பவர் எவர்க்கும்
பொங்கிடும் புனலென வாக்கது வாய்க்கும்
புரிந்திடும் வினைவலம் பொலிந்திடும் உண்மை
தங்கியே அருள் தரக் கணபது இருக்கத்
தரணியில் பெறமுடியாததும் உண்டோ! 9

                         - ஆதிசங்கரர்